1. {அசீரியாவைப் பற்றிய செய்தி} [PS] அழிக்கப்படாதிருக்கும் அழிவுகாரனே, [QBR2] ஐயோ உனக்குக் கேடு! [QBR] காட்டிக்கொடுக்கப்படாதிருந்த துரோகியே, [QBR2] ஐயோ உனக்குக் கேடு! [QBR] நீ அழிப்பதை நிறுத்தும்போது, [QBR2] நீ அழிக்கப்படுவாய்; [QBR] நீ காட்டிக்கொடுப்பதை நிறுத்தும்போது, [QBR2] நீ காட்டிக்கொடுக்கப்படுவாய்.
2. யெகோவாவே, எங்கள்மேல் கிருபையாயிரும்; [QBR2] நாங்கள் உமக்குக் காத்திருக்கிறோம். [QBR] காலைதோறும் எங்கள் பெலனாயும், [QBR2] துயரப்படும் வேளையில் எங்கள் மீட்பருமாயிரும். [QBR]
3. உமது குரலின் முழக்கத்தின்போது மக்கள் பயந்து ஓடுகிறார்கள்; [QBR2] நீர் எழும்பும்போது நாடுகள் சிதறுண்டு போகிறார்கள். [QBR]
4. நாடுகளே, இளம் வெட்டுக்கிளிகள் வெட்டுவதுபோல, [QBR2] உங்கள் கொள்ளைப்பொருள் அழிக்கப்படுகிறது; [QBR2] வெட்டுக்கிளிக் கூட்டம்போல மனிதர் அவைகளின்மேல் பாய்கிறார்கள்.
5. யெகோவா புகழ்ந்து உயர்த்தப்பட்டிருக்கிறார், [QBR2] ஏனென்றால் அவர் உன்னதத்தில் வாழ்கிறார். [QBR2] அவர் சீயோனை நீதியாலும் நியாயத்தாலும் நிரப்புவார். [QBR]
6. அவரே உங்கள் வாழ்நாட்களுக்கு உறுதியான அஸ்திபாரமாயிருப்பார்; [QBR2] அவர் இரட்சிப்பும், ஞானமும், அறிவும் நிறைந்த ஒரு செல்வக் களஞ்சியமுமாயிருப்பார். [QBR2] யெகோவாவுக்குப் பயந்து நடத்தலே இந்தத் திரவியத்தை அடைவதற்கான திறவுகோல்.
7. இதோ, அவர்களுடைய தைரியமுள்ள மனிதர் தெருக்களில் சத்தமிட்டு அழுகிறார்கள்; [QBR2] சமாதானத் தூதுவர்கள் மனங்கசந்து அழுகிறார்கள். [QBR]
8. பிரதான வீதிகள் வெறிச்சோடிக் கிடக்கின்றன; [QBR2] தெருக்களிலே பிரயாணிகளைக் காணவில்லை. [QBR] உடன்படிக்கை மீறப்பட்டிருக்கிறது, [QBR2] அதன் சாட்சிகள் [*சாட்சிகள் அல்லது பட்டணங்கள் எனப்படும்] அவமதிக்கப்பட்டார்கள், [QBR2] மதிக்கப்படுவார் ஒருவரும் இல்லை. [QBR]
9. நாடு துக்கப்பட்டு சோர்ந்துபோகிறது, [QBR2] லெபனோன் வெட்கப்பட்டு வாடுகிறது. [QBR] சாரோன் சமவெளி வனாந்திரத்தைப் போலிருக்கிறது, [QBR2] பாசானும், கர்மேலும் தங்கள் இலைகளை உதிர்க்கின்றன.
10. “இப்பொழுது நான் எழும்புவேன், [QBR2] இப்பொழுது நான் உயர்த்தப்படுவேன். [QBR2] இப்பொழுது நான் மேன்மைப்படுத்தப்படுவேன்” என்று யெகோவா சொல்கிறார். [QBR]
11. “நீங்கள் பதரைக் கருப்பந்தரித்து, [QBR2] வைக்கோலைப் பெற்றெடுப்பீர்கள்; [QBR2] உங்களது சுவாசம் உங்களைச் சுட்டெரிக்கும் நெருப்பாய் இருக்கும். [QBR]
12. மக்கள் கூட்டங்கள் சுண்ணாம்பைப்போல் எரித்து நீறாக்கப்படுவார்கள்; [QBR2] அவர்கள் வெட்டப்பட்ட முட்செடிகள்போல் நெருப்புச் சுவாலையில் எரிக்கப்படுவார்கள்.”
13. தொலைவில் இருப்போரே, நான் செய்தவற்றைக் கேளுங்கள்; [QBR2] அருகில் உள்ளோரே, எனது வல்லமையை ஏற்றுக்கொள்ளுங்கள்! [QBR]
14. சீயோனின் பாவிகள் திகில் அடைகிறார்கள்; [QBR2] இறைவனை மறுதலிக்கிறவர்களை நடுக்கம் பற்றிக்கொள்கிறது: [QBR] “சுட்டெரிக்கும் நெருப்புடன் நம்மில் எவர் வாழமுடியும்? [QBR2] நித்தியமாய் எரியும் நெருப்புடன் நம்மில் எவர் குடியிருக்க முடியும்?” [QBR]
15. நீதியுடன் நடப்பவரும், [QBR2] சரியானதைப் பேசுபவரும், [QBR] தட்டிப் பறித்த இலாபத்தை வெறுப்பவரும், [QBR2] இலஞ்சம் வாங்க தன் கைகளை நீட்டாதவரும், [QBR] கொலைசெய்வதற்கான சதித்திட்டங்களைக் கேட்காமல் தன் காதை அடைத்துக்கொள்பவரும், [QBR2] தீயவற்றைப் பாராமல் தன் கண்களை மூடுகிறவரும், [QBR]
16. அவர்கள் உயர்ந்த இடங்களில் வசிப்பார்கள்; [QBR2] கன்மலைகளின் கோட்டையே அவர்களுடைய புகலிடமாய் இருக்கும். [QBR] அவர்களுக்கு உணவு கொடுக்கப்படும், [QBR2] அவர்களுக்குத் தண்ணீரும் குறைவில்லாமல் இருக்கும்.
17. உன் கண்கள் அரசனை அவர் அழகில் காணும்; [QBR2] வெகுதூரத்தில் விசாலமாகப் பரந்திருக்கும் நாட்டையும் காணும். [QBR]
18. நீங்கள் உங்கள் சிந்தைனையில் பழைய பயங்கரத்தை நினைவுகூர்ந்து: [QBR2] “அந்த பிரதான அதிகாரி எங்கே? [QBR] வருமானத்தை எடுத்தவன் எங்கே? [QBR2] கோபுரங்களுக்குப் பொறுப்பான அதிகாரி எங்கே?” என்று கேட்பீர்கள். [QBR]
19. விளங்காத பேச்சும், [QBR2] புரிந்துகொள்ள முடியாத அந்நிய மொழியும் உள்ள [QBR2] அந்த கொடூரமான மக்களை நீங்கள் இனி காணமாட்டீர்கள்.
20. நமது பண்டிகைகளின் பட்டணமான சீயோனைப் பாருங்கள்; [QBR2] உங்கள் கண்கள் அமைதி நிறைந்த இருப்பிடமும், [QBR2] அசைக்கப்படாத கூடாரமுமாகிய எருசலேமைக் காணும். [QBR] அதன் முளைகள் ஒருபோதும் பிடுங்கப்படமாட்டாது, [QBR2] அதன் கயிறுகள் ஒன்றாவது அறுக்கப்படவுமாட்டாது. [QBR]
21. யெகோவாவே அங்கு நமது வல்லவராயிருப்பார். [QBR2] அது அகன்ற ஆறுகளும், நீரோடைகளும் உள்ள இடத்தைப் போலிருக்கும். [QBR] துடுப்புகளால் வலித்து ஒட்டப்படும் மரக்கலங்களோ, [QBR2] பெரிய கப்பல்களோ அதில் செல்வதில்லை. [QBR]
22. யெகோவாவே நமது நீதிபதி, [QBR2] யெகோவாவே நமக்கு சட்டம் வழங்குபவர். [QBR] யெகோவாவே நமது அரசர்; [QBR2] நம்மைக் காப்பாற்றுபவரும் அவரே.
23. உங்கள் பாய்மரக் கட்டுகள் தளர்ந்து தொங்குகின்றன, [QBR2] பாய்மரங்கள் இறுக்கமாகக் கட்டப்படவில்லை, [QBR2] பாய்களும் விரிக்கப்படவில்லை. [QBR] அப்பொழுது ஏராளமான கொள்ளைப்பொருட்கள் பங்கிடப்படும்; [QBR2] முடவர்கள்கூட கொள்ளைப்பொருட்களைத் தூக்கிக்கொண்டு போவார்கள். [QBR]
24. சீயோனில் வாழும் ஒருவராவது, “நான் நோயாளி” என்று சொல்லமாட்டார்கள்; [QBR2] அங்கு வாழ்பவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும். [PE]