தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஏசாயா
1. {#1யெகோவாவுக்குத் துதி } [QS]யெகோவாவே, நீரே என் இறைவன்; [QE][QS2]நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன். [QE][QS]அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்; [QE][QS2]நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி, [QE][QS2]பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர். [QE]
2. [QS]நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; [QE][QS2]அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர். [QE][QS]அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது; [QE][QS2]அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை. [QE]
3. [QS]ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; [QE][QS2]இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும். [QE]
4. [QS]நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; [QE][QS2]வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். [QE][QS]புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும், [QE][QS2]வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர். [QE][QS]முரடர்களின் மூச்சு, [QE][QS2]ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது. [QE]
[QS2]5. அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. [QE][QS]அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; [QE][QS2]மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, [QE][QS2]இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது. [QE][PBR]
6. [QS]சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் [QE][QS2]சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார். [QE][QS2]நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும், [QE][QS]சிறந்த இறைச்சிகளும், [QE][QS2]உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும். [QE]
7. [QS]இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் [QE][QS2]மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; [QE][QS]இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும். [QE]
[QS2]8. மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். [QE][QS]ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள [QE][QS2]கண்ணீரைத் துடைத்துவிடுவார். [QE][QS]அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின் [QE][QS2]அவமானத்தை நீக்கிவிடுவார். [QE][QS]யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார். [QE]
9. [PS]அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், [PE][QS]“நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம், [QE][QS2]இவர் எங்களை மீட்டார். [QE][QS]இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்; [QE][QS2]இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள். [QE][PBR]
10. [QS]யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்; [QE][QS2]வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல், [QE][QS2]மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள். [QE]
11. [QS]நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், [QE][QS2]மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்; [QE][QS]அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும், [QE][QS2]இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார். [QE]
12. [QS]மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை [QE][QS2]அவர் கீழே தள்ளி விழ்த்துவார். [QE][QS]அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே [QE][QS2]தள்ளிப் போடுவார். [QE]

பதிவுகள்

மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 66
யெகோவாவுக்குத் துதி 1 யெகோவாவே, நீரே என் இறைவன்; நான் உம்மைப் புகழ்ந்துயர்த்தி, உமது பெயரைத் துதிப்பேன். அற்புதமான செயல்களைச் செய்திருக்கிறீர்; நீர் பூர்வகாலத்தில் அவைகளை திட்டமிட்டபடி, பரிபூரண உண்மையுடன் நிறைவேற்றியுள்ளீர். 2 நீர் அந்நியரின் பட்டணத்தை இடிபாடுகளின் குவியலாக்கினீர்; அரணான பட்டணத்தைப் பாழாக்கினீர். அந்நியரின் அரண் இனிமேலும் ஒரு பட்டணமாயிராது; அது இனியொருபோதும் திரும்பக் கட்டப்படுவதுமில்லை. 3 ஆகவே வலிமையுள்ள மக்கள் கூட்டங்கள் உம்மை மகிமைப்படுத்துவார்கள்; இரக்கமற்ற நாடுகளின் பட்டணங்கள் உம்மைக் கனம்பண்ணும். 4 நீர் ஏழைகளுக்கு அடைக்கலமாயிருந்தீர்; வறுமையுற்றோரின் துயரில் அவர்களுக்கு அடைக்கலமாயிருந்தீர். புயலிலிருந்து காக்கும் புகலிடமாகவும், வெயிலிலிருந்து காக்கும் நிழலாகவும் இருந்தீர். முரடர்களின் மூச்சு, ஒரு மதிலுக்கு எதிராக வீசும் புயலைப்போல் இருக்கிறது. 5 அது பாலைவன வெப்பத்தைப் போலவும் இருக்கிறது. அந்நியரின் ஆர்ப்பாட்டத்தை நீர் அடக்குகிறீர்; மேகத்தின் நிழலால் வெப்பம் தணிவதுபோல, இரக்கமற்றோரின் பாடலும் அடங்கிப் போகிறது. 6 சேனைகளின் யெகோவா இந்த மலைமேல் எல்லா மக்கள்கூட்டங்களுக்கும் சிறப்பான விருந்தொன்றை ஆயத்தம் பண்ணுவார். நன்றாகப் பதப்படுத்தப்பட்ட பழைய திராட்சை இரசமும், சிறந்த இறைச்சிகளும், உயர்வகை திராட்சை இரசமும் நிறைந்த விருந்தாக அது இருக்கும். 7 இந்த எல்லா மக்கள் கூட்டங்களையும் மூடியிருந்த மூடுதிரையை அவர் இந்த மலையில் அழிப்பார்; இதுவே எல்லா நாடுகளையும் மூடியிருந்த திரைச்சீலையாகும். 8 மரணம் என்றென்றும் இல்லாதபடி அவர் அதை விழுங்கிவிடுவார். ஆண்டவராகிய யெகோவா எல்லா முகங்களிலுமுள்ள கண்ணீரைத் துடைத்துவிடுவார். அவர் பூமியெங்குமுள்ள தன் மக்களின் அவமானத்தை நீக்கிவிடுவார். யெகோவாவே இதைப் பேசியிருக்கிறார். 9 அந்த நாளிலே மக்கள் கூட்டங்கள், “நிச்சயமாக இவரே நம் இறைவன்; நாம் இவரில் நம்பிக்கை வைத்தோம், இவர் எங்களை மீட்டார். இவரே யெகோவா, இவரில் நாம் நம்பிக்கை வைத்தோம்; இவர் கொடுக்கும் இரட்சிப்பில் நாம் மகிழ்ந்து களிகூருவோம்” என்பார்கள். 10 யெகோவாவின் கரம் இந்த சீயோன் மலையில் தங்கும்; வைக்கோல் எருக்களத்தில் மிதிக்கப்படுவதுபோல், மோவாபியர் அவரின்கீழ் மிதிக்கப்படுவார்கள். 11 நீந்துபவன் நீந்துவதற்காகத் தன் கைகளை விரிப்பதுபோல், மோவாபியர் தங்கள் கைகளை விரிப்பார்கள்; அவர்களுடைய கைகளில் திறமை இருந்தபோதிலும், இறைவன் அவர்களுடைய பெருமையைச் சிறுமைப்படுத்துவார். 12 மோவாபின் உயரமான அரண்செய்யப்பட்ட மதில்களை அவர் கீழே தள்ளி விழ்த்துவார். அவைகளை அவர் நிலத்தின் புழுதியில் கீழே தள்ளிப் போடுவார்.
மொத்தம் 66 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 25 / 66
×

Alert

×

Tamil Letters Keypad References