1. {யெகோவாவின் மலை} [PS] ஆமோஸின் மகன் ஏசாயா, யூதா நாட்டையும், எருசலேம் பட்டணத்தையும் பற்றிக் கண்ட தரிசனம். [PS]
2. கடைசி நாட்களிலே, [QBR] யெகோவாவினுடைய ஆலயத்தின் மலை, [QBR2] எல்லா மலைகளுக்குள்ளும் உயர்ந்ததாக நிலைநிறுத்தப்படும்; [QBR] எல்லா குன்றுகளுக்கு மேலாக உயர்த்தப்படும், [QBR2] எல்லா தேசத்தார்களும் அதை நாடி ஓடி வருவார்கள். [PE][PS]
3. அநேக மக்கள் கூட்டங்கள் வந்து, [QBR] “வாருங்கள், நாம் யெகோவாவின் மலைக்கு ஏறிப்போவோம், [QBR2] யாக்கோபின் இறைவனுடைய ஆலயத்திற்குப் போவோம். [QBR] நாம் அவர் பாதைகளில் நடப்பதற்கு [QBR2] அவர் தம் வழிகளை நமக்கு போதிப்பார்” என்பார்கள். [QBR] சீயோனிலிருந்து அவரது சட்டமும், [QBR2] எருசலேமிலிருந்து யெகோவாவின் வார்த்தையும் வெளிவரும். [QBR]
4. அவர் நாடுளுக்கிடையில் நியாயம் விசாரித்து, [QBR2] அநேக மக்கள் கூட்டங்களின் வழக்குகளைத் தீர்த்துவைப்பார். [QBR] அப்பொழுது அவர்கள் தங்கள் பட்டயங்களை மண்வெட்டிகளாகவும், [QBR2] ஈட்டிகளை அரிவாள்களாகவும் அடித்துச் செய்துகொள்வார்கள். [QBR] அதன்பின் ஒரு நாடு வேறு நாட்டை எதிர்த்து பட்டயத்தை எடுப்பதுமில்லை, [QBR2] போருக்கான பயிற்சியையும் அவர்கள் கற்பதுமில்லை.
5. யாக்கோபின் குடும்பமே, வாருங்கள், [QBR2] யெகோவாவின் வெளிச்சத்தில் நடப்போம்.
6. {யெகோவாவின் நாள்} [PS] யாக்கோபின் குடும்பமான [QBR2] உமது மக்களை நீர் கைவிட்டுவிட்டீர். [QBR] அவர்கள் கிழக்குத் தேசத்தவர்களின் போதனைகளால் நிறைந்து, [QBR2] பெலிஸ்தியரைப்போல் குறிபார்க்கிறவர்களாய் இருக்கிறார்கள். [QBR2] வேற்று நாட்டு மக்களுடன் கைகோர்த்துத் திரிகிறார்கள். [QBR]
7. அவர்களுடைய நாடு வெள்ளியாலும், தங்கத்தாலும், நிறைந்திருக்கிறது; [QBR2] அவர்களுடைய பொக்கிஷங்களுக்கு அளவேயில்லை. [QBR] அவர்களுடைய நாடு குதிரைகளால் நிறைந்திருக்கிறது; [QBR2] அவர்களிடத்தில் தேர்களும் ஏராளமாயிருக்கின்றன. [QBR]
8. அவர்களின் நாடு விக்கிரகங்களால் நிறைந்திருக்கிறது; [QBR2] அவர்கள் தங்களுடைய கைகளினாலும், [QBR2] விரல்களினாலும் செய்தவைகளையே விழுந்து வணங்குகிறார்கள். [QBR]
9. இவற்றால் மனிதன் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படுவான், [QBR2] மனுக்குலமும் தாழ்த்தப்படும்; [QBR2] நீர் அவர்களை மன்னியாதிரும்.
10. யெகோவாவின் பயங்கரத்திற்கும், [QBR2] அவரின் மாட்சிமையின் சிறப்புக்கும் ஒதுங்கி, [QBR2] கன்மலைக்குள் புகுந்து, மண்ணில் ஒளிந்துகொள்ளுங்கள்! [QBR]
11. கர்வமுள்ள மனிதரின் பார்வை தாழ்த்தப்படும், [QBR2] மனிதரின் பெருமையும் தாழ்நிலைக்குக் கொண்டுவரப்படும்; [QBR] அந்த நியாயத்தீர்ப்பின் நாளில் யெகோவா மட்டுமே உயர்த்தப்படுவார்.
12. அகந்தையும் இறுமாப்பும் உள்ள யாவருக்கும், [QBR2] உயர்த்தப்பட்ட அனைத்திற்கும் [QBR] சேனைகளின் யெகோவா நாளொன்றை வைத்திருக்கிறார்; [QBR2] அவர்கள் எல்லோரும் தாழ்த்தப்படுவார்கள். [QBR]
13. அந்த நாளில் லெபனோனிலே ஓங்கி வளர்ந்த எல்லா கேதுரு மரங்களும், [QBR2] பாசானின் எல்லா கர்வாலி மரங்களும், [QBR]
14. உயர்ந்த எல்லா மலைகளும், [QBR2] உயரமான எல்லாக் குன்றுகளும், [QBR]
15. உயர்வான ஒவ்வொரு கோபுரமும், [QBR2] அரண்செய்யப்பட்ட ஒவ்வொரு மதிலும், [QBR]
16. தர்ஷீஸின் கப்பல் [*எபிரெயத்தில் தர்ஷீஸின் கப்பல் அல்லது வியாபாரக் கப்பல். இவை பயணிப்பதற்கும் சரக்குகளை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுத்தப்பட்ட பெரிய படகுகளைக் குறிக்கின்றன] ஒவ்வொன்றும், [QBR2] கம்பீரமான ஒவ்வொரு மரக்கலமும் தாழ்த்தப்படும். [QBR]
17. மனிதரின் கர்வம் அடக்கப்படும், [QBR2] மனிதரின் பெருமையும் தாழ்த்தப்படும். [QBR] அந்த நாளில் யெகோவா மட்டுமே உயர்ந்திருப்பார்; [QBR2]
18. விக்கிரகங்களோ, முழுவதும் இல்லாதொழிந்து போகும்.
19. யெகோவா பூமியை அதிரப்பண்ணுவதற்காக எழும்பும்போது, [QBR2] மக்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், [QBR] யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக [QBR2] கன்மலைகளின் குகைகளுக்குள்ளும், [QBR2] மண்ணிலுள்ள குழிகளுக்குள்ளும் புகுந்துகொள்வார்கள். [QBR]
20. அந்த நாளிலே, மனிதர் தாம் வணங்குவதற்காகச் செய்த [QBR2] வெள்ளி விக்கிரகங்களையும், தங்க விக்கிரகங்களையும் [QBR] பெருச்சாளிகளுக்கும் வவ்வால்களுக்கும் [QBR2] எறிந்துவிடுவார்கள். [QBR]
21. பூமியை அதிரப்பண்ணுவதற்காக யெகோவா எழும்பும்போது, [QBR2] மனிதர்கள் அவருடைய மாட்சிமையின் சிறப்புக்கும், [QBR] யெகோவாவின் பயங்கரத்திற்கும் தப்புவதற்காக, [QBR2] கன்மலைகளின் வெடிப்புகளுக்குள்ளும், [QBR2] பாறைச் சரிவுகளின் கீழும் புகுந்துகொள்வார்கள்.
22. மனிதனில் நம்பிக்கை வைப்பதை நிறுத்துங்கள், [QBR2] அவனுடைய உயிர் அவனுடைய நாசியின் மூச்சில்தானே இருக்கிறது. [QBR2] மதிக்கப்படுவதற்கு அவனில் என்ன ஆற்றல் இருக்கிறது? [PE]