1. {பாபிலோனின் வீழ்ச்சி} [PS] “பாபிலோனின் கன்னிப்பெண்ணே, நீ கீழேபோய் புழுதியில் உட்கார்ந்துகொள். [QBR2] கல்தேயரின் மகளே, [QBR] அரியணை அற்றவளாய் [QBR2] தரையில் உட்கார்ந்துகொள். [QBR] நீ இனி மிருதுவானவள் என்றோ மென்மையானவள் [QBR2] என்றோ அழைக்கப்படுவதில்லை. [QBR]
2. திரிகைக் கற்களை எடுத்து மாவரை; [QBR2] உனது முக்காட்டை எடுத்துவிடு. [QBR] உனது பாவாடைகளை உயர்த்தி, கால்களை வெறுமையாக்கி, [QBR2] நீரோடைகளைக் கடந்துபோ. [QBR]
3. உனது நிர்வாணம் வெளிப்படுத்தப்படும்; [QBR2] உன்னுடைய வெட்கம் திறந்து காட்டப்படும். [QBR] நான் பழிவாங்குவேன்; [QBR2] நான் ஒருவரையும் தப்பவிடமாட்டேன்.”
4. இஸ்ரயேலின் பரிசுத்தரே நமது மீட்பர்; [QBR2] சேனைகளின் யெகோவா என்பதே அவரது பெயர்.
5. “பாபிலோனியர்களின் மகளே, [QBR2] இருளுக்குள் போய் மவுனமாய் அமர்ந்திரு; [QBR] நீ இனி ஒருபோதும் [QBR2] அரசுகளுக்கு அரசி என அழைக்கப்படமாட்டாய். [QBR]
6. நான் எனது மக்களுடன் கோபங்கொண்டு [QBR2] எனது உரிமைச்சொத்தாய் இருக்கிறவர்களை [QBR] தூய்மைக்கேடு அடையச் செய்தேன். [QBR2] அவர்களை உனது கையில் ஒப்படைத்தேன்; [QBR] நீயோ அவர்களுக்கு இரக்கம் காட்டவில்லை, [QBR2] முதியோர்மேலும் மிகவும் பாரமான நுகத்தை வைத்தாய். [QBR]
7. ‘தொடர்ந்து நான் என்றென்றும் [QBR2] அரசியாக நிலைத்திருப்பேன்!’ என்று நீ சொன்னாய். [QBR] ஆனால் நீ இந்தக் காரியங்களைப் பற்றி சிந்திக்கவுமில்லை; [QBR2] என்ன நடக்குமென நீ எண்ணிப்பார்க்கவுமில்லை.
8. “இப்பொழுதோ ஒழுக்கங்கெட்டவளே, [QBR2] நீ பாதுகாப்பாக சொகுசாக இருந்து, [QBR] ‘நானே பெரும் அரசி, எனக்கு நிகர் யாரும் இல்லை. [QBR2] நான் விதவையாகவோ, [QBR] அல்லது பிள்ளைகளை இழந்து துன்பப்படுகிறவளாகவோ ஆகமாட்டேன்’ [QBR2] என்று உன் உள்ளத்தில் சொல்லிக்கொள்கிறாய். [QBR]
9. இவை இரண்டும் ஒரே நாளில், [QBR2] ஒரே நேரத்தில் உன்னை மேற்கொள்ளும்: [QBR2] நீ பிள்ளைகளை இழந்து, விதவையாவாய். [QBR] உனக்கு எண்ணற்ற மந்திர வித்தைகள் தெரிந்தும், [QBR2] வசீகர சக்திகள் இருந்தும் [QBR2] அவை முழுமையாக உன்மேல் வரும். [QBR]
10. நீ உனது கொடுமையில் நம்பிக்கையாயிருந்து, [QBR2] ‘ஒருவரும் என்னைக் காண்பதில்லை’ என்று சொல்லிக்கொள்கிறாய். [QBR] நீ உன் உள்ளத்தில் [QBR2] ‘நான்தான், எனக்கு நிகர் யாருமே இல்லை’ என்று சொல்லும்போது, [QBR2] உன் ஞானமும் உன் அறிவும் உன்னைத் தவறான வழியில் நடத்துகின்றன. [QBR]
11. பேராபத்து உன்மேல் வரும், [QBR2] அதை மந்திர வித்தையால் எப்படி அகற்றுவது என நீ அறியமாட்டாய்; [QBR] உன்மேல் பெரும் துன்பம் வரும், [QBR2] எதை ஈடாகக் கொடுத்தும் அதை உன்னால் தவிர்த்துக் கொள்ளமுடியாது. [QBR] நீ முன்னதாகவே அறிந்துகொள்ள முடியாத [QBR2] ஒரு பேரழிவு உன்மேல் திடீரென வரும்.
12. “நீ தொடர்ந்து உன் மந்திரங்களைச் சொல்லு, [QBR2] பலவிதமான உன் மாந்திரீக வேலைகளில் ஈடுபடு; [QBR2] இதைத்தான் உன் சிறுவயதிலிருந்தே நீ செய்கிறாய். [QBR] அதனால் ஒருவேளை நீ வெற்றி பெறலாம், [QBR2] ஒருவேளை நீ பயங்கரத்தைக் கொண்டுவரலாம். [QBR]
13. நீ பெற்றுக்கொண்ட ஆலோசனை எல்லாம் உனக்குச் சோர்வையே உண்டாக்கியது; [QBR2] உன்னுடைய சோதிடர்களும் [QBR] நட்சத்திரங்களைப் பார்த்து, மாதந்தோறும் இராசிபலன் கூறுகிறவர்களும் எழும்பி, [QBR2] உனக்கு நேரிடப் போவதிலிருந்து உன்னைக் காப்பாற்றட்டும். [QBR]
14. உண்மையாகவே அவர்கள் அறுவடை செய்த பயிரின் தாளடியைப்போல் இருக்கிறார்கள்; [QBR2] நெருப்பு அவர்களைச் சுட்டெரிக்கும். [QBR] நெருப்புச் சுவாலையிலிருந்து [QBR2] தங்களையே விடுவித்துக்கொள்ள அவர்களால் முடியாது. [QBR] அது குளிர்காயக்கூடிய தணலாகவோ, [QBR2] அருகில் உட்காரத்தக்க நெருப்பாகவோ இருக்காது. [QBR]
15. உன் சிறுவயதுமுதல் நீ ஈடுபட்டுத் தொடர்புகொண்டிருந்த, [QBR2] மந்திரவாதிகளினால் இவற்றை மட்டுமே [QBR2] உனக்குச் செய்யமுடியும். [QBR] அவர்களில் ஒவ்வொருவனும் தனது தவறான வழியிலேயே போகிறான்; [QBR2] உன்னைக் காப்பாற்றக் கூடியவன் எவனுமே இல்லை. [PE]