1. {#1பாபிலோனின் வீழ்ச்சி } [QS]“பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள். [QE][QS2]கல்தேயரின் மகளே, [QE][QS]அரியணை அற்றவளாய் [QE][QS2]தரையில் உட்கார்ந்துகொள். [QE][QS]நீ இனி மிருதுவானவள் என்றோ மென்மையானவள் [QE][QS2]என்றோ அழைக்கப்படுவதில்லை. [QE]
2. [QS]திரிகைக் கற்களை எடுத்து மாவரை; [QE][QS2]உனது முக்காட்டை எடுத்துவிடு. [QE][QS]உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி, [QE][QS2]நீரோடைகளைக் கடந்துபோ. [QE]
3. [QS]உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்; [QE][QS2]உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும். [QE][QS]நான் பழிவாங்குவேன்; [QE][QS2]நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.” [QE][PBR]
4. [QS]இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்; [QE][QS2]சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர். [QE][PBR]
5. [QS]“பாபிலோனியர்களின் மகளே, [QE][QS2]இருளுக்குள் போய் மவுனமாய் அமர்ந்திரு; [QE][QS]நீ இனி ஒருபோதும் [QE][QS2]அரசுகளுக்கு அரசி என அழைக்கப்படமாட்டாய். [QE]
6. [QS]நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு [QE][QS2]எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை [QE][QS]தூய்மைக்கேடு அடையச் செய்தேன். [QE][QS2]அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்; [QE][QS]நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை, [QE][QS2]முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய். [QE]
7. [QS]‘தொடர்ந்து நான் என்றென்றும் [QE][QS2]அரசியாக நிலைத்திருப்பேன்!’ என்று நீ சொன்னாய். [QE][QS]ஆனால் நீ இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கவுமில்லை; [QE][QS2]என்ன நடக்குமென நீ எண்ணிப்பார்க்கவுமில்லை. [QE][PBR]
8. [QS]“இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே, [QE][QS2]நீ பாதுகாப்பாக சொகுசாக இருந்து, [QE][QS]‘நானே பெரும் அரசி, எனக்கு நிகர் யாரும் இல்லை. [QE][QS2]நான் விதவையாகவோ, [QE][QS]அல்லது பிள்ளைகளை இழந்து துன்பப்படுகிறவளாகவோ ஆகமாட்டேன்’ [QE][QS2]என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய். [QE]
9. [QS]இவை இரண்டும் ஒரே நாளில், [QE][QS2]ஒரே நேரத்தில் உன்னை மேற்கொள்ளும்: [QE][QS2]நீ பிள்ளைகளை இழந்து, விதவையாவாய். [QE][QS]உனக்கு எண்ணற்ற மந்திர வித்தைகள் தெரிந்தும், [QE][QS2]வசீகர சக்திகள் இருந்தும் [QE][QS2]அவை முழுமையாக உன்மேல் வரும். [QE]
10. [QS]நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து, [QE][QS2]‘ஒருவரும் என்னைக் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கிறாய். [QE][QS]நீ உன் உள்ளத்தில் [QE][QS2]‘நான்தான், எனக்கு நிகர் யாருமே இல்லை’ என்று சொல்லும்போது, [QE][QS2]உன் ஞானமும் உன் அறிவும் உன்னைத் தவறான வழியில் நடத்துகின்றன. [QE]
11. [QS]பேராபத்து உன்மேல் வரும், [QE][QS2]அதை மந்திர வித்தையால் எப்படி அகற்றுவது என நீ அறியமாட்டாய்; [QE][QS]உன்மேல் பெரும் துன்பம் வரும், [QE][QS2]எதை ஈடாகக் கொடுத்தும் அதை உன்னால் தவிர்த்துக் கொள்ளமுடியாது. [QE][QS]நீ முன்னதாகவே அறிந்துகொள்ள முடியாத [QE][QS2]ஒரு பேரழிவு உன்மேல் திடீரென வரும். [QE][PBR]
12. [QS]“நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு, [QE][QS2]பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு; [QE][QS2]இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய். [QE][QS]அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம், [QE][QS2]ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம். [QE]
13. [QS]நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது; [QE][QS2]உன்னுடைய சோதிடர்களும் [QE][QS]நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி, [QE][QS2]உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும். [QE]
14. [QS]உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்; [QE][QS2]நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். [QE][QS]நெருப்புச் சுவாலையிலிருந்து [QE][QS2]தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது. [QE][QS]அது குளிர்காயக்கூடிய தணலாகவோ, [QE][QS2]அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது. [QE]
15. [QS]உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த, [QE][QS2]மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே [QE][QS2]உனக்குச் செய்யமுடியும். [QE][QS]அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்; [QE][QS2]உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை. [QE]