1. {#1எப்பிராயீம் மற்றும் யூதாவின் தலைவர்களுக்கு எச்சரிக்கை } [QS]எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையான கிரீடத்திற்கு ஐயோ கேடு! [QE][QS2]அதன் மகிமையின் அழகான வாடும் மலருக்கு ஐயோ கேடு! [QE][QS]செழிப்பான பள்ளத்தாக்கின் முகப்பில் இருக்கின்ற பட்டணத்திற்கு ஐயோ கேடு! [QE][QS2]மதுவால் வெறியுண்டு வீழ்ச்சியடைந்தவர்களின் [QE][QS2]பெருமையாகிய அந்த பட்டணத்திற்கும் ஐயோ கேடு! [QE]
2. [QS]பாருங்கள், யெகோவா பலமும் வல்லமையுமுள்ள ஒருவனை வைத்திருக்கிறார். [QE][QS2]அவன் கல்மழை போலவும் அழிக்கும் புயலைப் போலவும், [QE][QS]பெருமழைபோலவும், வெள்ளப்பெருக்கு போலவும் [QE][QS2]அதைப் பலத்துடன் நிலத்தில் வீழ்த்துவான். [QE]
3. [QS]எப்பிராயீமிலுள்ள குடிவெறியரின் பெருமையாகிய [QE][QS2]அந்த மலர் மகுடம் காலின்கீழ் மிதிக்கப்படும். [QE]
4. [QS]செழிப்பான பள்ளத்தாக்கின் மேலுள்ள, [QE][QS2]அவளது மகிமையின் அழகாகிய அந்த வாடும் மலர், [QE][QS]அறுவடை காலத்திற்கு முன் பழுக்கும் அத்திப்பழத்தைப் போலாகும். [QE][QS2]அதைக் காண்பவன் தன் கையில் கிடைத்ததும் [QE][QS2]விழுங்கி விடுகிறான். [QE][PBR]
5. [QS]அந்த நாளிலே, சேனைகளின் யெகோவா [QE][QS2]தம் மக்களுள் மீதியாய் இருப்பவர்களுக்கு [QE][QS]ஒரு அழகிய மலர் மகுடமும் [QE][QS2]மகிமையுள்ள ஒரு கிரீடமுமாய் இருப்பார். [QE]
6. [QS]அவர் நியாயத்தீர்ப்பு வழங்க உட்காருபவனுக்கு [QE][QS2]நீதியின் ஆவியாய் இருப்பார்; [QE][QS]பகைவரை வாசலிலேயே திருப்பி அனுப்புகிறவர்களுக்கு [QE][QS2]பலத்தின் ஆதாரமாய் இருப்பார். [QE][PBR]
7. [QS]ஆனால் இப்பொழுதோ இஸ்ரயேலின் தலைவர்கள் [QE][QS2]திராட்சை இரசத்தினால் தடுமாறி, [QE][QS]மதுபோதையினால் தள்ளாடுகிறார்கள். [QE][QS2]ஆசாரியரும் இறைவாக்கு உரைப்போரும் மதுவெறியால் தடுமாறுகிறார்கள். [QE][QS]திராட்சை இரசத்தால் மயங்கி, மதுவெறியினால் தள்ளாடுகிறார்கள். [QE][QS2]அவர்கள் தரிசனம் காணும்போது தடுமாறி, [QE][QS2]தீர்மானம் எடுக்கும்போது இடறுகிறார்கள். [QE]
8. [QS]மேஜைகள் யாவும் வாந்தியால் நிறைந்திருக்கின்றன. [QE][QS2]அழுக்குப்படியாத இடமே அங்கு இல்லை. [QE][PBR]
9. [QS]“யாருக்கு அவர் போதிக்க முயற்சிக்கிறார்? [QE][QS2]யாருக்கு அவர் செய்தியை விளங்கப்படுத்துகிறார்? [QE][QS]பால் மறந்த பிள்ளைகளுக்கோ? [QE][QS2]அல்லது பால் குடிக்கையில் தாயின் மார்பின் அணைப்பிலிருந்து [QE][QS2]எடுக்கப்பட்ட குழந்தைகளுக்கோ? [QE]
10. [QS]அவர் படிப்பிக்கும் விதமோ: [QE][QS2]இதைச் செய், அதைச் செய்; [QE][QS2]கட்டளைக்குமேல் கட்டளை, கட்டளைக்குமேல் கட்டளை; [QE][QS2]இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என இருக்கும் என்கிறார்கள். [QE][PBR]
11. [QS]அப்படியானால், அந்நிய உதடுகளாலும் விளங்காத மொழியினாலும் [QE][QS2]இறைவன் இந்த மக்களுடன் பேசுவார். [QE]
12. [QS]அவர் அவர்களிடம், [QE][QS2]“இளைப்பாறும் இடம் இதுவே; களைப்புற்றோர் இளைப்பாறட்டும். [QE][QS]ஓய்வு பெறுவதற்கான இடம் இதுவே” என்று சொல்லியிருந்தார். [QE][QS2]ஆனால் அவர்களோ அதைக் கேட்க மறுக்கிறார்கள். [QE]
13. [QS]எனவே, அப்பொழுது யெகோவாவினுடைய வார்த்தை அவர்களுக்கு, [QE][QS2]“இதைச் செய், அதைச் செய்; [QE][QS2]கட்டளைமேல் கட்டளை, கட்டளைமேல் கட்டளை; [QE][QS2]இங்கு கொஞ்சம், அங்கு கொஞ்சம்” என்றாகிவிடும். [QE][QS]ஆயினும் அவர்கள் போய் பின்புறமாய்த் தடுமாறி விழுந்து, [QE][QS2]காயப்பட்டு, கண்ணியில் அகப்பட்டு கைதுசெய்யப்படுவார்கள். [QE][PBR]
14. [QS]ஆதலால் எருசலேமில் இந்த மக்களை ஆளுகை செய்வோரே! இகழ்வோரே! [QE][QS2]நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள். [QE]
15. [QS]“நாம் மரணத்துடன் ஒரு உடன்படிக்கை செய்திருக்கிறோம்; [QE][QS2]பாதாளத்துடனும் ஒப்பந்தம் செய்திருக்கிறோம். [QE][QS]ஆகையால், நம்மை மேற்கொள்ளக்கூடிய துன்புறுத்தல் இங்கு வரும்போது [QE][QS2]அது தாக்காது; [QE][QS]பொய் நமக்கு அடைக்கலமாயும், [QE][QS2]வஞ்சகம் நமக்கு மறைவிடமாயும் இருக்கும்” என்று சொல்லுகிறீர்கள். [QE]
16. [PS]ஆதலால், ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“இதோ, நான் சீயோனில் ஒரு கல்லை வைக்கிறேன்; [QE][QS2]அது சோதித்துப் பார்க்கப்பட்ட கல், [QE][QS]அது உறுதியான அஸ்திபாரத்துக்கான விலையேறப்பெற்ற மூலைக்கல்; [QE][QS2]அதில் நம்பிக்கை வைக்கும் எவரும் ஒருபோதும் பதறமாட்டார்கள். [QE]
17. [QS]நான் நீதியை அளவு நூலாக்குவேன்; [QE][QS2]நியாயத்தைத் தூக்கு நூலாக்குவேன். [QE][QS]உங்கள் பொய்யான அடைக்கலத்தை, கல்மழை அழிக்கும்; [QE][QS2]வெள்ளம் உங்கள் மறைவிடத்திற்கு மேலாகப் பெருக்கெடுக்கும். [QE]
18. [QS]மரணத்துடன் நீங்கள் செய்த உடன்படிக்கை ரத்துச் செய்யப்படும்; [QE][QS2]பாதாளத்துடன் செய்த ஒப்பந்தம் நிலைக்காது. [QE][QS]தண்டனை பெருவெள்ளம்போல் வாரிக்கொண்டு போகும்போது, [QE][QS2]நீங்கள் அதனால் அடிபட்டு விழுவீர்கள். [QE]
19. [QS]அது வரும்போதெல்லாம் உங்களை அடித்துச்செல்லும்; [QE][QS2]அது காலைதோறும், இரவும் பகலும் [QE][QS2]தண்டிப்பதற்காக வந்து வாரிக்கொண்டு போகும்.” [QE][PBR] [QS]இச்செய்தியை நீங்கள் விளங்கிக்கொள்வது [QE][QS2]உங்களுக்குப் பேரச்சத்தை விளைவிக்கும். [QE]
20. [QS]கால் நீட்டிப் படுக்கக் கட்டிலின் நீளம் போதாது; [QE][QS2]மூடிக்கொள்ள போர்வையின் அகலமும் போதாது. [QE]
21. [QS]யெகோவா பேராசீம் மலையில் எழுந்ததுபோல் எழும்புவார், [QE][QS2]கிபியோன் பள்ளத்தாக்கில் கோபங்கொண்டதுபோல் எழும்புவார். [QE][QS]அவர் தமது வேலையை, எதிர்பாராத வேலையைச் செய்வதற்கும், [QE][QS2]தமது கடமையை, தாம் விரும்பாத கடமையை நிறைவேற்றுவதற்கும் எழும்புவார். [QE]
22. [QS]உங்கள் ஏளனத்தை இப்பொழுது நிறுத்துங்கள், [QE][QS2]இல்லையெனில் உங்களைப் பிணைத்திருக்கும் சங்கிலிகள் இன்னும் பாரமாகும். [QE][QS]யெகோவா, சேனைகளின் யெகோவா முழு நாட்டுக்கும் [QE][QS2]விரோதமாகத் திட்டமிட்டிருக்கும் அழிவை எனக்குச் சொல்லியிருக்கிறார். [QE][PBR]
23. [QS]கேளுங்கள், என் குரலுக்குச் செவிகொடுங்கள்; [QE][QS2]நான் சொல்வதைக் கவனித்துக் கேளுங்கள். [QE]
24. [QS]ஒரு விவசாயி பயிரிடுவதற்காக உழும்போது தொடர்ந்து உழுதுகொண்டே இருப்பானோ? [QE][QS2]நிலத்தைத் தொடர்ந்து கொத்தி மண்ணைப் புரட்டிக் கொண்டேயிருப்பானோ? [QE]
25. [QS]நிலத்தை மட்டமாக்கியபின் வெந்தயத்தை விதைத்து, [QE][QS2]சீரகத்தையும் தூவமாட்டானோ? [QE][QS]கோதுமையை அதற்குரிய இடத்திலும், [QE][QS2]வாற்கோதுமையை அதற்குரிய பாத்தியிலும், [QE][QS2]கம்பை அதற்குரிய வயலிலும் விதைக்கமாட்டானோ? [QE]
26. [QS]அவனுடைய இறைவன் அவனுக்கு போதித்து, [QE][QS2]சரியான வழியை அவனுக்குக் கற்ப்பிக்கிறார் அல்லவோ? [QE][PBR]
27. [QS]வெந்தயம் சம்மட்டியால் அடிக்கப்படுவதுமில்லை, [QE][QS2]சீரகம் வண்டிச் சில்லால் மிதிக்கப்படுவதுமில்லை. [QE][QS]வெந்தயம் கோலினாலும், [QE][QS2]சீரகம் தடியினாலுமே அடித்தெடுக்கப்படுகின்றன. [QE]
28. [QS]அப்பம் செய்வதற்குத் தானியம் அரைக்கப்படவேண்டும்; [QE][QS2]அதற்காகத் தொடர்ந்து ஒருவன் அதை அரைத்துக்கொண்டே இருப்பதில்லை. [QE][QS]அவன் தனது சூடடிக்கும் வண்டிச் சில்லுகளை அதற்குமேல் செலுத்தியபோதிலும், [QE][QS2]அவனுடைய குதிரைகள் அதை அரைப்பதில்லை. [QE]
29. [QS]இந்த எல்லா அறிவும் சேனைகளின் இறைவனாகிய யெகோவாவிடமிருந்தே வருகின்றன; [QE][QS2]அவர் ஆலோசனையில் ஆச்சரியமானவர், [QE][QS2]ஞானத்தில் சிறந்தவர். [QE]