1. {பிடிவாதமுள்ள இஸ்ரயேல்} [PS] “யாக்கோபின் குடும்பத்தாரே, இதைக் கேளுங்கள். [QBR2] இஸ்ரயேலின் பெயரால் அழைக்கப்படுகிறவர்களே, [QBR2] யூதாவின் வம்சத்திலிருந்து வந்தவர்களே, [QBR] யெகோவாவின் பெயரினால் ஆணையிடுகிறவர்களே, கேளுங்கள்; [QBR2] நீங்கள் இஸ்ரயேலின் இறைவனை வழிபடுகிறவர்கள்; [QBR2] ஆயினும், நீங்கள் உண்மையுடனும், நீதியுடனும் அப்படிச் செய்யவில்லை. [QBR]
2. நீங்கள் உங்களைப் பரிசுத்த நகரத்தின் குடிமக்களென்று சொல்லி, [QBR2] இஸ்ரயேலின் இறைவனைச் சார்ந்திருக்கிறீர்கள்; [QBR2] சேனைகளின் யெகோவா என்பது அவரது பெயர். [QBR]
3. முற்காலத்துக் காரியங்களை முன்கூட்டியே நான் உங்களுக்கு முன்னறிவித்தேன்; [QBR2] எனது வாய் அவைகளை அறிவித்தது, நானே அவைகளைத் தெரியப்படுத்தினேன். [QBR2] பின்பு திடீரென நான் செயலாற்ற அவை நிறைவேறிற்று. [QBR]
4. நீ எவ்வளவு பிடிவாதமுள்ளவனாயிருந்தாய் என்றும், [QBR2] உன் கழுத்தின் தசைநார் இரும்பு என்றும், [QBR2] உன் நெற்றி வெண்கலமென்றும் நான் அறிந்திருந்தேன். [QBR]
5. ஆகையால் அவைகளை வெகுகாலத்திற்கு முன்னமே உனக்கு அறிவித்தேன்; [QBR2] அவை நடைபெறும் முன்பே அவைகளை உனக்குக் கூறினேன். [QBR] ஆதலால், ‘எனது விக்கிரகங்களே இவற்றைச் செய்தன; [QBR2] எனது மரச்சிலையும், உலோகச் சிலையுமே இவற்றைத் திட்டமிட்டன’ [QBR2] என்று நீ சொல்லமுடியாது. [QBR]
6. இவற்றை நீ கேட்டிருக்கிறாய்; இவை எல்லாவற்றையும் கவனி. [QBR2] இவற்றை நீ அறிவிக்கமாட்டாயோ? “இதுமுதல் புதிய காரியங்களை நான் உனக்குச் சொல்வேன், [QBR2] இவைகளோ நீ அறியாத மறைவான காரியங்கள். [QBR]
7. அவை வெகுகாலத்திற்கு முன்பு அல்ல, இப்பொழுதுதான் உருவாக்கப்படுகின்றன; [QBR2] நீ இதற்குமுன் அவைகளைப்பற்றிக் கேள்விப்பட்டிருக்கவில்லை. [QBR] ஆகவே, ‘ஆம், நான் அவைகளை அறிந்திருந்தேன்’ [QBR2] என்று உன்னால் சொல்லமுடியாது. [QBR]
8. நீ கேள்விப்படவுமில்லை, அறியவுமில்லை; [QBR2] முந்திய காலத்திலிருந்தே உன் செவிகள் திறக்கப்பட்டிருக்கவில்லை. [QBR] நீ எவ்வளவு துரோகி, [QBR2] பிறப்பிலிருந்தே நீ கலகக்காரன்; இதை நான் நன்கு அறிவேன். [QBR]
9. நான் என் பெயரின் நிமித்தமாகவே எனது கடுங்கோபத்தைத் தாமதமாக்குகிறேன்; [QBR2] எனது புகழ்ச்சியின் நிமித்தமாகவே உன்னில் பொறுமையாயிருக்கிறேன்; [QBR2] நீ அழிந்துபோகாதபடிக்கு எனது கோபத்தை உன்மேல் வரவிடாதிருக்கிறேன். [QBR]
10. இதோ, நான் உன்னைப் புடமிட்டுச் சுத்திகரித்தேன், ஆயினும் வெள்ளியைப்போலல்ல; [QBR2] உபத்திரவத்தின் சூளையிலே உன்னைச் சோதித்துப்பார்த்தேன். [QBR]
11. என் நிமித்தமாக, என் நிமித்தமாகவே இதை நான் செய்கிறேன். [QBR2] என் பெயர் களங்கப்பட நான் எப்படி இடமளிப்பேன்? [QBR2] என் மகிமையை நான் வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்.
12. {இஸ்ரயேலுக்கு சுதந்திரம்} [PS] “யாக்கோபே, நான் அழைத்த இஸ்ரயேலே, [QBR2] எனக்குச் செவிகொடு, [QBR] நானே அவர்; [QBR2] ஆரம்பமும் முடிவும் நானே. [QBR]
13. என் சொந்தக் கரமே பூமியின் அஸ்திபாரங்களை அமைத்தது; [QBR2] என் வலதுகரம் வானங்களை விரித்தது; [QBR] நான் அவைகளை அழைப்பிக்கின்றபோது, [QBR2] அவை ஒன்றாய் எழுந்து நிற்கும்.
14. “நீங்கள் எல்லோரும் ஒன்றாய் கூடிவந்து, நான் சொல்வதைக் கேளுங்கள்: [QBR2] உங்கள் விக்கிரகங்களில் எது இந்தக் காரியங்களை முன்னறிவித்தது? [QBR] யெகோவாவுக்குப் பிரியமானவன் [QBR2] அவருடைய நோக்கத்தை, பாபிலோனுக்கு விரோதமாக நிறைவேற்றுவான்; [QBR2] அவனுடைய கை பாபிலோனியர்களுக்கு விரோதமானதாகவே இருக்கும். [QBR]
15. நான், நானே பேசினேன்; [QBR2] மெய்யாகவே நான் அவனை அழைத்தேன். [QBR] நான் அவனைக் கொண்டுவருவேன், [QBR2] அவன் தன்னுடைய பணியில் வெற்றிபெறுவான். [PE][PS]
16. “நீங்கள் என் அருகே வந்து இதைக் கேளுங்கள்: [QBR] “முதல் அறிவிப்பிலிருந்தே நான் இரகசியமாய்ப் பேசவில்லை; [QBR2] அது நடைபெற்ற காலத்தில் நான் அங்கு இருக்கிறேன்.” இப்பொழுது ஆண்டவராகிய யெகோவா தமது [QBR2] ஆவியானவருடன் என்னை அனுப்பியிருக்கிறார்.
17. யெகோவா சொல்வது இதுவே, [QBR2] இஸ்ரயேலரின் பரிசுத்தராகிய உங்கள் மீட்பர் சொல்கிறதாவது: [QBR] “உங்கள் இறைவனாகிய யெகோவா நானே, [QBR2] மிக நன்மையானவற்றை உங்களுக்குக் போதிக்கிறவர் நானல்லவா? [QBR2] நீங்கள் போகவேண்டிய பாதையில் உங்களை வழிநடத்துகிறவர் நானல்லவா? [QBR]
18. என்னுடைய கட்டளைகளுக்கு நீங்கள் கவனம் செலுத்தியிருந்தால், [QBR2] உங்களுடைய சமாதானம் நதியைப்போல் இருந்திருக்கும்; [QBR2] உங்களுடைய நீதி கடலின் அலைகளைப்போல இருந்திருக்கும். [QBR]
19. உங்கள் சந்ததிகள் மணலைப்போல் இருந்திருப்பார்கள்; [QBR2] உங்களுடைய பிள்ளைகள் அந்த மணலின் எண்ணற்ற துகள்களைப்போல இருந்திருப்பார்கள்; [QBR] அவர்களுடைய பெயர்கள் என் முன்னிலையில் இருந்து நீங்காமலும், [QBR2] அழிக்கப்படாமலும் இருந்திருக்கும்.”
20. பாபிலோனைவிட்டு வெளியேறுங்கள், [QBR2] பாபிலோனியர்களை விட்டுத் தப்பியோடுங்கள்! [QBR] ஆனந்த சத்தமிட்டு அதை அறிவித்துப் [QBR2] பிரசித்தப்படுத்துங்கள்! [QBR] யெகோவா தனது பணியாளன் யாக்கோபை மீட்டிருக்கிறார் என்று சொல்லி, [QBR2] அந்தச் செய்தியைப் பூமியின் கடைசி எல்லைவரை அனுப்புங்கள்; [QBR]
21. அவர் அவர்களை பாலைவனத்தின் வழியாக வழிநடத்தியபோது, அவர்கள் தாகமடையவில்லை; [QBR2] அவர் அவர்களுக்காக கற்பாறையிலிருந்து தண்ணீரைப் பாயச்செய்தார். [QBR] அவர் பாறையைப் பிளந்தார், [QBR2] தண்ணீர் பொங்கி வழிந்தது.
22. “கொடுமையானவர்களுக்கு சமாதானம் இல்லை” என்று யெகோவா சொல்கிறார். [PE]