1. {மோவாபைப் பற்றிய இறைவாக்கு} [PS] மோவாபைப் பற்றி கூறப்பட்ட இறைவாக்கு: [QBR] ஒரே இரவில் மோவாபிலுள்ள ஆர் என்னும் பட்டணம் [QBR2] அழிக்கப்பட்டுப் பாழாயிற்று. [QBR] மோவாபிலுள்ள கீர் பட்டணமும் ஒரே இரவில் [QBR2] அழிக்கப்பட்டுப் பாழாயிற்று. [QBR]
2. தீபோன் மக்கள், அதன் மேடுகளிலுள்ள கோவில்களுக்கு [QBR2] அழுவதற்கென்று போயிருக்கிறார்கள். [QBR2] மோவாப் மக்கள் நேபோவைக் குறித்தும், மேதேபாவைக் குறித்தும் புலம்புகிறார்கள். [QBR] ஒவ்வொருவருடைய தலையும் மொட்டையடிக்கப்பட்டு, [QBR2] ஒவ்வொருவருடைய தாடியும் சிரைக்கப்பட்டிருக்கிறது. [QBR]
3. அவர்கள் துக்கவுடையை உடுத்தியபடி வீதிகளில் நிற்கிறார்கள்; [QBR2] வீட்டுக் கூரைகள் மேலும், [QBR] பொதுமக்கள் கூடும் சதுக்கங்களிலும் புலம்புகிறார்கள். [QBR2] அவர்கள் தேம்பித் தேம்பி அழுகிறார்கள். [QBR]
4. எஸ்போனியரும், எலெயாலேயரும் கூக்குரலிட்டு அழுகிறார்கள், [QBR2] அவர்களுடைய குரல் யாகாசுவரை கேட்கிறது. [QBR] ஆகவே மோவாபியரில் ஆயுதமணிந்தவர்களும் கதறி அழுகிறார்கள்; [QBR2] அவர்கள் இருதயங்கள் சோர்ந்திருக்கின்றன.
5. எனது உள்ளம் மோவாபியருக்காக அழுகிறது; [QBR2] அவர்களுடைய அகதிகள் சோவார் வரைக்கும், [QBR2] எக்லத் ஷெலிஷியாவரைக்கும் தப்பி ஓடுகிறார்கள். [QBR] அவர்கள் லூகித் மலைச்சரிவுகளில் [QBR2] அழுதுகொண்டே ஏறுகிறார்கள். [QBR] ஒரொனாயீமின் வழியில் தங்கி [QBR2] பட்டணத்தின் அழிவைப்பற்றிப் புலம்புகிறார்கள். [QBR]
6. நிம்ரீமின் நீர்நிலைகள் வற்றிப்போயின; [QBR2] புல்லும் வாடிப்போயிற்று, [QBR] பசுமையும் இல்லாமல் போயிற்று. [QBR2] பசுமையான எதுவுமே மீதியாய் விடப்படவில்லை. [QBR]
7. ஆகவே அவர்கள் தேடிச் சேர்த்த செல்வத்தை, [QBR2] அலறிகளின் ஆற்றுக்கு அப்பால் தூக்கிச் செல்கிறார்கள். [QBR]
8. அவர்களுடைய வேதனைக் குரல் மோவாப் எல்லையெங்கும் கேட்கிறது; [QBR2] அவர்களுடைய அலறும் சத்தம் எக்லாயீம்வரை எட்டுகிறது. [QBR2] அவர்களுடைய புலம்பல் பீர் ஏலீம் வரையும் கேட்கிறது. [QBR]
9. தீமோன் பட்டணத்தின் நீர்நிலைகள் இரத்தத்தால் நிரம்பியிருக்கின்றன. [QBR2] ஆனால் நான் தீமோனின்மேல் இன்னும் அதிக வேதனையைக் கொண்டுவருவேன். [QBR] மோவாபிலுள்ள அகதிகள்மீதும், [QBR2] நாட்டில் மீதியாய் இருப்பவர்கள்மீதும் சிங்கத்தை ஏவிவிடுவேன். [PE]