1. [QS]நாட்டின் ஆளுநனுக்குச் [QE][QS2]செலுத்தும் ஆட்டுக்குட்டிகளை, [QE][QS]நீங்கள் சேலா நாட்டிலிருந்து பாலைவனம் வழியாக [QE][QS2]சீயோன் மகளின் மலைக்கு அனுப்புங்கள். [QE]
2. [QS]கூட்டிலிருந்து கலைக்கப்பட்டு, [QE][QS2]செட்டையடிக்கும் பறவைகளைப்போல் [QE][QS]மோவாபிய பெண்கள், [QE][QS2]அர்னோன் ஆற்றின் துறைகளில் இருக்கிறார்கள். [QE][PBR]
3. [QS]“நீங்கள் ஆலோசனைபண்ணி, [QE][QS2]ஒரு தீர்மானம் எடுங்கள். [QE][QS]நடுப்பகலில் உங்கள் நிழலை இரவு போலாக்குங்கள். [QE][QS2]தப்பியோடி வருபவருக்கு [QE][QS]மறைவிடம் கொடுங்கள். [QE][QS2]ஜனங்களைக் காட்டிக் கொடாதிருங்கள். [QE]
4. [QS]மோவாபிலிருந்து துரத்திவிடப்பட்ட என் மக்கள் உங்களுடன் இருக்கட்டும். [QE][QS2]அவர்களை அழிப்பவர்களிடமிருந்து தப்பும்படி அவர்களுக்குப் புகலிடமாயிருங்கள்.” [QE][PBR] [QS]ஒடுக்குகிறவர்களுக்கு ஒரு முடிவுவரும், [QE][QS2]அழிவும் ஓய்ந்துவிடும்; [QE][QS2]துன்புறுத்துபவன் நாட்டிலிருந்து இல்லாமல் போவான். [QE]
5. [QS]அன்பில் ஒரு அரியணை நிலைநாட்டப்படும். [QE][QS2]தாவீதின் குடும்பத்தைச் சேர்ந்த [QE][QS2]உண்மையுள்ள ஒருவர் அதில் அமர்ந்திருப்பார். [QE][QS]அவர் நியாயத்தீர்ப்புச் செய்ய நீதியை நாடுவார்; [QE][QS2]தாமதியாமல் நியாயம் செய்வார். [QE][PBR]
6. [QS]மோவாபியரின் மேட்டிமையைக் குறித்து கேள்விப்பட்டோம். [QE][QS2]அவர்கள் ஆணவம் பெரிதே! [QE][QS]அகந்தையும், பெருமையும், இறுமாப்பும் உடையவர்கள்; [QE][QS2]அவர்களுடைய தற்புகழ்ச்சிகள் எல்லாம் வெறுமையானவையே. [QE]
7. [QS]ஆகவே மோவாபியர் புலம்புகிறார்கள், [QE][QS2]அவர்கள் மோவாபுக்காக ஒன்றுசேர்ந்து புலம்புகிறார்கள். [QE][QS]கீர்ஹேரேஸேத்தின் திராட்சை அடைகளுக்காகத் [QE][QS2]துக்கத்துடன் அழுது புலம்புகிறார்கள். [QE]
8. [QS]எஸ்போன் வயல்களும் சிப்மாவின் [QE][QS2]திராட்சைக் கொடிகளும் வாடுகின்றன. [QE][QS]நாடுகளின் ஆளுநர்கள் தெரிந்தெடுக்கப்பட்ட [QE][QS2]திராட்சைக் கொடிகளை மிதித்துப் போட்டார்கள். [QE][QS]இவை ஒருகாலத்தில் யாசேர்வரை நீண்டு [QE][QS2]பாலைவனத்தை நோக்கிப் பரந்திருந்தன. [QE][QS]அவைகளின் துளிர்கள் வெளியே படர்ந்து [QE][QS2]கடல்வரை சென்றிருந்தன. [QE]
9. [QS]சிப்மாவின் திராட்சைக் கொடிகளுக்காக யாசேர் அழுவதுபோல் [QE][QS2]நானும் அழுகிறேன். [QE][QS]எஸ்போனே, எலெயாலேயே, [QE][QS2]நான் உன்னை என் கண்ணீரால் நனைக்கிறேன்! [QE][QS]உனது பழங்கள் விளைந்து முதிரும் காலத்திலும், [QE][QS2]உனது அறுவடையின் காலத்திலும் இருக்கும் மகிழ்ச்சியின் சத்தம் அடங்கிற்று. [QE]
10. [QS]பழத்தோட்டங்களிலிருந்த சந்தோஷமும் மகிழ்ச்சியும் நீக்கப்பட்டு விட்டன; [QE][QS2]திராட்சைத் தோட்டங்களில் ஒருவரும் பாடுவதுமில்லை, சத்தமிடுவதுமில்லை; [QE][QS]ஆலைகளில் இரசத்துக்காக பழங்களை மிதிப்பவர்களுமில்லை, [QE][QS2]ஏனெனில் நானே பழம் பிழிவோரின் பூரிப்பை ஓயப்பண்ணினேன். [QE]
11. [QS]மோவாபுக்காக என் இருதயமும், [QE][QS2]கிர் ஹெரெஸிற்காக என் உள்ளமும் யாழின் தொனியைப்போல் புலம்புகின்றன. [QE]
12. [QS]மோவாப் தனது மேடையிலுள்ள தெய்வங்களிடம் சென்று [QE][QS2]களைப்புற்றும், [QE][QS]கோயிலுக்குப்போய் மன்றாடியும் [QE][QS2]அவளுக்கு ஒரு பயனும் இல்லை. [QE]
13. [PS]மோவாபைப் பற்றி யெகோவா முன்பே சொல்லியிருந்த வார்த்தை இதுவே.
14. இப்பொழுதோ யெகோவா சொல்கிறதாவது: “வேலைசெய்ய ஒப்பந்தம் செய்த கூலியாள் தன் நாட்களைக் கணக்கிடுவது போல, மூன்று வருடங்களுக்குள் மோவாபியரின் சிறப்பும், அங்குள்ள பெருந்தொகையான மக்களும் அவமதிக்கப்படுவார்கள். அதில் தப்பியிருப்போர் மிகச் சிலராயும் பெலவீனராயும் இருப்பார்கள்.” [PE]