1. {#1பாபிலோனின் தெய்வங்கள் } [QS]பேல்[* பேல் பாபிலோனின் பிரதான கடவுள்களில் ஒன்று. அது மர்துக் என்றும் அழைக்கப்படும். நேபோ மற்றொன்று; அது மர்துக்கின் மகன். ] தெய்வம் தலை கவிழ்கிறது; [QE][QS2]நேபோ தெய்வம் குப்புற விழுகிறது. [QE][QS]அவர்களுடைய விக்கிரகங்கள் சுமை சுமக்கும் மிருகங்களால் கொண்டு செல்லப்படுகின்றன; [QE][QS2]ஊர்வலத்தில் சுமக்கப்பட்ட அந்த விக்கிரகங்கள் [QE][QS2]இப்பொழுது களைத்துப்போன மிருகங்களுக்கு மிகவும் பாரமாயிருக்கின்றன. [QE]
2. [QS]அவை ஒன்றாய் குப்புற விழுகின்றன. [QE][QS2]அந்த உருவச்சிலைகள் தங்களைச் சுமக்கும் மிருகங்களைத் தப்புவிக்கும் ஆற்றலின்றி [QE][QS2]தாங்களும் சிறைப்பட்டுப் போகின்றன. [QE][PBR]
3. [QS]“யாக்கோபின் குடும்பமே, இஸ்ரயேல் குடும்பத்தில் எஞ்சியிருப்பவர்களே, [QE][QS2]நீங்கள் அனைவரும் எனக்குச் செவிகொடுங்கள்; [QE][QS]நீங்கள் கருவில் உருவானதுமுதல் நான் உங்களைத் தாங்கினேன், [QE][QS2]நீங்கள் பிறந்ததுமுதல் நான் உங்களைச் சுமந்தேன். [QE]
4. [QS]நீங்கள் முதிர்வயது அடைந்து, உங்களுக்கு நரைமயிர் உண்டாகும் காலத்திலும், [QE][QS2]உங்களைத் தாங்கப்போகிறவர் நானே. [QE][QS]உங்களைப் படைத்த நானே உங்களைச் சுமப்பேன். [QE][QS2]நானே உங்களைத் தாங்குவேன், நானே உங்களைக் காப்பாற்றுவேன். [QE][PBR]
5. [QS]“என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? யாருக்கு சமமாக எண்ணுவீர்கள்? [QE][QS2]என்னை ஒப்பிடுவதற்கு யாரை எனக்கு ஒப்பிடுவீர்கள்? [QE]
6. [QS]சிலர் தங்கள் பைகளிலிருந்து தங்கத்தை அள்ளிக்கொட்டி, [QE][QS2]தராசுகளில் வெள்ளியை நிறுக்கிறார்கள்; [QE][QS]அதை ஒரு தெய்வமாகச் செய்யும்படி அவர்கள் ஒரு கொல்லனை கூலிக்கு அமர்த்துகிறார்கள்; [QE][QS2]பின் அவர்கள் தாழ்ந்து வீழ்ந்து அதை வணங்குகிறார்கள். [QE]
7. [QS]அதைத் தமது தோள்களில் தூக்கிச் சுமக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் அதை அதற்குரிய இடத்தில் வைக்கிறார்கள். [QE][QS2]அது அங்கேயே நிற்கிறது, அந்த இடத்திலிருந்து அதனால் நகரமுடியாது. [QE][QS]ஒருவன் அதை நோக்கி அழுதாலும் அது பதிலளிப்பதில்லை; [QE][QS2]ஒருவனை அவனுடைய துன்பங்களிலிருந்து காப்பாற்ற அதனால் இயலாது. [QE][PBR]
8. [QS]“கலகக்காரரே, இதை நினைவில்கொள்ளுங்கள். [QE][QS2]இதை மனதில் பதித்து வையுங்கள். [QE]
9. [QS]முந்தி நிகழ்ந்த பூர்வீகக் காரியங்களை நினைத்துப் பாருங்கள்; [QE][QS2]நானே இறைவன், வேறொருவர் இல்லை; [QE][QS2]நானே இறைவன், என்னைப்போல் ஒருவரும் இல்லை. [QE]
10. [QS]நான் ஆரம்பத்திலிருந்தே முடிவை அறிவிக்கிறவர், [QE][QS2]முற்காலங்களிலேயே வரப்போகிறதை அறிவிக்கின்றவர். [QE][QS]‘என் நோக்கம் நிலைநிற்கும்; [QE][QS2]நான் விரும்பிய எல்லாவற்றையும் நிறைவேற்றுவேன்’ என்று நான் சொல்கிறேன். [QE]
11. [QS]நான் கிழக்கிலிருந்து இரைதேடும் பறவையை அழைப்பிக்கின்றேன். [QE][QS2]தூரதேசத்திலிருந்து என் நோக்கத்தை நிறைவேற்றும் ஒரு மனிதனை அழைப்பிக்கின்றேன். [QE][QS]நான் என்ன சொன்னேனோ அதை நிறைவேற்றுவேன்; [QE][QS2]நான் எதைத் திட்டமிட்டேனோ அதைச் செய்வேன். [QE]
12. [QS]பிடிவாத இருதயமுள்ள நீதிக்குத் தூரமானவர்களே! [QE][QS2]எனக்குச் செவிகொடுங்கள். [QE]
13. [QS]நானே எனது நீதியை அருகில் கொண்டுவருகிறேன், [QE][QS2]அது வெகுதூரத்தில் இல்லை; [QE][QS2]எனது இரட்சிப்பு தாமதம் அடையாது. [QE][QS]நான் சீயோனுக்கு இரட்சிப்பையும், [QE][QS2]இஸ்ரயேலுக்கு எனது சிறப்பையும் கொடுப்பேன். [QE]