1. [QS]அநீதியான சட்டங்களை இயற்றி, [QE][QS2]ஒடுக்குகிற கட்டளைகளைப் பிறப்பிக்கிறவர்களுக்கு ஐயோ கேடு! [QE]
2. [QS]அவர்கள் ஏழைகளின் உரிமைகளைப் பறிப்பதற்கும், [QE][QS2]என் மக்களில் ஒடுக்கப்பட்டோருக்கு நீதி வழங்காதிருப்பதற்கும், [QE][QS]விதவைகளைத் தங்களுக்கு இரையாக்குவதற்கும், [QE][QS2]அநாதைகளின் சொத்தை அபகரிப்பதற்குமே இந்தக் கட்டளைகளைப் பிறப்பிக்கிறார்கள். [QE]
3. [QS]உங்களுக்குத் தண்டனை வரும் நாளிலும், [QE][QS2]தூரத்திலிருந்து அழிவு வரும்போதும் என்ன செய்வீர்கள்? [QE][QS]யாரிடம் உதவிக்கு ஓடுவீர்கள்? [QE][QS2]உங்கள் செல்வங்களை எங்கு வைப்பீர்கள்? [QE]
4. [QS]கைதிகளுக்கிடையில் பதுங்குவதையும், [QE][QS2]கொலையுண்டவர்களுக்கிடையில் விழுவதையும்விட, உங்களுக்கு வேறு கதி இராது. [QE][PBR] [QS]இவையெல்லாம் நடந்தும் அவரது கோபம் தீராமல், [QE][QS2]அவரது கரம் இன்னும் ஓங்கியபடியே இருக்கிறது. [QE]
5. {#1அசீரியாவின்மேல் நியாயத்தீர்ப்பு } [QS]“எனது கோபத்தின் கோலாய் இருக்கிற அசீரியனுக்கு ஐயோ கேடு! [QE][QS2]அவனுடைய கையில் எனது கடுங்கோபத்தின் தண்டாயுதம் இருக்கிறது. [QE]
6. [QS]நான் அவனை இறைவனை மறுதலிக்கிற ஒரு நாட்டுக்கு விரோதமாக அனுப்பி, [QE][QS2]எனக்குக் கோபமூட்டும் மக்களைக் [QE][QS]கொள்ளையிட்டு சூறையாடி, பறித்து, [QE][QS2]தெருவிலுள்ள சேற்றை மிதிப்பதுபோல் அவர்களை மிதித்துப் போடவும் [QE][QS2]நான் அவனுக்கு கட்டளை கொடுக்கிறேன். [QE]
7. [QS]ஆனால் அசீரிய அரசன் எண்ணுவது இதுவல்ல; [QE][QS2]அவனுடைய மனதில் இருப்பதும் இதுவல்ல, [QE][QS]பல நாடுகளை அழித்து [QE][QS2]அவர்களுக்கு ஒரு முடிவைக் கொண்டுவருவதே அவனுடைய நோக்கம். [QE]
8. [QS]அவன் சொல்கிறதாவது, ‘எனது தளபதிகள் எல்லோருமே அரசர்கள் அல்லவா? [QE]
[QS2]9. கல்னோ பட்டணம் கர்கேமிஷைப்போல் ஆகவில்லையா? [QE][QS]ஆமாத் அர்பாத்தைப்போல் ஆகவில்லையா? [QE][QS2]சமாரியா தமஸ்குவைப்போல் ஆகவில்லையா? [QE]
10. [QS]எருசலேமிலும், சமாரியாவிலும் உள்ள உருவச்சிலைகளைவிட [QE][QS2]சிறந்த உருவச்சிலைகளின் அரசுகளை நான் கைப்பற்றினேன். [QE]
11. [QS]சமாரியாவுக்கும் அதன் விக்கிரகங்களுக்கும் செய்ததுபோல, [QE][QS2]எருசலேமுக்கும், அதன் விக்கிரகங்களுக்கும் செய்யமாட்டேனோ?’ ” [QE]
12. [PS]யெகோவா சீயோன் மலைக்கும் எருசலேமுக்கும் விரோதமாக தனது செயல்கள் அனைத்தையும் செய்துமுடித்ததும், “நான் அசீரிய அரசனின் இருதய மேட்டிமைக்கும், அவனுடைய கண்களின் அகங்காரத்துக்கும் அவனைத் தண்டிப்பேன்” என்பார்.
13. ஏனெனில் அவன் சொல்கிறதாவது: [PE][QS]“ ‘எனது கரத்தின் வல்லமையாலும், [QE][QS2]எனது ஞானத்தினாலும் அறிவினாலும் [QE][QS]நான் இதைச் செய்தேன், [QE][QS2]நான் பல நாடுகளின் எல்லைகளை அகற்றினேன், அவர்களுடைய செல்வங்களைச் சூறையாடினேன், [QE][QS2]பெரும் வல்லவனைப்போல் அவர்களின் அரசர்களை அடக்கிக் கீழ்ப்படுத்தினேன். [QE]
14. [QS]ஒருவன் பறவைகளின் கூட்டிற்குள் எட்டிக் கைவிடுவதுபோல், [QE][QS2]நாடுகளின் செல்வத்தை எடுப்பதற்கு என் கை நீட்டப்பட்டது. [QE][QS]கைவிடப்பட்ட முட்டைகளை மனிதர் சேர்ப்பதுபோல், [QE][QS2]எல்லா நாடுகளையும் நான் ஒன்றாகச் சேர்த்தேன். [QE][QS]ஒன்றாவது சிறகை அடிக்கவுமில்லை, [QE][QS2]கூச்சலிடுவதற்காக வாயைத் திறக்கவுமில்லை.’ ” [QE][PBR]
15. [QS]கோடரி தன்னைத் தூக்குபவனைவிட மேலானதோ? [QE][QS2]வாள் தன்னை உபயோகிக்கிறவனுக்கு மேலாகத் தற்பெருமை கொள்ளுமோ? [QE][QS2]அப்படியானால், வீசி அடிப்பதற்காக ஒருவன் ஒரு தடியை எடுக்க, [QE][QS]அந்தத் தடியோ தன்னை எடுத்தவனையே தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே. [QE][QS2]மரத்தாலான தண்டாயுதம், தானாகவே எழுந்து நின்று, [QE][QS2]மரமல்லாத மனிதனைத் தூக்கி சுழற்றுவதுபோல் இருக்குமே. [QE]
16. [QS]ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா [QE][QS2]அவனுடைய பலமுள்ள இராணுவவீரர்களுக்குள் உருக்கும் நோயை அனுப்புவார். [QE][QS]அவனுடைய பகட்டான ஆடம்பரத்தின்கீழ் [QE][QS2]எரியும் சுவாலை போன்ற தீயை மூட்டுவார். [QE]
17. [QS]இஸ்ரயேலின் ஒளியானவர், நெருப்பாகவும், [QE][QS2]அவர்களுடைய பரிசுத்தர் கொழுந்துவிட்டு எரியும் நெருப்பாகவும் வருவார். [QE][QS]அவர் அவனுடைய முட்செடிகளையும், [QE][QS2]அவனுடைய நெருஞ்சில் செடிகளையும் ஒரே நாளில் எரித்துப்போடுவார். [QE]
18. [QS]நோயுற்ற ஒருவன் நலிந்துபோவது போல, [QE][QS2]அவனுடைய காடுகளிலும் வளமுள்ள வயல்களிலும் உள்ள [QE][QS2]செழிப்பு முற்றிலும் அழிந்துவிடும். [QE]
19. [QS]அவனுடைய காடுகளில் மீதமிருக்கும் மரங்களின் தொகை, [QE][QS2]ஒரு சிறுபிள்ளைகூட எண்ணக்கூடியதாய் குறைந்திருக்கும். [QE]
20. {#1இஸ்ரயேலின் மிகுதியானோர் } [QS]அந்த நாளில் இஸ்ரயேலில் மீதியிருப்போரும், [QE][QS2]யாக்கோபின் குடும்பத்தில் தப்பியிருப்போரும் [QE][QS][* அசீரியாவின் அரசன் ]தங்களை முறியடித்தவன்மேல் [QE][QS2]இனியொருபோதும் நம்பிக்கை வைக்கமாட்டார்கள். [QE][QS]ஆனால் இஸ்ரயேலின் பரிசுத்தராகிய யெகோவாவிலேயே [QE][QS2]உண்மையான நம்பிக்கையை வைப்பார்கள். [QE]
21. [QS]மீதியிருப்பவர்கள் திரும்புவார்கள், [QE][QS2]யாக்கோபின் குடும்பத்தில் மீதியிருப்பவர்கள் வல்ல இறைவனிடம் திரும்புவார்கள். [QE]
22. [QS]இஸ்ரயேலே, உன் மக்கள் இப்பொழுது கடற்கரை மணல்போல் இருந்தபோதிலும், [QE][QS2]மீதமிருக்கும் சிலர் மட்டுமே திரும்புவார்கள். [QE][QS]மூழ்கடிக்கும் அழிவு ஒன்று கட்டளையிடப்பட்டிருக்கிறது; [QE][QS2]அது நீதியானது. [QE]
23. [QS]நாடு முழுவதற்கும் கட்டளையிடப்பட்ட அழிவை யெகோவா, [QE][QS2]சேனைகளின் யெகோவா நிறைவேற்றுவார். [QE]
24. [PS]ஆகையால் யெகோவா, சேனைகளின் யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“சீயோனில் வாழும் என் மக்களே, [QE][QS2]எகிப்தியர் செய்ததுபோல, உங்களைப் பிரம்பால் அடித்து, [QE][QS]தண்டாயுதத்தை உயர்த்துகிற [QE][QS2]அசீரியருக்குப் பயப்படவேண்டாம். [QE]
25. [QS]உங்களுக்கு விரோதமாக இருக்கும் என் கோபம், வெகுவிரைவில் முடிந்துவிடும். [QE][QS2]எனது கோபமோ, சீரியர்களுடைய அழிவை நோக்கித் திருப்பப்படும்.” [QE][PBR]
26. [QS]ஓரேப் மலையில் மீதியானியரை அடித்து வீழ்த்தியதுபோல, [QE][QS2]சேனைகளின் யெகோவா அவர்களைச் சவுக்கால் அடிப்பார். [QE][QS]எகிப்தில் செய்ததுபோல, [QE][QS2]தம் கோலை கடலின்மேல் உயர்த்துவார். [QE]
27. [QS]அந்த நாளில் அசீரியனால் உங்களுக்கு உண்டான சுமையோ, [QE][QS2]உங்கள் தோள்களில் இருந்து நீக்கப்படும்; [QE][QS]அவர்களுடைய நுகம் உங்கள் கழுத்திலிருந்து அகற்றப்படும், [QE][QS2]நீங்கள் கொழுத்திருக்கிறபடியால் நுகம் முறிந்துவிடும். [QE][PBR]
28. [QS]அசீரியர் ஆயாத் பட்டணத்திற்குள் செல்கிறார்கள். [QE][QS2]மிக்ரோனு வழியாகப் போகிறார்கள் [QE][QS2]மிக்மாஷாவிலே தமது பொருட்களை வைக்கிறார்கள். [QE]
29. [QS]அவர்கள் கணவாயைத் தாண்டிச் சென்று சொல்கிறதாவது: [QE][QS2]“நாம் கேபாவில் இரவு தங்குவோம்.” [QE][QS]ராமா நடுங்குகிறது; [QE][QS2]சவுலின் பட்டணமாகிய கிபியாவின் மக்கள் பயந்து ஓடுகிறார்கள். [QE]
30. [QS]காலீம் மகளே, ஓலமிடு! [QE][QS2]லாயிஷாவே, கேள்! [QE][QS2]பரிதாபத்திற்குரிய ஆனதோத்தே! [QE]
31. [QS]மத்மேனாவில் உள்ளவர்கள் தப்பி ஓடுகிறார்கள்; [QE][QS2]கேபீம் மக்கள் ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். [QE]
32. [QS]இந்த நாளிலே, அவர்கள் நோபிலே தங்குவார்கள்; [QE][QS2]எருசலேம் மலையிலுள்ள சீயோன் மகளின் [QE][QS]மேட்டுக்கு விரோதமாய், [QE][QS2]கைநீட்டி மிரட்டுவார்கள். [QE][PBR]
33. [QS]பாருங்கள், யெகோவா, சேனைகளின் யெகோவா, [QE][QS2]மிக்க வல்லமையோடு பெரிய கிளைகளை வெட்டிவிடுவார். [QE][QS]பெரு மரங்கள் வீழ்த்தப்படும், [QE][QS2]ஓங்கி வளர்ந்த மரங்கள் தாழ்த்தப்படும். [QE]
34. [QS]அவர் காட்டுப் புதர்களை கோடரியால் வெட்டி வீழ்த்துவார்; [QE][QS2]எல்லாம் வல்ல இறைவனின் முன்னே லெபனோன் வீழ்ந்துவிடும். [QE]