1. {#1எத்தியோப்பியாவுக்கு எதிரான இறைவாக்கு } [QS]எத்தியோப்பிய நதிகளுக்கு அப்பால், [QE][QS2]இரைச்சலையுடைய செட்டைகளின் நாடே, ஐயோ உனக்குக் கேடு! [QE]
2. [QS]இந்த நாடு நாணல் படகுகளில் தண்ணீரின்மேல் [QE][QS2]கடல் வழியாகத் தூதுவரை அனுப்புகிறது. [QE][PBR] [QS]விரைந்து செல்லும் தூதுவர்களே, [QE][QS]உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், [QE][QS2]தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடம் போங்கள். [QE][QS]இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; [QE][QS2]இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. [QE][PBR]
3. [QS]உலகத்தில் வாழ்பவர்களும், [QE][QS2]பூமியின் குடிமக்களே, நீங்கள் யாவரும் [QE][QS]மலைமேல் கொடியேற்றப்படும்போது, [QE][QS2]அதைக் காண்பீர்கள். [QE][QS]எக்காளம் முழங்கும்போது [QE][QS2]அதைக் கேட்பீர்கள். [QE]
4. [QS]யெகோவா என்னிடம் கூறுவது இதுவே: [QE][QS2]“சூரிய ஒளியின் இளஞ்சூட்டைப் போலவும், [QE][QS]அறுவடைகால வெப்பத்தின்போது வரும் மூடுபனிபோலவும் [QE][QS2]நான் என்னுடைய உறைவிடத்தில் அமைதியாய் இருந்து பார்ப்பேன்.” [QE]
5. [QS]ஏனெனில் அறுவடைக்குமுன், [QE][QS2]திராட்சை பூத்து, காய்த்து, பழங்களாகும்போது, [QE][QS]யெகோவா எத்தியோப்பியரை தளிர்களாகவும், [QE][QS2]படரும் கிளைகளாகவும் அரிவாள்களால் வெட்டி அப்புறப்படுத்தி விடுவார். [QE]
6. [QS]அவையெல்லாம் இரைபிடிக்கும் மலைகளின் பிணந்தின்னும் பறவைகளுக்கும், [QE][QS2]காட்டு மிருகங்களுக்கும் விடப்படும்; [QE][QS]பிணந்தின்னும் பறவைகள் கோடைகாலத்திலும், [QE][QS2]காட்டு மிருகங்கள் மாரிகாலத்திலும் அவைகளைத் தின்னும். [QE]
7. [PS]உயரமானவர்களும் மிருதுவான மேனியை உடையவர்களும், [PE][QS]தூரத்திலும் அருகிலும் உள்ளோரை பயமுறுத்திய மக்களிடமிருந்து [QE][QS2]சேனைகளின் யெகோவாவுக்கு அந்நேரத்தில் கொடைகள் கொண்டுவரப்படும். [QE][QS]இவர்கள் வலிமைமிக்கவர்கள், பகைவரை மிதித்து வெற்றிபெறுபவர்கள்; [QE][QS2]இவர்களுடைய நாடு ஆறுகளால் பிரிக்கப்பட்டுள்ளது. [QE][MS]இந்தக் கொடைகள் சேனைகளின் யெகோவாவினுடைய பெயருக்குரிய இடமாகிய சீயோன் மலைக்குக் கொண்டுவரப்படும். [ME]