1. {இறைவனின் மக்களுக்கு ஆறுதல்} [PS] என் மக்களை ஆற்றுங்கள், தேற்றுங்கள், [QBR2] என உங்கள் இறைவன் சொல்கிறார். [QBR]
2. எருசலேமுடன் தயவாகப் பேசுங்கள், [QBR2] அவளிடம், “அவளது கடும் உழைப்பு முடிவடைந்தது; [QBR] அவளுடைய பாவத்திற்கு நிவாரணம் கொடுத்து முடிந்துவிட்டது; [QBR2] அவள் தனது எல்லா பாவங்களுக்காகவும் [QBR] இரட்டிப்பான தண்டனையை யெகோவாவின் கரங்களிலிருந்து [QBR2] அனுபவித்து விட்டாள்” என்று அவளுக்குப் பிரசித்தப்படுத்துங்கள்.
3. ஒருவரின் குரல் கூப்பிடுகிறது: [QBR] “பாலைவனத்தில் யெகோவாவுக்கு [QBR2] வழியை ஆயத்தப்படுத்துங்கள்; [QBR] வனாந்திரத்திலே நமது இறைவனுக்கு [QBR2] பிரதான வீதியொன்றை நேராய் அமையுங்கள். [QBR]
4. ஒவ்வொரு பள்ளத்தாக்கும் உயர்த்தப்படும், [QBR2] ஒவ்வொரு மலையும் குன்றும் தாழ்த்தப்படும், [QBR] மேடுபள்ளம் நிறைந்த நிலம் சமமாக்கப்படும், [QBR2] கரடுமுரடான இடங்கள் சீராக்கப்படும். [QBR]
5. யெகோவாவின் மகிமை வெளிப்படுத்தப்படும்; [QBR2] மனுக்குலம் யாவும் ஒன்றாய் அதைக் காணும். [QBR] யெகோவாவின் வாயே இதைப் பேசியிருக்கிறது.”
6. “உரத்துச் சொல்” என்கிறது ஒரு குரல். [QBR2] அதற்கு, “நான் எதைச் சொல்லுவேன்?” என்றேன். “எல்லா மனிதரும் புல்லைப் போன்றவர்கள், [QBR2] அவர்களின் மகிமை எல்லாம் வயல்வெளியின் பூக்களைப் போன்றன. [QBR]
7. யெகோவாவின் சுவாசம் அவைகளின்மேல் வீசுகிறபோது புல் வாடுகிறது, [QBR2] பூக்களும் உதிர்கின்றன; [QBR2] நிச்சயமாக மக்களும் புல்லாகவே இருக்கிறார்கள். [QBR]
8. புல் வாடுகிறது, பூக்கள் உதிர்கின்றன, [QBR2] ஆனால், நமது இறைவனின் வார்த்தையோ என்றென்றும் நிலைத்து நிற்கிறது.”
9. சீயோனுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, [QBR2] நீ உயர்ந்த மலையொன்றில் ஏறு. [QBR] எருசலேமுக்கு நற்செய்தி கொண்டுவருபவனே, [QBR2] நீ குரலை எழுப்பிக் கூக்குரலிடு. [QBR] பயப்படாதே, குரலை எழுப்பு; [QBR2] “இதோ உங்கள் இறைவன்!” [QBR2] என்று யூதாவின் பட்டணங்களுக்குச் சொல். [QBR]
10. இதோ, ஆண்டவராகிய யெகோவா வல்லமையோடு வருகிறார்; [QBR2] அவருடைய புயமே அவருக்காக ஆளுகை செய்யும். [QBR] அவர் அளிக்கும் வெகுமதியும் அவருடன் இருக்கிறது, [QBR2] அவர் தரும் பிரதிபலனும் அவருடனே வருகிறது. [QBR]
11. அவர் மேய்ப்பனைப்போல் தன் மந்தையை மேய்க்கிறார்: [QBR2] அவர் செம்மறியாட்டுக் குட்டிகளை ஒன்றுசேர்த்து கைகளில் ஏந்தி, [QBR] மார்போடு அணைத்துக்கொண்டு செல்கிறார்; [QBR2] அவர் குட்டிகளுடன் இருக்கும் செம்மறியாடுகளைக் கனிவாக நடத்துகிறார்.
12. கடல் நீரைத் தமது உள்ளங்கையால் அளந்து, [QBR2] வானங்களை சாண் அளவாய்க் கணித்தவர் யார்? [QBR] பூமியின் புழுதியை மரக்காலால் அளந்தவன் யார்? [QBR2] அல்லது மலைகளை நிறைகோலாலும், [QBR2] குன்றுகளையும் தராசாலும் நிறுத்தவர் யார்? [QBR]
13. யெகோவாவின் மனதை புரிந்துகொண்டு, [QBR2] அவரது ஆலோசகனாக இருந்து அவருக்கு அறிவுறுத்தியவன் யார்? [QBR]
14. யெகோவா தமது அறிவு தெளிவுபெற யாரிடம் ஆலோசனை கேட்டார்? [QBR2] சரியான வழியை அவருக்குக் போதித்தவன் யார்? [QBR] அவருக்கு அறிவைக் போதித்து, [QBR2] விளக்கத்தின் பாதையைக் காட்டியவன் யார்?
15. உண்மையாகவே நாடுகள் வாளியிலிருந்து விழும் [QBR2] தண்ணீர்த் துளியைப் போலிருக்கின்றன; [QBR] அவர்கள் தராசில் படிந்துள்ள தூசியைப்போல் கருதப்படுகிறார்கள்; [QBR2] அவர் தீவுகளை தூசியைப்போல நிறுக்கிறார். [QBR]
16. லெபனோன் பலிபீட நெருப்புக்குப் போதாது. [QBR2] அங்குள்ள மிருகங்கள் தகன பலிக்கும் போதாது. [QBR]
17. எல்லா நாடுகளும் அவர் முன்னிலையில் ஒன்றுமில்லாதவர்கள்போல் இருக்கின்றனர். [QBR2] அவர்கள் அவரால் வெறுமையிலும் வெறுமையானவர்களாகவும், [QBR2] பெருமதியற்றவர்களாகவும் கருதப்படுகிறார்கள்.
18. இப்படியிருக்க, நீங்கள் இறைவனை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? [QBR2] எந்த சாயலுக்கு அவரை ஒப்பிடுவீர்கள்? [QBR]
19. விக்கிரகத்தை ஒரு கைவினைஞன் வார்க்கிறான், [QBR2] கொல்லன் அதைத் தங்கத்தால் மூடி, [QBR2] அதற்காக வெள்ளி மாலைகளைச் செய்கிறான். [QBR]
20. அத்தகைய காணிக்கையைச் செலுத்தமுடியாத ஏழையோ, [QBR2] உழுத்துப்போகாத மரத்தைத் தெரிவு செய்கிறான். [QBR] அதைச் செதுக்கி, சரிந்து வீழ்ந்து போகாத விக்கிரகத்தைச் செய்யும்படி [QBR2] திறமைவாய்ந்த ஒரு சிற்பியைத் தேடுகிறான்.
21. நீங்கள் அறியவில்லையோ? [QBR2] நீங்கள் கேள்விப்படவில்லையோ? [QBR] ஆதியில் இருந்து உங்களுக்குச் சொல்லப்படவில்லையோ? [QBR2] பூமி படைக்கப்பட்ட காலத்திலிருந்தே நீங்கள் விளங்கிக்கொள்ளவில்லையோ? [QBR]
22. அவர் பூமியின் வட்டத்தின்மேல் தன் அரியணையில் வீற்றிருக்கிறார், [QBR2] அதன் மக்கள் வெட்டுக்கிளிகளைப்போல் இருக்கிறார்கள். [QBR] அவர் வானங்களை மூடுதிரையைப்போல் விரித்து, [QBR2] அவைகளை ஒரு குடியிருக்கும் கூடாரத்தைப்போல் அமைத்திருக்கிறார். [QBR]
23. அவர் இளவரசர்களைத் தாழ்வு நிலைக்குத் தள்ளுகிறார்; [QBR2] உலக ஆளுநர்களையும் பெறுமதியற்றவர்களாக்குகிறார். [QBR]
24. அவர்கள் நாட்டப்பட்ட உடனேயே, [QBR2] அவர்கள் விதைக்கப்பட்ட உடனேயே, [QBR2] அவர்கள் நிலத்தில் வேரூன்றிய உடனேயே இறைவன் அவர்கள்மேல் ஊத, [QBR] அவர்கள் வாடிப்போகிறார்கள். [QBR2] சுழல் காற்றும் பதர்களைப்போல் அவர்களை வாரிக்கொண்டுபோகிறது.
25. “நீங்கள் என்னை யாருக்கு ஒப்பிடுவீர்கள்? [QBR2] அல்லது எனக்கு நிகரானவர் யார்?” என்று பரிசுத்தர் கேட்கிறார். [QBR]
26. கண்களை உயர்த்தி மேலே நோக்குங்கள்: [QBR2] இவைகளையெல்லாம் படைத்தவர் யார்? [QBR] நட்சத்திர சேனையை ஒவ்வொன்றாக வெளிக்கொணர்ந்து, [QBR2] அவை ஒவ்வொன்றையும் பேரிட்டு அழைக்கும் அவரே. [QBR] அவருடைய மிக வல்லமையாலும், [QBR2] மகா பலத்தினாலும் அவைகளில் ஒன்றுகூட தவறுவதில்லை.
27. “என் நிலைமை யெகோவாவுக்கு மறைவாயிருக்கிறது; [QBR2] இறைவன் எனக்குரிய நீதியைக் கண்டும் காணாதிருக்கிறார்” [QBR] என்று யாக்கோபே நீ ஏன் சொல்கிறாய்? [QBR2] இஸ்ரயேலே, ஏன் முறையிடுகிறாய்? [QBR]
28. நீங்கள் அறியவில்லையோ? [QBR2] நீங்கள் கேள்விப்படவில்லையோ? [QBR] யெகோவாவே நித்திய இறைவன், [QBR2] பூமியின் எல்லைகளைப் படைத்தவரும் அவரே. [QBR] அவர் களைத்துப் போவதுமில்லை, சோர்ந்துபோவதுமில்லை. [QBR2] அவரின் ஞானத்தை யாராலும் அளவிடமுடியாது. [QBR]
29. அவர் களைப்புற்றோருக்கு பெலன் கொடுக்கிறார்; [QBR2] பெலவீனருக்கு வலிமையைக் கூட்டுகிறார். [QBR]
30. இளைஞர் களைத்து சோர்ந்துபோவார்கள், [QBR2] வாலிபர் இடறி விழுவார்கள். [QBR]
31. ஆனால், யெகோவாவிடம் நம்பிக்கையோடேக் காத்திருப்போர் [QBR2] தங்கள் பெலனைப் புதுப்பித்துக்கொள்வார்கள். [QBR] அவர்கள் கழுகுகளைப்போல் சிறகுகளை விரித்து உயரே பறப்பார்கள்; [QBR2] அவர்கள் ஓடுவார்கள், சோர்வடையமாட்டார்கள்; [QBR2] அவர்கள் நடப்பார்கள், களைப்படையமாட்டார்கள். [PE]