1. {#1தெரிந்துகொள்ளப்பட்ட இஸ்ரயேல் } [QS]“ஆனால் இப்பொழுதோ என் அடியவனாகிய யாக்கோபே, [QE][QS2]நான் தெரிந்துகொண்ட இஸ்ரயேலே, கேள். [QE]
2. [QS]யெகோவா சொல்வது இதுவே: [QE][QS2]உன்னை உண்டாக்கியவரும், உன்னைக் கருப்பையில் உருவாக்கியவரும், [QE][QS2]உனக்கு உதவிசெய்யப் போகிறவருமாகிய அவர் சொல்வதாவது: [QE][QS]என் அடியவனாகிய யாக்கோபே, [QE][QS2]நான் தெரிந்துகொண்ட யெஷூரனே[* யெஷூரனே என்பது இஸ்ரயேல் எனப்படும். ], பயப்படாதே. [QE]
3. [QS]நான் தாகமுள்ள நிலத்தில் தண்ணீரை ஊற்றுவேன்; [QE][QS2]வறண்ட நிலத்தில் நீரோடைகளை உண்டாக்குவேன். [QE][QS]உன் சந்ததியின்மேல் எனது ஆவியானவரையும், [QE][QS2]உன் பிள்ளைகள்மேல் என் ஆசீர்வாதத்தையும் ஊற்றுவேன். [QE]
4. [QS]அவர்கள் வெளிநிலத்திலுள்ள புல்லைப்போலவும், [QE][QS2]நீரோடைகளுக்கு அருகில் அலறிச்செடிகளைப் போலவும் விரைவாய் வளருவார்கள். [QE]
5. [QS]ஒருவன், ‘நான் யெகோவாவுக்கு உரியவன்’ என்பான்; [QE][QS2]வேறொருவன், தன்னை யாக்கோபின் பெயரால் அழைத்துக்கொள்வான்; [QE][QS]இன்னொருவன், தன் கையில், ‘கர்த்தருடையவன்’ என்று எழுதி, [QE][QS2]இஸ்ரயேல் என்று பெயரிட்டுக்கொள்வான். [QE]
6. {#1யெகோவாவே, விக்கிரகங்கள் அல்ல } [QS]“யெகோவா சொல்வது இதுவே: [QE][QS2]இஸ்ரயேலின் அரசரும், மீட்பருமாகிய சேனைகளின் யெகோவா கூறுவதாவது, [QE][QS]ஆரம்பமும் நானே, முடிவும் நானே; [QE][QS2]என்னையன்றி வேறு இறைவன் இல்லை [QE]
7. [QS]என்னைப்போல் யாரும் உண்டோ? [QE][QS2]அப்படியிருந்தால் அவன் அதைப் பிரசித்தம்பண்ணட்டும். [QE][QS2]அதை அறிவித்து எனக்குமுன் சொல்லட்டும், [QE][QS]முற்காலத்திலிருந்த என் மக்களை நான் நிலைநிறுத்திய காலத்திலிருந்து [QE][QS2]நடந்தவற்றையும் இனி என்ன நடக்கப்போகிறதையும் சொல்லட்டும். [QE][QS2]ஆம், நிகழப்போவதை அவன் முன்னறிவிக்கட்டும். [QE]
8. [QS]நடுங்காதீர்கள், பயப்படாதீர்கள். [QE][QS2]இதை நான் வெகுகாலத்துக்கு முன்பே பிரசித்தப்படுத்தி, அறிவிக்கவில்லையா? [QE][QS]நீங்கள் எனது சாட்சிகள். என்னைத்தவிர வேறு இறைவன் உண்டோ? [QE][QS2]இல்லை, வேறு கன்மலையும் இல்லை; அப்படி ஒருவரையும் நான் அறியேன்.” [QE][PBR]
9. [QS]விக்கிரங்களை உருவாக்குகிறவர்கள் எல்லோரும் வீணர்; [QE][QS2]அவர்கள் அருமையாகக் கருதுபவை பயனற்றவை. [QE][QS]அவைகளுக்காகப் பேசுபவர்களும் குருடர்; [QE][QS2]அவர்கள் தங்களை வெட்கமாக்கிக்கொள்ளும் அறிவீனர். [QE]
10. [QS]தனக்கு ஒருவித பயனையும் தராத தெய்வத்தின் சிலைகளைச் செதுக்கி, [QE][QS2]ஒரு விக்கிரகத்தை வார்ப்பிப்பவன் யார்? [QE]
11. [QS]அவனும் அவனைப் போன்றவர்களும் வெட்கம் அடைவார்கள்; [QE][QS2]அதைச் செய்யும் கைவினைஞர் மனிதரே. [QE][QS]அவர்கள் எல்லோரும் கூடிவந்து என்முன் நிற்கட்டும்; [QE][QS2]அவர்கள் எல்லோரும் பயங்கரத்திற்கும், அவமானத்துக்கும் உள்ளாவார்கள். [QE][PBR]
12. [QS]கொல்லன் இரும்பைக் குறட்டால் எடுத்து, [QE][QS2]கரி நெருப்பிலிட்டு உருக்கி, [QE][QS]சுத்தியலால் அடித்து விக்கிரகத்தை வடிவமைக்கிறான்; [QE][QS2]தன் கையின் பெலத்தினால் அதற்கு உருவத்தைக் கொடுக்கிறான். [QE][QS]பட்டினியினால் அவன் தன் பெலனை இழக்கிறான், [QE][QS2]தண்ணீரைக் குடிக்காமல் சோர்ந்துபோவான். [QE]
13. [QS]தச்சன் கோலினால் மரத்தை அளந்து, [QE][QS2]வெண்கட்டியால் குறியிடுகிறான். [QE][QS]அவன் அதை உளிகளினால் உருப்படுத்தி, [QE][QS2]கவராயத்தால் குறிக்கிறான். [QE][QS]அவன் மனிதனின் எல்லாச் சிறப்பையும் [QE][QS2]அதற்குக் கொடுத்து அதை மனித உருவில் வடிவமைக்கிறான்; [QE][QS2]அது ஒரு கோவிலில் இருக்கும்படியே இப்படிச் செய்கிறான். [QE]
14. [QS]அவன் கேதுரு மரங்களை வெட்டி வீழ்த்துகிறான், [QE][QS2]தேவதாரு மரங்களையும், கர்வாலி மரங்களையும் அவன் தனக்கென்று வைத்துக்கொள்கிறான். [QE][QS]அதை அவன் காட்டு மரங்களின் மத்தியில் வளர விடுகிறான்; [QE][QS2]அவன் சவுக்கு மரத்தை நாட்டுவான், மழை அதை வளரச் செய்கின்றது. [QE]
15. [QS]அது மனிதனுக்கு எரிபொருளாக இருக்கிறது; [QE][QS2]அவன் அவைகளில் ஒரு பகுதியை எடுத்து எரித்து குளிர்காய்கிறான், [QE][QS2]ஒரு பகுதியால் நெருப்புமூட்டி அப்பத்தை வேகவைக்கிறான். [QE][QS]ஆனால் இன்னொரு பகுதியால் ஒரு தெய்வத்தையும் செய்து அதை வழிபடுகிறான்; [QE][QS2]அவன் ஒரு விக்கிரகத்தையும் செய்து, அதற்குமுன் விழுந்து வணங்குகிறான். [QE]
16. [QS]மரத்தின் ஒரு துண்டை அவன் நெருப்பில் எரிக்கிறான்; [QE][QS2]அதின்மேல் தன் உணவைத் தயாரிக்கிறான், [QE][QS2]தன் இறைச்சியையும் வாட்டி, தான் திருப்தியாகச் சாப்பிடுகிறான். [QE][QS]அவன் அதில் குளிர்காய்ந்துகொண்டும், “ஆகா! இந்தச் சூடு இதமானது! [QE][QS2]அருமையான நெருப்பைக் காண்கின்றேன்” என்கிறான். [QE]
17. [QS]எஞ்சிய மரத்தின் பகுதியில் விக்கிரகமொன்றைத் தனது தெய்வமாகச் செய்கிறான்; [QE][QS2]அதற்குமுன் விழுந்து வழிபடுகிறான். [QE][QS]அதை வணங்கி, [QE][QS2]“நீயே என் தெய்வம், என்னைக் காப்பாற்று!” என்கிறான். [QE]
18. [QS]அவற்றிற்கு ஒன்றுமே தெரியாது, அவற்றிற்கு ஒன்றும் விளங்குவதில்லை; [QE][QS2]பார்க்க முடியாதபடி அவைகளின் கண்கள் மூடப்பட்டிருக்கின்றன; [QE][QS2]விளங்கிக்கொள்ளாதபடி அவைகளின் இருதயமும் அடைக்கப்பட்டு இருக்கின்றன. [QE]
19. [QS]“இம்மரத்தின் பாதியை நான் எரிபொருளாய் உபயோகித்தேன்; [QE][QS2]அதன் தணலின்மேல் ரொட்டியை வேகவைத்து, இறைச்சியையும் வாட்டிச் சாப்பிட்டேன். [QE][QS]அப்படியிருக்க, எஞ்சிய பகுதியினால் [QE][QS2]நான் அருவருக்கத்தக்க விக்கிரகத்தைச் செய்யலாமா? [QE][QS]ஒரு மரக்கட்டையின் முன்னால் நான் விழுந்து வணங்கலாமா?” [QE][QS2]என்று சொல்லுவதற்கு எவனுமே சிந்திப்பதில்லை. [QE][QS]அதற்கான அறிவோ, [QE][QS2]விளக்கமோ எவனிடத்திலும் இல்லை. [QE]
20. [QS]அவன் சாம்பலைத் தின்கிறான், அவனுடைய வஞ்சிக்கப்பட்ட இருதயம் [QE][QS2]அவனைத் தவறான வழியில் நடத்துகிறது. [QE][QS]அவன் தன்னைக் காப்பாற்றிக்கொள்ள இயலாது, [QE][QS2]“எனது வலதுகையில் இருக்கிற இந்த விக்கிரகம் பொய்” [QE][QS2]என்று சொல்லாமலும் இருக்கிறான். [QE][PBR]
21. [QS]“யாக்கோபே, இவற்றை நீ நினைவில் வைத்துக்கொள்; [QE][QS2]ஏனெனில் இஸ்ரயேலே, நீ என் அடியவன். [QE][QS]நான் உன்னைப் படைத்தேன், நீ என் அடியவன்; [QE][QS2]இஸ்ரயேலே, நான் உன்னை மறக்கமாட்டேன். [QE]
22. [QS]நான் உன் குற்றங்களை ஒரு மேகத்தைப் போலவும் [QE][QS2]உன் பாவங்களை காலை நேரத்து மூடுபனியைப் போலவும் அகற்றியிருக்கிறேன். [QE][QS]நீ என்னிடம் திரும்பி வா, [QE][QS2]ஏனெனில் நான் உன்னை மீட்டிருக்கிறேன்.” [QE][PBR]
23. [QS]வானங்களே, மகிழ்ந்து பாடுங்கள்; யெகோவாவே இதைச் செய்திருக்கிறார். [QE][QS2]கீழிருக்கும் பூமியே, உரத்த சத்தமிடு. [QE][QS]மலைகளே, காடுகளே, மரங்களே, [QE][QS2]குதூகலித்துப் பாடுங்கள். [QE][QS]ஏனெனில், யெகோவா யாக்கோபை மீட்டு, [QE][QS2]இஸ்ரயேலில் தனது மகிமையை வெளிப்படுத்துகிறார். [QE]
24. {#1எருசலேம் குடியிருக்க வேண்டும் } [QS]“உங்கள் மீட்பரும், உங்களை கருப்பையில் உருவாக்கியவருமான, [QE][QS2]யெகோவா சொல்வது இதுவே: [QE][PBR] [QS]“நானே யெகோவா, [QE][QS2]நான் எல்லாவற்றையும் படைத்தேன், [QE][QS2]நான் தனியாகவே வானங்களை விரித்து, [QE][QS2]பூமியையும் பரப்பினேன். [QE]
25. [QS]நானே கட்டுக்கதை சொல்பவர்கள் கூறும் அடையாளங்களை நிறைவேறாமல் செய்து, [QE][QS2]குறிசொல்வோரை மூடர்களாக்கி, [QE][QS]ஞானிகளின் அறிவை வீழ்த்தி, [QE][QS2]அவைகளை மூடத்தனமாக்குபவரும் நானே. [QE]
26. [QS]நானே எனது ஊழியர்களின் வார்த்தைகளை உறுதிபடுத்துகிறேன்; [QE][QS2]எனது தூதுவர்களின் ஆலோசனைகளை நிறைவேற்றுகிறேன். [QE][PBR] [QS]“எருசலேமைப்பற்றி, [QE][QS2]‘அது குடியிருப்பாக்கப்படும்’ என்றும் [QE][QS]யூதாவின் பட்டணங்களைப் பற்றி, [QE][QS2]‘அவை கட்டப்படும்’ என்றும், [QE][QS]அவர்களின் பாழிடங்களைப்பற்றி, [QE][QS2]‘நான் மீண்டும் அவைகளைக் கட்டுவேன்,’ என்றும் கூறுகிறேன், [QE]
27. [QS]நானே ஆழமான நீர்நிலைகளைப் பார்த்து, ‘வறண்டு போ, [QE][QS2]உனது நீரூற்றுகளை நான் வற்றப்பண்ணுவேன்’ என்று சொல்கிறேன். [QE]
28. [QS]நானே கோரேசைப்பற்றி, ‘அவன் எனது மேய்ப்பன்; [QE][QS2]எனது விருப்பம் எல்லாவற்றையும் நிறைவேற்றுவான், [QE][QS]அவன் எருசலேமைப்பற்றி, “அது திரும்பவும் கட்டப்படட்டும்” என்றும், [QE][QS2]ஆலயத்தைப்பற்றி, “அதன் அஸ்திபாரங்கள் போடப்படட்டும்” என்றும் சொல்லுவான்’ [QE][QS]என்று சொல்கிறேன்.” [QE][PBR] [PBR]