1. {#1மீட்கப்பட்டோரின் மகிழ்ச்சி } [QS]பாலைவனமும் வறண்ட நிலமும் மகிழும். [QE][QS2]வனாந்திரம் மகிழ்ந்து பூக்கும். [QE][QS]அது லீலி பூப்பதுபோல் பூக்கும்.
2. அது வளமாய் வளர்ந்து [QE][QS2]மகிழ்ச்சியுடன் ஆனந்த சத்தமிடும். [QE][QS]லெபனோனின் மகிமையும், [QE][QS2]கர்மேல், சாரோனின் சிறப்பும் அதற்குக் கொடுக்கப்படும். [QE][QS]யெகோவாவின் மகிமையையும், [QE][QS2]நமது இறைவனின் மகத்துவத்தையும் காண்பார்கள். [QE][PBR]
3. [QS]தளர்ந்த கைகளைப் பலப்படுத்துங்கள், [QE][QS2]தள்ளாடும் முழங்கால்களைத் திடப்படுத்துங்கள். [QE]
4. [QS]இருதயத்தில் பதற்றமுள்ளோருக்கு, [QE][QS2]“திடன்கொள்ளுங்கள், பயப்படாதிருங்கள்; [QE][QS]இதோ, உங்கள் இறைவன் [QE][QS2]உங்கள் பகைவரை பழிதீர்க்கவும், [QE][QS]பதிலளிக்கவும் வருவார், [QE][QS2]அவர் வந்து உங்களை விடுவிப்பார்” என்று சொல்லுங்கள். [QE][PBR]
5. [QS]அப்பொழுது குருடரின் கண்கள் பார்வை பெறும், [QE][QS2]செவிடரின் காதுகளும் திறக்கப்படும். [QE]
6. [QS]முடவன் மானைப்போல் துள்ளுவான், [QE][QS2]ஊமையின் நாவும் ஆனந்த சத்தமிடும்; [QE][QS]வனாந்திரத்திலிருந்து தண்ணீரும், [QE][QS2]பாலைவனத்திலிருந்து நீரோடைகளும் பாயும். [QE]
7. [QS]சுடுமணல் நீர்த் தடாகமாகும், [QE][QS2]வறண்ட நிலம் நீரூற்றுகளுமாய் பொங்கிவரும். [QE][QS]நரிகள் தங்கும் இடங்களில் [QE][QS2]புல்லும், கோரையும், நாணலும் வளர்ந்து நிற்கும். [QE][PBR]
8. [QS]அங்கே பிரதான வீதி ஒன்றிருக்கும், [QE][QS2]அது பரிசுத்த வழி எனப்படும். [QE][QS2]அசுத்தர் அதன் வழியே கடந்து செல்லமாட்டார்கள். [QE][QS]இறைவனுடைய வழியில் நடப்பவர்களுக்கென்றே அது இருக்கும். [QE][QS2]கொடிய மூடர் அதில் திரியமாட்டார்கள். [QE]
9. [QS]அங்கு சிங்கம் இருப்பதில்லை; [QE][QS2]எந்தவொரு கொடிய மிருகமாவது அங்கே செல்வதில்லை, [QE][QS2]அங்கே காணப்படுவதுமில்லை. [QE][QS]மீட்கப்பட்டவர்களே அதில் நடப்பார்கள். [QE]
[QS2]10. யெகோவாவினால் மீட்கப்பட்டவர்கள் திரும்பி வருவார்கள். [QE][QS]அவர்கள் பாடலுடன் சீயோனுக்குள் செல்வார்கள்; [QE][QS2]நித்திய மகிழ்ச்சி அவர்களுடைய தலையின்மேலிருக்கும். [QE][QS]மகிழ்ச்சியும், ஆனந்தமும் அடைவார்கள், [QE][QS2]துக்கமும் பெருமூச்சும் பறந்தோடிவிடும். [QE]