தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு} [PS] நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; [QBR2] மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். [QBR] பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், [QBR2] உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும். [QBR]
2. யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; [QBR2] அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. [QBR] அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; [QBR2] அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார். [QBR]
3. அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், [QBR2] இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; [QBR2] மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும். [QBR]
4. வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; [QBR2] ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். [QBR] வானசேனை அனைத்தும் [QBR2] திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், [QBR2] சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும்.
5. எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; [QBR2] இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை [QBR2] நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது. [QBR]
6. யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, [QBR2] அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. [QBR] அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், [QBR2] செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. [QBR] ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், [QBR2] ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார். [QBR]
7. காளைக் கன்றுகளும், [QBR2] பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். [QBR] அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், [QBR2] புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும்.
8. ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; [QBR2] சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார். [QBR]
9. ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், [QBR2] நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், [QBR2] அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும். [QBR]
10. அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; [QBR2] அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். [QBR] தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், [QBR2] மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள். [QBR]
11. பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் [QBR2] அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; [QBR] பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். [QBR2] இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், [QBR2] அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார். [QBR]
12. உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; [QBR2] இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள். [QBR]
13. அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; [QBR2] காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். [QBR] அது நரிகளுக்குத் தங்குமிடமும் [QBR2] ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும். [QBR]
14. பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; [QBR2] காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். [QBR] இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி [QBR2] தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும். [QBR]
15. ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, [QBR2] முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, [QBR2] அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; [QBR] வல்லூறுகளும் தத்தம் துணையுடன் [QBR2] அங்கே வந்துசேரும். [PE][PS]
16. யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: [QBR] இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, [QBR2] ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; [QBR] யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, [QBR2] அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார். [QBR]
17. அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; [QBR2] அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. [QBR] அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, [QBR2] தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும். [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 66
ஏசாயா 34:29
நாடுகளுக்கு விரோதமான நியாயத்தீர்ப்பு 1 நாடுகளே, நீங்கள் அருகில் வந்து கேளுங்கள்; மக்கள் கூட்டங்களே, நீங்கள் கவனியுங்கள். பூமியும் அதிலுள்ள யாவும் கேட்கட்டும், உலகமும் அதிலிருந்து வரும் அனைத்தும் கேட்கட்டும். 2 யெகோவா எல்லா நாடுகளோடும் கோபமாயிருக்கிறார்; அவருடைய கோபம் அவர்களுடைய எல்லா இராணுவத்தின்மேலும் இருக்கிறது. அவர் அவர்களை முற்றிலும் அழிப்பார்; அவர் அவர்களைக் கொலைக்கு ஒப்புக்கொடுப்பார். 3 அவர்களில் கொலைசெய்யப்பட்டவர்கள் வெளியே எறியப்படுவார்கள், இறந்தவர்களின் உடல்கள் துர்நாற்றம் வீசும்; மலைகள் அவர்களுடைய இரத்தத்தினால் ஊறியிருக்கும். 4 வானத்து நட்சத்திரங்கள் அனைத்தும் இல்லாமற்போகும்; ஆகாயம் ஒரு சுருளைப்போல் சுருட்டப்படும். வானசேனை அனைத்தும் திராட்சைக் கொடியிலிருந்து வாடிய இலைகள் உதிர்வதுபோலவும், சூம்பிப்போன காய்கள் அத்திமரத்திலிருந்து விழுவதுபோலவும் விழும். 5 எனது வாள் தன் நிறைவை வானங்களில் குடித்திருக்கிறது; இதோ, நான் முழுவதும் அழித்துப்போட்ட ஏதோம் மக்களை நியாயந்தீர்ப்பதற்காக அது கீழே வருகிறது. 6 யெகோவாவின் வாள் இரத்தத்தில் தோய்ந்திருக்கிறது, அது கொழுப்பினால் மூடப்பட்டிருக்கிறது. அது செம்மறியாட்டுக் குட்டிகள், கடாக்களுடைய இரத்தத்தாலும், செம்மறியாட்டுக் கடாக்களின் சிறுநீரகக் கொழுப்பினாலும் மூடப்பட்டிருக்கிறது. ஏனெனில் யெகோவா போஸ்றா பட்டணத்தில் ஒரு பலியையும், ஏதோமில் ஒரு வதையையும் நியமித்திருக்கிறார். 7 காளைக் கன்றுகளும், பெரும் எருதுகளுமாக காட்டெருதுகள் அவைகளுடன் விழும். அவர்களுடைய நாடு இரத்தத்தில் தோய்ந்திருக்கும், புழுதியும் கொழுப்பில் ஊறியிருக்கும். 8 ஏனெனில் யெகோவா பழிவாங்கும் நாளொன்றை வைத்திருக்கிறார்; சீயோனின் வழக்கில் நீதி வழங்குவதற்காக ஒரு வருடத்தை வைத்திருக்கிறார். 9 ஏதோமின் நீரோடைகள் நிலக்கீலாக மாறும், நிலத்தின் புழுதி எரியும் கந்தகமாகவும், அதன் நிலம் எரியும் கீலாகவும் மாறும். 10 அது இரவிலும் பகலிலும் தணிக்க முடியாதபடி இருக்கும்; அதன் புகை என்றென்றும் புகைந்துகொண்டே இருக்கும். தலைமுறை தலைமுறையாக அது பாழடைந்து கிடக்கும், மீண்டும் அதன் ஊடாக யாரும் போகமாட்டார்கள். 11 பாலைவன ஆந்தையும் அலறும் ஆந்தையும் அதைத் தங்கள் உடைமை ஆக்கிக்கொள்ளும்; பெரிய ஆந்தையும், காகமும் தமது கூடுகளை அங்கு அமைக்கும். இறைவன் ஏதோமுக்கு மேலாக குழப்பத்தின் அளவுகோலையும், அழிவின் தூக்கு நூலையும் நீட்டிப் பிடிப்பார். 12 உயர்குடி மக்களுக்கு அரசு எனச் சொல்லிக்கொள்ள அங்கு ஒன்றுமே இராது; இளவரசர்கள் அனைவரும் இல்லாமல் போவார்கள். 13 அதனுடைய அரண்செய்யப்பட்ட பட்டணங்களின்மேல் முட்செடிகள் படரும்; காஞ்சொறிகளும் கள்ளிச்செடிகளும் அதன் கோட்டைகளில் படரும். அது நரிகளுக்குத் தங்குமிடமும் ஆந்தைகளுக்கு குடியிருப்புமாகும். 14 பாலைவன பிராணிகளும், கழுதைப்புலிகளுடன் ஒன்றுசேரும்; காட்டாடுகளும் ஒன்றையொன்று பார்த்துக் கத்தும். இரவுப் பிராணிகளும் அங்கு இளைப்பாறி தங்களுக்குத் தங்கும் இடங்களைத் தேடும். 15 ஆந்தைகள் அங்கே கூடுகட்டி, முட்டையிட்டுக் குஞ்சு பொரித்து, அவைகளைத் தமது சிறகுகளின் நிழலில் பாதுகாக்கும்; வல்லூறுகளும் தத்தம் துணையுடன் அங்கே வந்துசேரும். 16 யெகோவாவின் புத்தகச்சுருளை தேடி வாசியுங்கள்: இவற்றில் ஒன்றாவது தவறிப்போகாது, ஒன்றாவது தனக்குத் துணையில்லாமல் இராது; யெகோவாவின் வாயே இந்தக் கட்டளையைக் கொடுத்தது, அவரின் ஆவியானவர் இவற்றை ஒன்றுசேர்ப்பார். 17 அவற்றிற்குரிய பாகங்களை அவரே பங்கிடுகிறார்; அவருடைய கரமே அவற்றை அளவுகளின்படி பகிர்ந்து கொடுக்கின்றன. அவை என்றென்றைக்கும் அதைத் தங்கள் சொந்தமாக்கி, தலைமுறை தலைமுறையாக அங்கே குடியிருக்கும்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 34 / 66
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References