1. இப்பொழுது பாருங்கள், யெகோவா, [QBR2] சேனைகளின் யெகோவா [QBR] எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் [QBR2] எல்லா ஆதரவையும் உதவியையும் நிறுத்தப் போகிறார்: [QBR] உணவு வழங்குவதையும், தண்ணீர் வழங்குவதையும் நிறுத்தப் போகிறார். [QBR2]
2. மாவீரனையும், போர்வீரனையும், [QBR] நீதிபதியையும், இறைவாக்கினனையும், [QBR2] குறிசொல்பவனையும், சபைத்தலைவனையும், [QBR]
3. ஐம்பது பேருக்குத் தலைவனையும், மதிப்புள்ளவனையும், ஆலோசகனையும், [QBR2] தொழிலில் சாமர்த்தியமுள்ளவனையும், [QBR2] மாயவித்தையில் கெட்டிக்காரனையும் அகற்றப்போகிறார்.
4. “நான் வாலிபர்களை அவர்களுடைய அதிகாரிகளாக்குவேன்; [QBR2] விளையாட்டுப் பிள்ளைகள் அவர்களை ஆட்சிசெய்வார்கள்.”
5. மக்கள் ஒருவரையொருவர் ஒடுக்குவார்கள்: [QBR2] ஒருவருக்கொருவரும், அயலானுக்கு விரோதமாக அயலானும், [QBR] இளையோர் முதியோருக்கு விரோதமாகவும், [QBR2] கீழோர் மேலோருக்கு விரோதமாகவும் எழும்புவார்கள்.
6. ஒருவன் தன் தகப்பன் வீட்டிலுள்ள தன் சகோதரன் ஒருவனைப் பிடித்து, [QBR2] “உன்னிடம் மேலுடை இருக்கிறது; [QBR] நீயே எங்களுக்குத் தலைவனாயிரு. [QBR2] பாழடைந்த இவ்விடத்திற்கு நீயே பொறுப்பாயிருக்க வேண்டும்” என்று சொல்வான். [QBR]
7. ஆனால் அவனோ அந்நாளில், [QBR2] “என் வீட்டில் உணவோ, உடையோ கிடையாது; [QBR] இதற்கு எந்தவிதத் தீர்வும் என்னிடம் இல்லை. [QBR2] என்னை மக்களுக்குத் தலைவனாக்காதே” என்று மறுத்துவிடுவான்.
8. எருசலேம் நகரம் தள்ளாடுகிறது, [QBR2] யூதா நாடு வீழ்ச்சியடைகிறது; [QBR] அவர்களின் சொல்லும் செயலும் யெகோவாவுக்கு விரோதமாக இருக்கிறது, [QBR2] அவர்கள் அவரின் மகிமையான சமுகத்தை துணிவுடன் எதிர்க்கிறார்கள். [QBR]
9. அவர்களுடைய முகங்களின் தோற்றம் அவர்களுக்கெதிராக சாட்சி பகர்கிறது; [QBR2] சோதோம் நகரத்தைப்போல தங்கள் பாவங்களைப் பறைசாற்றுகிறார்கள். [QBR2] அவைகளை மறைத்து வைக்கவில்லை. [QBR] ஐயோ! அவர்களுக்குக் கேடு; [QBR2] அவர்கள் தங்களுக்குத் தாங்களே பேராபத்தை வருவித்துக் கொண்டார்கள்.
10. நீதியானவர்களுக்கு எல்லாம் நலமாய் நடைபெறும் [QBR2] என்று அவர்களுக்குச் சொல்லுங்கள்; [QBR2] ஏனெனில் அவர்கள், தமது செயல்களின் பலனை அனுபவிப்பார்கள். [QBR]
11. கொடியவர்களுக்கு ஐயோ கேடு! [QBR2] அவர்கள்மேல் பேராபத்து வரும். [QBR] அவர்களின் கைகளின் செயல்களுக்கு ஏற்றவாறு [QBR2] அவர்களுக்குச் செய்யப்படும்.
12. வாலிபர் என் மக்களை ஒடுக்குகிறார்கள், [QBR2] பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். [QBR] எனது மக்களே, உங்கள் வழிகாட்டிகள் உங்களைத் தவறான வழியில் நடத்துகிறார்கள்; [QBR2] அவர்கள் உங்களை வழிவிலகிப்போகச் செய்கிறார்கள்.
13. யெகோவா வழக்காட ஆயத்தமாகி, [QBR2] மக்களை நியாயந்தீர்க்க எழுந்து நிற்கிறார். [QBR]
14. யெகோவா தமது மக்களின் முதியோருக்கும், தலைவருக்கும் [QBR2] விரோதமாய் நியாயத்தீர்ப்பு செய்கிறார். [QBR] “என் திராட்சைத் தோட்டத்தைப் பாழாக்கியவர்கள் நீங்களே; [QBR2] எளியவர்களிடமிருந்து கொள்ளையிட்ட பொருட்கள் உங்கள் வீடுகளில் இருக்கிறது. [QBR]
15. நீங்கள் என் மக்களை நொறுக்குவதன் அர்த்தமென்ன? [QBR2] ஏழைகளின் முகத்தை உருக்குலைப்பதின் பொருள் என்ன?” [QBR2] என்று யெகோவா, சேனைகளின் யெகோவா அறிவிக்கிறார்.
16. மேலும் யெகோவா சொன்னதாவது: [QBR2] “சீயோனின் பெண்களோ கர்வம் கொண்டிருக்கிறார்கள்; [QBR] தங்கள் கழுத்தை வளைக்காது அகங்காரமாய் நடக்கிறார்கள், [QBR2] அவர்கள் தங்கள் கண்களினால் மருட்டுகிறார்கள். [QBR] அவர்கள் தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்க [QBR2] ஒய்யாரமாய் நடந்து திரிகிறார்கள். [QBR]
17. ஆகையால் யெகோவா சீயோனின் பெண்களின் தலையைப் புண்களால் வாதிப்பார்; [QBR2] அவர்களின் தலைகளை யெகோவா வழுக்கையாக்குவார்.” [PE][PS]
18. அந்த நாளிலே யெகோவா அவர்களின் பகட்டான அணிகலன்களாகிய வளையல்கள், தலைப்பட்டிகள், பிறை வடிவமான கழுத்துச் சங்கிலிகள்,
19. காதணிகள், கைச்சங்கிலிகள், முகத்திரைகள்
20. தலை அணிகலன்கள், கால் சிலம்புகள், ஒட்டியாணங்கள், வாசனைத் தைலக்குப்பிகள், தாயித்துகள்,
21. மோதிரங்கள், மூக்குத்திகள்;
22. உயர்தர அங்கிகள், மேலுடைகள், போர்வைகள், கைப்பைகள்,
23. கண்ணாடிகள், நல்லரக உடைகள், மணிமுடிகள், சால்வைகள் ஆகியவற்றைப் பறித்துப் போடுவார். [QBR]
24. அப்பொழுது நறுமணத்திற்குப் பதிலாகத் துர்நாற்றம் உண்டாகும்; [QBR2] ஒட்டியாணம் இருக்கும் இடத்தில் கயிறு கட்டப்படும். [QBR] அழகாய் முடிக்கப்பட்ட கூந்தல் இல்லாதுபோய், அது வழுக்கைத் தலையாய் இருக்கும்; [QBR2] அலங்கார உடைக்குப் பதிலாக அவர்கள் துக்கவுடையை உடுத்திக்கொள்வார்கள்; [QBR2] அழகுக்குப் பதிலாக அடிமைகளின் நெருப்புச்சூட்டுத் தழும்பு அவர்களுக்கு இருக்கும். [QBR]
25. உங்கள் மனிதர்கள் வாளுக்கு இரையாவார்கள்; [QBR2] உங்களின் இராணுவவீரர் போர்க்களத்தில் சாவார்கள். [QBR]
26. சீயோனின் வாசல்கள் ஒப்பாரி வைத்துப் புலம்பும்; [QBR2] அவள் ஆதரவற்றவளாகத் தரையில் உட்காருவாள் என்கிறார். [PE]