1. உதவி நாடி எகிப்திற்குப் போகிறவர்களுக்கு ஐயோ கேடு! [QBR2] அவர்கள் குதிரைகளை நம்பி, [QBR] தங்கள் திரளான தேர்களிலும், [QBR2] தங்கள் குதிரைவீரரின் பெரும் பலத்திலும் நம்பிக்கை வைக்கிறார்கள். [QBR] ஆனால், இஸ்ரயேலின் பரிசுத்தரை நோக்காமலும், [QBR2] யெகோவாவின் உதவியைத் தேடாமலும் இருக்கின்றார்கள். [QBR]
2. யெகோவாவோ ஞானமுள்ளவர், அவரால்தான் அழிவைக் கொண்டுவர முடியும்; [QBR2] அவர் சொன்ன வார்த்தையை மாற்றுவதில்லை, [QBR] அவர் கொடுமையானவரின் குடும்பத்திற்கு விரோதமாகவும், [QBR2] தீயவர்களுக்கு உதவுவோருக்கு எதிராகவும் எழும்புவார். [QBR]
3. ஆனால் எகிப்தியர் மனிதர்களேயன்றி இறைவன் அல்ல; [QBR2] அவர்களின் குதிரைகள் மாமிசமேயன்றி ஆவியல்ல. [QBR] யெகோவா தமது கரத்தை நீட்டும்போது, [QBR2] உதவிசெய்கிறவன் இடறுவான். [QBR2] உதவி பெறுவோனும் விழுவான்; [QBR2] இருவரும் ஒன்றாய் அழிவார்கள். [PE][PS]
4. யெகோவா எனக்கு சொல்வது இதுவே: [QBR] “சிங்கமோ, இளஞ்சிங்கமோ, [QBR2] தன் இரையைப் பிடித்துக்கொண்டு கர்ஜிக்கும்போது, [QBR] அதை எதிர்ப்பதற்கு முழு மேய்ப்பர் கூட்டத்தை அழைத்தாலும், [QBR2] அது அவர்களின் கூக்குரலுக்கு அஞ்சவோ, [QBR] இரைச்சலைப் பொருட்படுத்தவோ மாட்டாது. [QBR2] அதுபோலவே, சேனைகளின் யெகோவா, [QBR] சீயோன் மலையிலும் அதன் உயரிடங்களிலும் [QBR2] யுத்தம் செய்வதற்கு இறங்குவார். [QBR]
5. பறவைகள் தமது கூடுகளின் மேலே வட்டமிட்டுப் பறப்பதுபோல, [QBR2] சேனைகளின் யெகோவா எருசலேமைப் பாதுகாப்பார். [QBR] அவர் அதைப் பாதுகாத்து மீட்பார், [QBR2] அவர் அதற்கு மேலாகக் கடந்து அதை விடுவிப்பார்.” [PE][PS]
6. இஸ்ரயேலரே, அவரை எதிர்த்து அதிகமாய் கலகம் செய்த நீங்கள் அவரிடம் திரும்புங்கள்.
7. ஏனென்றால், அந்த நாளிலே நீங்கள் ஒவ்வொருவரும் உங்கள் பாவக் கைகளினால் செய்த வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் ஒதுக்கி எறிந்து விடுவீர்கள். [QBR]
8. “அசீரியா வீழ்ச்சியடைவது மனிதனின் வாளினால் அல்ல. [QBR2] மனிதனால் ஆக்கப்படாத ஒரு வாள் அவர்களை விழுங்கும்; [QBR] வாளுக்கு முன்னால் அவர்கள் பயந்து ஓடுவார்கள்; [QBR2] அவர்களின் வாலிபர் கட்டாய வேலைக்கு அமர்த்தப்படுவார்கள். [QBR]
9. அவர்களின் அரண் பயங்கரத்தால் வீழ்ச்சியடையும்; [QBR2] அவர்களின் தளபதிகள் போர்க் கொடிகளைக் கண்டதும் திகிலடைவார்கள்” [QBR] என்று யெகோவா அறிவிக்கிறார். [QBR2] சீயோனில் அவருடைய நெருப்பும், [QBR2] எருசலேமில் அவருடைய சூளையும் இருக்கிறது. [PE]