தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {#1இஸ்ரயேலின் மீட்பு } [PS]அந்த நாளிலே, [PE][QS]யெகோவா விரைந்தோடும் பாம்பை, [QE][QS2]லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை [QE][QS]கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள [QE][QS2]வாளினால் தண்டிப்பார். [QE][QS]அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார். [QE]
2. [PS]அந்த நாளிலே, [PE][QS]“பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்: [QE]
[QS2]3. யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்; [QE][QS2]இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். [QE][QS]ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, [QE][QS2]நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன். [QE]
[QS2]4. நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை. [QE][QS]அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால், [QE][QS2]நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்; [QE][QS2]அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன். [QE]
5. [QS]அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்; [QE][QS2]என்னுடன் சமாதானம் செய்யட்டும், [QE][QS2]ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.” [QE][PBR]
6. [QS]வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி, [QE][QS2]இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து, [QE][QS2]முழு உலகத்தையும் பலனால் நிரப்பும். [QE][PBR]
7. [QS]இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல, [QE][QS2]இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ? [QE][QS]இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல், [QE][QS2]இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே! [QE]
8. [QS]அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்; [QE][QS2]கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல், [QE][QS2]அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார். [QE]
9. [QS]யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும். [QE][QS2]அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே: [QE][QS]அவர் பலிபீடக் கற்களை எல்லாம் [QE][QS2]சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது, [QE][QS]அசேரா தேவதைத் தூண்களோ, [QE][QS2]தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது. [QE]
10. [QS]அரணாக்கப்பட்ட பட்டணம், [QE][QS2]குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது; [QE][QS]அங்கே கன்றுகள் மேயும், [QE][QS2]அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்; [QE][QS2]அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும். [QE]
11. [QS]அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன; [QE][QS2]பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள். [QE][QS]ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்; [QE][QS2]எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை, [QE][QS2]அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை. [QE]
12. [PS]அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள்.
13. அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள். [PE]
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 66
இஸ்ரயேலின் மீட்பு 1 அந்த நாளிலே, யெகோவா விரைந்தோடும் பாம்பை, லிவியாதான் என்னும் அந்த நெளிந்து செல்லும் பாம்பை கர்த்தர் தமது பயங்கரமான பெரிய வலிமையுள்ள வாளினால் தண்டிப்பார். அவர் அந்த கடலில் இருக்கும் வலுசர்ப்பத்தை வெட்டி வீழ்த்துவார். 2 அந்த நாளிலே, “பழம் நிறைந்த திராட்சைத் தோட்டத்தைப் பற்றிப் பாடுங்கள்: 3 யெகோவாவாகிய நானே அதைக் காவல் செய்கிறேன்; இடைவிடாமல் அதற்குத் தண்ணீர் பாய்ச்சுகிறேன். ஒருவரும் அதற்குத் தீங்கு செய்யாதபடி, நான் இரவும் பகலும் அதைக் காவல் செய்கிறேன். 4 நான் இஸ்ரயேலருடன் கோபிக்கவில்லை. அவர்கள் முள்ளுகளும், நெருஞ்சில்களுமாய் இருப்பார்களானால், நான் அவற்றிற்கு விரோதமாகப் போரிட அணிவகுப்பேன்; அவை அனைத்திற்கும் நெருப்பு மூட்டுவேன். 5 அல்லது அவர்கள் என்னிடம் அடைக்கலம்புக வரட்டும்; என்னுடன் சமாதானம் செய்யட்டும், ஆம், என்னுடன் சமாதானம் செய்யட்டும்.” 6 வரப்போகும் நாட்களிலே யாக்கோபு வேர்பற்றி, இஸ்ரயேல் துளிர்த்து, பூத்து, முழு உலகத்தையும் பலனால் நிரப்பும். 7 இஸ்ரயேலர்களைத் தாக்கியவர்களை யெகோவா அடித்ததுபோல, இஸ்ரயேலரையும் அவர் அடித்தாரோ? இஸ்ரயேலர்களைக் கொன்றவர்கள் கொல்லப்பட்டதுபோல், இஸ்ரயேலரும் கொல்லப்பட்டார்களோ? இல்லையே! 8 அவர் போரினாலும், நாடு கடத்துதலினாலும் இஸ்ரயேலருடன் வழக்காடுகிறீர்; கிழக்குக் காற்று வீசும் அந்த நாளில் நடப்பதுபோல், அவர் தனது கோபத்தின் வேகத்தால் அவர்களைச் சிறிது காலத்திற்குத் துரத்துகிறார். 9 யாக்கோபின் குற்றம் இவ்விதமாகவே நிவிர்த்தியாக்கப்படும். அவனுடைய பாவம் நீக்கப்படுவதன் முழுவிலையும் இதுவே: அவர் பலிபீடக் கற்களை எல்லாம் சுண்ணாம்புக் கற்கள்போல் துண்டுகளாக நொறுக்கும்போது, அசேரா தேவதைத் தூண்களோ, தூபங்காட்டும் பீடங்களோ அங்கு விட்டுவைக்கப்படமாட்டாது. 10 அரணாக்கப்பட்ட பட்டணம், குடியிருப்பாரின்றி பாலைவனம்போல் கைவிடப்பட்டு, பாழாகிக் கிடக்கிறது; அங்கே கன்றுகள் மேயும், அங்கேயே அவை படுத்துக்கொள்ளும்; அவை அதன் கொப்புகளை வெறுமையாக்கிவிடும். 11 அதன் மெல்லிய கொப்புகள் காயும்போது அவை முறிக்கப்படுகின்றன; பெண்கள் வந்து அவைகளை எரிப்பதற்கு விறகாகப் பயன்படுத்துகிறார்கள். ஏனெனில், அவர்கள் உணர்வில்லாத மக்கள்; எனவே அவர்களை உண்டாக்கியவர் அவர்கள்மேல் இரக்கம் கொள்ளவில்லை, அவர்களைப் படைத்தவர் அவர்கள்மேல் தயவுகாட்டவில்லை. 12 அந்நாளிலே யெகோவா, ஓடும் நதிதொடங்கி, எகிப்தின் சிற்றாறுவரை தன் கதிரடிப்பைத் தொடங்குவார். இஸ்ரயேலே, நீங்களோ ஒவ்வொருவராகச் சேர்த்தெடுக்கப்படுவீர்கள். 13 அந்நாளிலே பெரிய எக்காளம் ஊதப்படும்; அசீரிய நாட்டில் அழிந்துபோகிறவர்களும், எகிப்தில் நாடுகடத்தப்பட்டவர்களும் வந்து, எருசலேமின் பரிசுத்த மலையில் யெகோவாவை வழிபடுவார்கள்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 27 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References