1. {#1பாபிலோனுக்கு எதிரான இறைவாக்கு } [PS]கடல் அருகேயுள்ள பாலைவனத்தைக் குறித்த ஒரு இறைவாக்கு: [PE][QS]புயல்காற்று நெகேவ் பிரதேசமான தென்திசையிலிருந்து வீசுவதுபோல, [QE][QS2]பயங்கர நாடான பாலைவனத்திலிருந்து [QE][QS2]ஒருவன் படையெடுத்து வருகிறான். [QE][PBR]
2. [QS]கொடிய தரிசனம் ஒன்று எனக்குக் காண்பிக்கப்பட்டது: [QE][QS2]துரோகி காட்டிக்கொடுக்கிறான், கொள்ளைக்காரன் கொள்ளையிடுகிறான். [QE][QS]ஏலாமே, தாக்கு! மேதியாவே, முற்றுகையிடு! [QE][QS2]அவள் உண்டுபண்ணிய புலம்பலுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவேன். [QE][PBR]
3. [QS]இதனால் என் உடல் நோவினால் வாதிக்கப்படுகிறது; [QE][QS2]பெண்ணின் பிரசவ வேதனையைப்போல் கடும் வேதனை என்னைப் பிடித்துக்கொண்டது. [QE][QS]நான் கேட்பது என்னைத் தள்ளாடப் பண்ணுகிறது; [QE][QS2]நான் காண்பது என்னைக் குழப்பமடையச் செய்கிறது. [QE]
4. [QS]எனது இருதயம் தயங்குகிறது, [QE][QS2]பயம் என்னை நடுங்கப் பண்ணுகிறது; [QE][QS]நான் எதிர்பார்த்திருந்த மாலைப்பொழுது [QE][QS2]எனக்கு பயங்கரமாயிற்று. [QE][PBR]
5. [QS]அவர்கள் பந்தியை ஆயத்தப்படுத்துகிறார்கள், [QE][QS2]அவர்கள் கம்பளம் விரிக்கிறார்கள், [QE][QS2]அவர்கள் உண்டு குடிக்கிறார்கள். [QE][QS]அதிகாரிகளே, எழும்புங்கள், [QE][QS2]கேடயங்களுக்கு எண்ணெய் பூசுங்கள்! [QE]
6. [PS]யெகோவா எனக்குக் கூறுவது இதுவே: [PE][QS]“நீ போய் காவலாளியை அவனுக்குரிய இடத்தில் அமர்த்து; [QE][QS2]அவன் காண்பதை உனக்குத் தெரிவிக்கும்படி சொல். [QE]
7. [QS]குதிரைக் கூட்டங்களுடன் [QE][QS2]வரும் தேர்களையோ, [QE][QS]கழுதைகளின் மேலோ [QE][QS2]ஒட்டகங்களின் மேலோ ஏறிச்செல்பவர்களையோ காணும்போது, [QE][QS]அவன் முழு எச்சரிக்கையுடன் [QE][QS2]விழிப்பாயிருக்கட்டும்.” [QE]
8. [PS]காவலாளி சிங்கத்தைப்போல் சத்தமிட்டு, [PE][QS]“ஆண்டவனே, நான் பகல்தோறும், காவல் கோபுரத்தில் நிற்கிறேன்; [QE][QS2]ஒவ்வொரு இரவும் எனக்குரிய இடத்திலேயே இருக்கிறேன். [QE]
9. [QS]இதோ குதிரைகள் பூட்டப்பட்ட ஒரு தேரில் ஒருவன் வருகிறான். [QE][QS2]‘பாபிலோன் வீழ்ந்தது, பாபிலோன் வீழ்ந்தது! [QE][QS]அதன் தெய்வங்களின் உருவச்சிலைகள் எல்லாம் [QE][QS2]நிலத்தில் சிதறிக் கிடக்கின்றன!’ [QE][QS]என அவன் பதிலளிக்கிறான்” [QE][QS2]என்று சொன்னான். [QE][PBR]
10. [QS]என் மக்களே, சூடடிக்கும் களத்தில் நசுக்கப்பட்டிருப்பவர்களே, [QE][QS2]இஸ்ரயேலின் இறைவனாகிய [QE][QS]சேனைகளின் யெகோவாவிடமிருந்து [QE][QS2]நான் கேட்டதை உங்களுக்குச் சொல்கிறேன். [QE]
11. {#1ஏதோமுக்கு எதிரான இறைவாக்கு } [PS]தூமாவைப்[* தூமாவை மற்றொரு பெயர் ஏதோம் அதற்கு அமைதி என்று அர்த்தம். ] பற்றிய ஒரு இறைவாக்கு: [PE][QS]சேயீரிலிருந்து ஒருவன் என்னைக் கூப்பிட்டு, [QE][QS2]“காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்? [QE][QS2]காவலாளியே, இரவு முடிய எவ்வளவு நேரமாகும்?” என்று கேட்டான். [QE]
12. [QS]காவலாளி பதிலளித்து, [QE][QS2]“காலை வருகிறது, ஆனால் இரவும் வருகிறது. [QE][QS]நீ கேட்க விரும்பினால் திரும்பவும் வந்து கேள்” [QE][QS2]என்று கூறினான். [QE]
13. {#1அரேபியாவுக்கு எதிரான இறைவாக்கு } [PS]அரேபியாவைப் பற்றிய இறைவாக்கு: [PE][QS]தெதானியரின் வணிகப் பயணிகள் கூட்டமே, [QE][QS2]அரேபியாவின் காடுகளில் முகாமிடுகிறவர்களே, [QE]
[QS2]14. தாகமுள்ளோருக்கு தண்ணீர் கொண்டுவாருங்கள்; [QE][QS]தேமாவில் வசிப்பவர்களே, [QE][QS2]நீங்கள் அகதிகளுக்கு உணவு கொண்டுவாருங்கள். [QE]
15. [QS]அவர்கள் பட்டயங்களுக்கும், [QE][QS2]உருவிய பட்டயத்துக்கும், [QE][QS]நாணேற்றிய வில்லுக்கும், [QE][QS2]போரின் உக்கிரத்துக்கும் பயந்தோடி வருகிறார்கள். [QE]
16. [PS]யெகோவா எனக்கு கூறுவது இதுவே: “ஒப்பந்தத்தில் கூலி வேலைக்கு அமர்த்தப்பட்டவன் தனது வேலை நாட்களைக் கணக்கெடுக்கிறானே; அதுபோல ஒரு வருடத்திற்குள் கேதாரின் எல்லா மகிமையும் முடிவடையும்.
17. வில்வீரரில் தப்பிப் பிழைப்போரும், கேதாரின்[† கேதாரின் என்பது அரேபியாவின் வனப்பகுதி. ] போர்வீரரும், மிகச் சிலராய் இருப்பார்கள்” என்பதாக இஸ்ரயேலின் இறைவனாகிய யெகோவா பேசியிருக்கிறார். [PE]