1. {#1யெகோவாவின் ஊழியர் } [QS]“இதோ, நான் ஆதரிக்கிற என் ஊழியர், [QE][QS2]என்னால் தெரிந்துகொள்ளப்பட்ட இவரில் நான் மகிழ்ச்சியாயிருக்கிறேன்; [QE][QS]இவர்மேல் என் ஆவியானவரை அமரப்பண்ணுவேன், [QE][QS2]அவர் நாடுகளுக்கு நீதியை வழங்குவார். [QE]
2. [QS]அவர் சத்தமிடவோ, சத்தமிட்டுக் கூப்பிடவோமாட்டார். [QE][QS2]அவர் வீதிகளில் உரத்த குரலில் பேசவுமாட்டார். [QE]
3. [QS]அவர் நெரிந்த நாணலை முறிக்கமாட்டார், [QE][QS2]மங்கி எரிகின்ற திரியை அணைத்துவிடவுமாட்டார்; [QE][QS]அவர் உண்மையில் நீதியை வெளிப்படுத்தி, அதை நிலைநாட்டுவார். [QE]
[QS2]4. பூமியிலே அவர் நீதியை நிலைநாட்டும்வரை [QE][QS]தயங்கவுமாட்டார் தளரவுமாட்டார். [QE][QS2]தீவுகள்[* பண்டைய உலகில் மக்கள் தொலைவில் இருந்த நாடுகளை தீவுகள் என்று அழைப்பார்கள். ] அவரது வேதத்தில் தங்கள் நம்பிக்கையை வைக்கும்.” [QE][PBR]
5. [QS]யெகோவாவாகிய இறைவன் சொல்வதாவது: [QE][QS]அவரே வானங்களைப் படைத்து அவைகளை விரித்து வைத்தார், [QE][QS2]அவரே பூமியையும், அதிலிருந்து வரும் அனைத்தையும் பரப்பினார். [QE][QS2]அவரே அதில் உள்ள மக்களுக்கு சுவாசத்தைக் கொடுத்தார். [QE][QS2]அதில் நடமாடுபவர்களுக்கு உயிரைக் கொடுத்தார். அவர் சொல்வது இதுவே: [QE]
6. [QS]“யெகோவாவாகிய நான் நீதியிலேயே உன்னை அழைத்து, [QE][QS2]நான் உனது கையைப் பிடித்து, [QE][QS]நான் உன்னைக் காத்து, [QE][QS2]நீர் மக்களுக்கு ஒரு உடன்படிக்கையாகவும், [QE][QS2]பிற நாட்டவர்களுக்கு ஒரு ஒளியாகவும் இருக்கும்படி உம்மை ஏற்படுத்துவேன். [QE]
7. [QS]குருடரின் கண்களைத் திறக்கவும், [QE][QS2]சிறையிலுள்ளவர்களை விடுதலையாக்கவும், [QE][QS2]இருட்டறையிலிருந்து விடுவிக்கவுமே இவ்வாறு செய்வேன். [QE][PBR]
8. [QS]“நான் யெகோவா; இதுவே எனது பெயர்! [QE][QS2]எனது மகிமையை வேறொருவருக்கும் கொடுக்கமாட்டேன்; [QE][QS2]எனக்குரிய துதியை விக்கிரகங்களுக்குக் கொடுக்கமாட்டேன். [QE]
9. [QS]இதோ, முற்காலத்தில் சொல்லப்பட்டவை நடந்தேறிவிட்டன, [QE][QS2]இப்பொழுது நான் புதியவற்றை அறிவிக்கின்றேன். [QE][QS]அவை தோன்றி உருவாகுமுன்பே அவைகளை [QE][QS2]நான் உங்களுக்கு அறிவிக்கிறேன்.” [QE]
10. {#1யெகோவாவுக்குத் துதிப்பாடல் } [QS]கடலில் பயணம் செய்கிறவர்களே, கடலில் வாழ்பவைகளே, [QE][QS2]தீவுகளே, அங்கு வாழும் குடிகளே, [QE][QS]யெகோவாவுக்கு புதுப்பாட்டைப் பாடுங்கள், [QE][QS2]பூமியின் கடைசிகளில் இருந்து அவருக்குத் துதி பாடுங்கள். [QE]
11. [QS]பாலைவனமும் அதன் பட்டணங்களும் தங்கள் குரல்களை எழுப்பட்டும்; [QE][QS2]கேதாரியர் வாழும் குடியிருப்புகள் மகிழட்டும். [QE][QS]சேலாவின் மக்கள் மகிழ்ந்து பாடட்டும்; [QE][QS2]அவர்கள் மலை உச்சிகளில் இருந்து ஆர்ப்பரிக்கட்டும். [QE]
12. [QS]அவர்கள் யெகோவாவுக்கு மகிமையைக் கொடுக்கட்டும், [QE][QS2]அவரின் துதியைத் தீவுகளில் பிரசித்தப்படுத்தட்டும். [QE]
13. [QS]யெகோவா வலிய மனிதனைப்போல் முன்சென்று, [QE][QS2]போர்வீரனைப்போல் தன் வைராக்கியங்கொண்டு எழும்புவார். [QE][QS]அவர் உரத்த சத்தமாய் போர்க்குரல் எழுப்பி, [QE][QS2]பகைவரை வெற்றிகொள்வார். [QE][PBR]
14. [QS]“நான் வெகுகாலம் மவுனமாய் இருந்தேன், [QE][QS2]நான் அமைதியாய் இருந்து என்னையே அடக்கிக்கொண்டிருந்தேன். [QE][QS]ஆனால் இப்பொழுது, பிரசவிக்கும் பெண்ணைப்போல் கதறி அழுது, [QE][QS2]மூச்சுத் திணறுகிறேன். [QE]
15. [QS]நான் மலைகளையும், குன்றுகளையும் பாழாக்குவேன், [QE][QS2]அவைகளிலுள்ள தாவரங்களையும் வாடிப்போகப் பண்ணுவேன். [QE][QS]ஆறுகளைத் தீவுகளாக மாற்றி, [QE][QS2]குளங்களையும் வற்றப்பண்ணுவேன். [QE]
16. [QS]நான் குருடரை அவர்கள் அறிந்திராத வழிகளில் வழிநடத்தி, [QE][QS2]அவர்களுக்குப் பழக்கமில்லாத பாதைகளில் அழைத்துச்செல்வேன்; [QE][QS]நான் இருளை அவர்களுக்கு முன்பாக வெளிச்சமாக்கி, [QE][QS2]கரடுமுரடான இடங்களைச் செப்பனிடுவேன். [QE][QS]நான் செய்யப்போகும் காரியங்கள் இவையே; [QE][QS2]நான் அவர்களை நான் கைவிடமாட்டேன். [QE]
17. [QS]ஆனால் விக்கிரகங்களில் நம்பிக்கை வைத்து, [QE][QS2]உருவச் சிலைகளைப் பார்த்து, ‘நீங்களே எங்கள் தெய்வங்கள்’ என்று சொல்பவர்கள் [QE][QS2]பின்னடைந்து முற்றுமாய் வெட்கப்படுவார்கள். [QE]
18. {#1குருடும் செவிடுமான இஸ்ரயேல் } [QS]“செவிடரே, கேளுங்கள்; [QE][QS2]குருடரே, கவனித்துப் பாருங்கள்! [QE]
19. [QS]எனது ஊழியனைவிடக் குருடன் யார்? [QE][QS2]நான் அனுப்பும் தூதுவனைவிடச் செவிடன் யார்? [QE][QS]எனக்குத் தன்னை அர்ப்பணித்தவனைப்போல் குருடன் யார்? [QE][QS2]யெகோவாவின் ஊழியனைப்போல் குருடன் யார்? [QE]
20. [QS]நீ பல காரியங்களைக் கண்டும் அதைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவில்லை. [QE][QS2]உன் காதுகள் திறந்திருந்தும் நீ ஒன்றையும் கேளாதிருக்கிறாய்.” [QE]
21. [QS]யெகோவா தன் நீதியின் நிமித்தம் [QE][QS2]தனது சட்டத்தைச் சிறப்பாகவும், [QE][QS2]மகிமையாகவும் செய்வதில் மகிழ்ச்சியடைந்தார். [QE]
22. [QS]ஆனால் இந்த மக்களோ கொள்ளையடிக்கப்பட்டு, சூறையாடப்பட்டும் இருக்கிறார்கள்; [QE][QS2]அவர்கள் எல்லோருமே குழிகளில் அகப்பட்டும், [QE][QS2]சிறைச்சாலைகளில் மறைக்கப்பட்டும் இருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் தம்மை விடுவிப்பாரின்றி [QE][QS2]கொள்ளைப் பொருளாகி, [QE][QS]“அவர்களைத் திருப்பி அனுப்புங்கள்” என்று சொல்வாரின்றி [QE][QS2]அவர்கள் சூறையாவார்கள். [QE][PBR]
23. [QS]உங்களில் எவன் இதற்குச் செவிகொடுப்பான்? [QE][QS2]எவன் வருங்காலத்தை கவனித்துக் கேட்பான்? [QE]
24. [QS]யாக்கோபை சூறைப்பொருளாகக் கொடுத்தது யார்? [QE][QS2]இஸ்ரயேலை கொள்ளைக்காரருக்கு ஒப்படைத்தது யார்? [QE][QS]யெகோவா அல்லவா இதைச் செய்தார், [QE][QS2]நாமோ அவருக்கு எதிராகப் பாவம் செய்தோமே. [QE][QS]ஏனென்றால் அவர்கள் அவரின் வழிகளைப் பின்பற்றவில்லை, [QE][QS2]அவரது சட்டத்திற்குக் கீழ்ப்படியவுமில்லை. [QE]
25. [QS]ஆகையால் அவர் தனது பற்றியெரியும் கோபத்தையும், [QE][QS2]போரின் வன்செயலையும் அவர்கள்மேல் ஊற்றினார். [QE][QS]அது அவர்களை நெருப்புச் சுவாலைகளினால் சூழ்ந்துகொண்டும், [QE][QS2]அதை அவர்கள் விளங்கிக்கொள்ளவில்லை. [QE][QS]அது அவர்களைச் சுட்டெரித்தது, [QE][QS2]ஆனால் அதை அவர்கள் மனதில் கொள்ளவில்லை. [QE]