1. {எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு} [PS] எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், [QBR2] இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு! [QBR]
2. இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் [QBR2] கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. விரைந்து செல்லும் தூதுவர்களே, [QBR] உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், [QBR2] தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். [QBR] இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; [QBR2] இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது.
3. உலகத்தில் வாழ்பவர்களும், [QBR2] பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் [QBR] மலைமேல் கொடியேற்றப்படும்போது, [QBR2] அதைக் காண்பீர்கள். [QBR] எக்காளம் முழங்கும்போது [QBR2] அதைக் கேட்பீர்கள். [QBR]
4. யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: [QBR2] “சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், [QBR] அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் [QBR2] நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.” [QBR]
5. ஏனெனில் அறுவடைக்குமுன், [QBR2] திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, [QBR] யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், [QBR2] படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார். [QBR]
6. அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், [QBR2] காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; [QBR] பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், [QBR2] காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும். [PE][PS]
7. உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், [QBR] தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து [QBR2] சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும். [QBR] இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; [QBR2] இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும். [PE]