1. {துதிப்பாடல்} [PS] அந்த நாளிலே யூதா நாட்டில் இந்தப் பாடல் பாடப்படும்: [QBR] நமக்கொரு பலமுள்ள பட்டணம் உண்டு; [QBR2] இறைவன் இரட்சிப்பை, [QBR2] அதன் மதில்களாகவும் பாதுகாப்பாகவும் ஆக்குகிறார். [QBR]
2. வாசல்களைத் திறவுங்கள், [QBR2] நீதியுள்ள நாடு உள்ளே வரட்டும், [QBR2] நேர்மையான நாடு உள்ளே வரட்டும். [QBR]
3. மனவுறுதியுடன் இருப்பவனை [QBR2] நீர் முழுநிறைவான சமாதானத்துடன் வைத்திருப்பீர்; [QBR2] ஏனெனில் அவன் உம்மிலேயே நம்பிக்கை வைத்திருக்கிறான். [QBR]
4. யெகோவாவிடம் என்றென்றும் நம்பிக்கையை வையுங்கள்; [QBR2] ஏனெனில், யெகோவா, யெகோவாவே நித்திய கற்பாறை. [QBR]
5. உயர்வாக வாழ்வோரை அவர் தாழ்த்துகிறார்; [QBR2] உயர்த்தப்பட்ட பட்டணத்தை [QBR] கீழே தள்ளி வீழ்த்துகிறார், [QBR2] அதைத் தரைமட்டமாக்கிப் புழுதியாக்குகிறார். [QBR]
6. கால்கள் அதை மிதிக்கின்றன. [QBR2] ஒடுக்கப்பட்டவர்களின் பாதங்களும், [QBR2] ஏழைகளின் காலடிகளுமே அதை மிதிக்கின்றன.
7. நீதியானவர்களின் பாதை நேர்சீரானது; [QBR2] நீதியாளரே, நீரே நீதியானவர்களின் வழியைச் சீர்படுத்துகிறீர். [QBR]
8. ஆம், யெகோவாவே, உமது சட்டங்களின் வழியில் நடந்து, [QBR2] உமக்குக் காத்திருக்கிறோம்; [QBR] உமது பெயரும் உமது புகழுமே [QBR2] எங்கள் இருதயங்களின் வாஞ்சையாய் இருக்கின்றன. [QBR]
9. இரவிலே என் ஆத்துமா உம்மை ஆர்வத்தோடு தேடுகிறது, [QBR2] காலையிலே என் ஆவி உம்மை வாஞ்சையுடன் தேடுகிறது. [QBR] உமது நியாயத்தீர்ப்புகள் பூமியிலே வரும்போது [QBR2] உலக மக்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வார்கள். [QBR]
10. கொடியவருக்கு கிருபை காண்பிக்கப்படுகிறபொழுதும், [QBR2] அவர்கள் நியாயத்தைக் கற்றுக்கொள்வதில்லை. [QBR] நீதியுள்ள நாட்டிலும் அவர்கள் தொடர்ந்து தீமையையே செய்கிறார்கள்; [QBR2] யெகோவாவின் மாட்சிமையையும் அவர்கள் மதிப்பதில்லை. [QBR]
11. யெகோவாவே, உமது கரம் மேலே உயர்த்தப்பட்டிருக்கிறது, [QBR2] ஆயினும் அதை அவர்கள் காணாதிருக்கிறார்கள். [QBR] உமது மக்களுக்காக நீர் கொண்டிருக்கும் வைராக்கியத்தைக் கண்டு [QBR2] அவர்கள் வெட்கமடையட்டும்; [QBR] உமது பகைவருக்காக ஆயத்தப்படுத்தப்பட்டிருக்கும் நெருப்பு [QBR2] அவர்களைச் சுட்டெரிக்கட்டும்.
12. யெகோவாவே, நீரே எங்களுக்குச் சமாதானத்தை நிலைநாட்டுகிறீர்; [QBR2] நாங்கள் நிறைவேற்றியவற்றை நீரே எங்களுக்காக செய்திருக்கிறீர். [QBR]
13. யெகோவாவே, எங்கள் இறைவனே, [QBR2] உம்மைத்தவிர வேறு ஆளுநர்களும் நம்மை ஆண்டிருக்கிறார்கள்; [QBR2] ஆனால் உமது பெயரை மட்டுமே நாங்கள் கனப்படுத்துகிறோம். [QBR]
14. இப்பொழுது அவர்கள் இறந்துவிட்டார்கள்; [QBR2] இனி அவர்கள் வாழ்வதில்லை, பிரிந்துபோன அந்த ஆவிகள் எழும்புவதில்லை. [QBR] நீர் அவர்களைத் தண்டித்து அழிவுக்கு உட்படுத்தினீர்; [QBR2] அவர்களைப்பற்றிய நினைவையே அழித்துப்போட்டீர். [QBR]
15. நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர்; [QBR2] யெகோவாவே, நீர் நாட்டைப் பெருகப்பண்ணியிருக்கிறீர். [QBR] நீர் உமக்கென்று மகிமையை வென்றெடுத்திருக்கிறீர்; [QBR2] நாட்டின் எல்லைகள் அனைத்தையும் நீர் விரிவாக்கியிருக்கிறீர்.
16. யெகோவாவே, அவர்கள் தமது துன்பத்தில் உம்மிடம் வந்தார்கள்; [QBR2] நீர் அவர்களைச் சீர்ப்படுத்துவதற்காகத் தண்டித்தபோது, [QBR2] அவர்கள் மன்றாடுவதற்குக்கூட பெலனற்று இருந்தார்கள். [QBR]
17. பிரசவிக்க இருக்கின்ற கர்ப்பவதி [QBR2] தனது வேதனையில் துடித்து அழுவதுபோல, [QBR2] யெகோவாவே, நாங்களும் உமது முன்னிலையில் வருந்தி நின்றோம். [QBR]
18. நாங்களும் கர்ப்பந்தரித்து வேதனையில் துடித்தோம்; [QBR2] ஆனால் நாங்கள் காற்றையே பெற்றெடுத்தோம். [QBR] பூமிக்கு இரட்சிப்பை நாங்கள் கொண்டுவரவில்லை, [QBR2] நாங்கள் உலக மக்களைப் பெற்றெடுக்கவுமில்லை.
19. ஆனாலும் மரித்த உமது மக்கள் உயிர்வாழ்வார்கள்; [QBR2] அவர்களின் உடல்கள் உயிர்த்தெழும்பும். [QBR] புழுதியில் வாழ்பவர்களே, [QBR2] எழுந்து மகிழ்ந்து சத்தமிடுங்கள். [QBR] உமது பனி காலைப் பனிபோல் இருக்கிறது; [QBR2] பூமி தனது மரித்தோரைப் பெற்றெடுக்கும்.
20. என் மக்களே, நீங்கள் உங்கள் அறைகளுக்குள் போய், [QBR2] கதவுகளை மூடுங்கள். [QBR] அவருடைய கோபம் கடந்துபோகும்வரை, [QBR2] சற்று நேரம் உங்களை மறைத்துக்கொள்ளுங்கள். [QBR]
21. இதோ, பூமியின் குடிகளை அவர்களுடைய பாவங்களுக்காகத் தண்டிப்பதற்கு, [QBR2] யெகோவா தனது உறைவிடத்தில் இருந்து வருகிறார். [QBR] பூமி தன்மேல் சிந்தப்பட்ட இரத்தத்தை வெளிப்படுத்தும்; [QBR2] அது தன்மேல் கொலைசெய்யப்பட்டவர்களை இனிமேல் மறைக்கப் போவதில்லை. [PE]