1. {துதியின் கீதங்கள்} [PS] அந்த நாளிலே நீ: [QBR] “யெகோவாவே உம்மைத் துதிப்பேன். [QBR2] என்னில் கோபமாயிருந்தபோதிலும், [QBR] உமது கோபம் தணிந்து [QBR2] என்னைத் தேற்றியிருக்கிறீர். [QBR]
2. நிச்சயமாய் இறைவனே என் இரட்சிப்பு; [QBR2] நான் பயப்படாமல் நம்பிக்கையாயிருப்பேன். [QBR] யெகோவா, யெகோவாவே என் பெலன், என் பாடல்; [QBR2] அவரே எனது இரட்சிப்பும் ஆகினார்” என்று சொல்வாய். [QBR]
3. நீ இரட்சிப்பின் கிணறுகளிலிருந்து [QBR2] மகிழ்வுடன் தண்ணீரை மொண்டுகொள்ளுவாய். [PE][PS]
4. அந்த நாளிலே நீங்கள் சொல்வதாவது: [QBR] “யெகோவாவுக்கு நன்றி செலுத்துங்கள், அவருடைய பெயரைப் போற்றுங்கள்; [QBR2] அவருடைய செயல்களை நாடுகள் மத்தியில் தெரியப்படுத்துங்கள், [QBR2] அவருடைய பெயர் உயர்ந்ததென்று பிரசித்தப்படுத்துங்கள். [QBR]
5. யெகோவா மகிமையான காரியங்களைச் செய்தபடியால் அவரைப் போற்றிப்பாடுங்கள்; [QBR2] உலகம் முழுவதற்கும் இது அறிவிக்கப்படட்டும். [QBR]
6. சீயோனின் மக்களே, ஆனந்த சத்தமிட்டு ஆர்ப்பரித்துப் பாடுங்கள்; [QBR2] ஏனெனில் உங்கள் மத்தியில் இஸ்ரயேலின் பரிசுத்தர் [QBR2] மேன்மையுள்ளவராய் விளங்குகிறார்.” [PE]