1. {பூமியின் அழிவு} [PS] இதோ, யெகோவா பூமியை அழித்து [QBR2] சீர்குலைக்கப்போகிறார். [QBR] அதன் மேற்பரப்பைப் பாழாக்கி, [QBR2] குடிகளைச் சிதறடிப்பார். [QBR]
2. மக்களைப்போலவே ஆசாரியனுக்கும், [QBR2] வேலைக்காரனைப் போலவே தலைவனுக்கும், [QBR2] வேலைக்காரியைப் போலவே தலைவிக்கும், [QBR2] வாங்குபவனைப் போலவே விற்பவனுக்கும், [QBR2] இரவல் வாங்குபவனைப் போலவே இரவல் கொடுப்பவனுக்கும், [QBR2] கடனாளியைப்போலவே கடன் கொடுப்பவனுக்குமாக [QBR2] எல்லோருக்கும் ஒரேவிதமாகவே நடக்கும். [QBR]
3. பூமி முழுவதும் அழிக்கப்பட்டு [QBR2] முழுமையாகக் கொள்ளையடிக்கப்படும். [QBR] யெகோவாவே இந்த வார்த்தையைப் பேசியிருக்கிறார்.
4. பூமி வறண்டு வாடுகிறது, [QBR2] உலகம் நலிந்து வாடுகிறது; [QBR2] பூமியில் உயர்த்தப்பட்டவர்கள் தளர்ந்து போகிறார்கள். [QBR]
5. பூமி அதன் மக்களால் கறைப்படுத்தப்பட்டிருக்கிறது; [QBR2] அவர்கள் சட்டங்களுக்குக் கீழ்ப்படியவில்லை. [QBR] அவர்கள் அதன் ஒழுங்குவிதிகளைச் சீர்குலைத்து, [QBR2] நித்திய உடன்படிக்கையையும் மீறினார்கள். [QBR]
6. ஆகவே சாபம் பூமியைச் சூழ்ந்து பற்றிப் பிடித்திருக்கிறது. [QBR2] பூமியின் மக்களே தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். [QBR] ஆதலால் பூமியின் குடிகள் எரிக்கப்பட்டுப் போனார்கள். [QBR2] மிகச் சிலரே மீந்திருக்கிறார்கள். [QBR]
7. புதுத் திராட்சை இரசம் வற்றுகிறது, திராட்சைக்கொடி தளர்கிறது; [QBR2] மகிழ்ச்சியாயிருக்கும் இதயங்களெல்லாம் பெருமூச்சு விடுகின்றன. [QBR]
8. மேளத்தின் ஆனந்த ஒலி ஓய்ந்தது, [QBR2] களிகூர்ந்தவர்களின் சத்தமும் நின்றுவிட்டது; [QBR2] யாழின் இன்னிசை அடங்கிற்று. [QBR]
9. இனிமேல் அவர்கள் திராட்சை இரசத்தைப் பாட்டுடன் குடிப்பதில்லை, [QBR2] மதுபானம் அதைக் குடிப்பவருக்குக் கசப்பாய் இருக்கும். [QBR]
10. அழிக்கப்பட்ட பட்டணம் பாழாய்க் கிடக்கிறது; [QBR2] வீடுகளின் நுழைவாசல்கள் ஒவ்வொன்றும் அடைபட்டுக் கிடக்கும். [QBR]
11. அவர்கள் வீதிகளில் திராட்சை இரசத்திற்காக அழுகிறார்கள்; [QBR2] இன்பமெல்லாம் துன்பமாக மாறுகின்றன; [QBR2] சந்தோஷம் அனைத்தும் பூமியினின்று அகற்றப்படுகின்றன. [QBR]
12. பட்டணம் பாழாக விடப்பட்டிருக்கிறது, [QBR2] அதன் வாசல் கதவுகள் துண்டுகளாக நொறுக்கப்பட்டிருக்கின்றன. [QBR]
13. அப்பொழுது ஒலிவமரம் உலுக்கப்பட்டு, [QBR2] பழம் பறித்தபின் சில பழங்கள் மீந்திருப்பது போலவும், [QBR] திராட்சை அறுவடையின்பின் கிளைகளில் [QBR2] சில பழங்கள் மீந்திருப்பது போலுமே [QBR] பூமியின்மேலும், நாடுகளின் இடையேயும் [QBR2] மீந்திருப்போர் மட்டுமே விடப்பட்டிருப்பர்.
14. அவர்கள் தங்கள் குரல்களை உயர்த்தி, மகிழ்ச்சியுடன் சத்தமிடுகிறார்கள்; [QBR2] அவர்கள் மேற்கிலிருந்து யெகோவாவின் மாட்சிமையைப் பாராட்டுகிறார்கள். [QBR]
15. ஆகவே கிழக்கிலே யெகோவாவை மகிமைப்படுத்துங்கள்; [QBR2] கடலின் தீவுகளில் இஸ்ரயேலின் [QBR2] இறைவனாகிய யெகோவாவின் பெயரைப் புகழ்ந்து உயர்த்துங்கள். [QBR]
16. “நீதியுள்ளவருக்கே மகிமை” [QBR2] என்று பாடுவதை பூமியின் கடைசிகளிலிருந்து நாம் கேட்கிறோம். ஆனால் நானோ, “நான் அழிகிறேன், நான் அழிகிறேன் [QBR2] ஐயோ எனக்குக் கேடு! [QBR] துரோகிகள் துரோகம் பண்ணுகிறார்கள்! [QBR2] துரோகிகள் நம்பிக்கைத் துரோகம் செய்கிறார்கள்” என்றேன். [QBR]
17. பூமியின் குடிகளே, [QBR2] பயங்கரமும், படுகுழியும், கண்ணியுமே உங்களுக்காகக் காத்திருக்கின்றன. [QBR]
18. பயங்கரத்தின் சத்தம் கேட்டு ஓடுபவன் [QBR2] படுகுழிக்குள் விழுவான். [QBR] குழியிலிருந்து வெளியேறுபவன் [QBR2] கண்ணியில் அகப்படுவான். வானத்தின் மதகுகள் திறக்கப்பட்டிருக்கின்றன, [QBR2] பூமியின் அஸ்திபாரங்கள் அசைகின்றன. [QBR]
19. பூமி உடைந்து போயிருக்கிறது, [QBR2] பூமி பிளக்கப்பட்டுப் போயிருக்கிறது, [QBR2] பூமி அதிர்ந்து நடுங்குகிறது. [QBR]
20. பூமி போதை கொண்டவன்போல் தள்ளாடுகிறது, [QBR2] அது காற்றில் அடிபடும் கூடாரத்தைப்போல் அசைகிறது; [QBR] மீறுதலின் பாவம் அதன்மேல் அவ்வளவாய் இருப்பதால், [QBR2] ஒருபோதும் திரும்ப எழும்பாது விழுகிறது.
21. அந்த நாளிலே, மேலே வானத்தில் இருக்கும் வல்லமைகளையும், [QBR2] கீழே பூமியில் இருக்கும் [QBR2] அரசர்களையும் யெகோவா தண்டிப்பார். [QBR]
22. இருண்ட அறைக்குள் கட்டப்பட்டுள்ள கைதிகளைப்போல், [QBR2] அவர்கள் ஒன்றுசேர்க்கப்படுவார்கள். [QBR] அவர்கள் சிறையில் அடைக்கப்பட்டு [QBR2] அநேக நாட்களுக்குப்பின் தண்டிக்கப்படுவார்கள். [QBR]
23. சந்திரன் நாணமடையும், [QBR2] சூரியன் வெட்கமடையும்; [QBR] ஏனெனில், சேனைகளின் யெகோவா [QBR2] சீயோன் மலையிலும் எருசலேமிலும் [QBR2] அதன் முதியோர் முன்னிலையில் மகிமையோடு ஆளுகை செய்வார். [PE]