1. {#1இஸ்ரயேல் சுழல்காற்றை அறுவடை செய்தல் } [QS]“உங்கள் உதடுகளில் எக்காளத்தை வையுங்கள்; [QE][QS2]யெகோவாவின் ஆலயத்துக்கு மேலாக ஒரு எதிரி கழுகைப்போல் பறக்கிறான். [QE][QS]ஏனெனில் அவர்கள் எனது உடன்படிக்கையை மீறி, [QE][QS2]எனது சட்டத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்தார்கள். [QE]
2. [QS]‘எங்கள் இறைவனே, நாங்கள் உம்மை அறிந்திருக்கிறோம்!’ என்று [QE][QS2]இஸ்ரயேலர் என்னை நோக்கிக் கதறுகிறார்கள். [QE]
3. [QS]ஆனால் இஸ்ரயேலர் நன்மையானதைப் புறக்கணித்துவிட்டார்கள்; [QE][QS2]அதனால் ஒரு பகைவன் அவர்களைப் பின்தொடர்வான். [QE]
4. [QS]என் மக்கள் எனது சம்மதம் இன்றி அரசர்களை ஏற்படுத்துகிறார்கள்; [QE][QS2]எனது அங்கீகாரம் இல்லாமல், அவர்கள் இளவரசர்களைத் தெரிந்துகொள்கிறார்கள். [QE][QS]அவர்கள் தங்கள் வெள்ளியினாலும், தங்கத்தினாலும் [QE][QS2]தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள்; [QE][QS2]இது அவர்களின் அழிவுக்கே ஏதுவாகும். [QE]
5. [QS]யெகோவா சொல்வதாவது: சமாரியாவே, உன் கன்றுக்குட்டி விக்கிரகத்தை எறிந்துவிடு; [QE][QS2]எனது கோபம் உனக்கெதிராக பற்றியெரிகிறது. [QE][QS]எவ்வளவு காலத்திற்கு இவர்கள் தூய்மையடையாது இருப்பார்கள்? [QE]
[QS2]6. அந்த விக்கிரகம் இஸ்ரயேலிலிருந்து வந்தது; [QE][QS]அது இறைவனல்ல, [QE][QS2]அதை ஒரு கைவினைஞன் செய்தான், [QE][QS]எனவே சமாரியாவின் கன்றுக்குட்டி [QE][QS2]துண்டுதுண்டாக உடைக்கப்படும். [QE][PBR]
7. [QS]“ஏனெனில் அவர்கள் காற்றை விதைத்து, [QE][QS2]சுழல்காற்றை அறுவடை செய்கிறார்கள். [QE][QS]பயிரின் தண்டில் கதிர் இல்லை; [QE][QS2]அதிலிருந்து மாவும் கிடைக்காது. [QE][QS]அது தானியத்தைக் கொடுக்குமானால் [QE][QS2]அவற்றை அந்நியர் விழுங்குவார்கள். [QE]
8. [QS]இஸ்ரயேல் விழுங்கப்பட்டது; [QE][QS2]இப்பொழுது அவர்கள் நாடுகளுக்குள்ளே [QE][QS2]ஒருவருக்கும் பயனற்ற பானையைப்போல் இருக்கிறார்கள். [QE]
9. [QS]அவர்கள் தனிமையில் அலைந்து திரியும் காட்டுக் கழுதைபோல் [QE][QS2]அசீரியாவுக்குப் போய்விட்டார்கள். [QE][QS2]எப்பிராயீமர் தன்னை தன் காதலர்களுக்கு விற்றுப் போட்டார்கள். [QE]
10. [QS]அப்படி அவர்கள் தங்களைப் பிற தேசத்தாருக்குள் விற்றிருந்தாலும், [QE][QS2]இப்பொழுது நான் அவர்களை ஒன்றுசேர்ப்பேன். [QE][QS]வலிமைமிக்க அரசனின் கையின் ஒடுக்குதலின்கீழ், [QE][QS2]அவர்கள் வலிமை குன்றத் தொடங்குவார்கள். [QE][PBR]
11. [QS]“எப்பிராயீம் பாவநிவாரண காணிக்கைகளுக்காகப் பலிபீடங்களைக் கட்டினாலும், [QE][QS2]இவை பாவம் செய்வதற்கான பலிபீடங்களாயின. [QE]
12. [QS]நான் அவர்களின் நலத்திற்காக எனது சட்டத்தைப்பற்றிய [QE][QS2]அநேக காரியங்களை அவர்களுக்கு எழுதிக் கொடுத்தேன்; [QE][QS2]ஆனால் அவர்கள் அவற்றை ஒரு அந்நியமான காரியமாக மதித்தார்கள். [QE]
13. [QS]அவர்கள் எனக்குப் பலிகளைச் செலுத்தி, [QE][QS2]அதன் இறைச்சியை அவர்கள் சாப்பிடுகிறார்கள்; [QE][QS2]ஆனாலும் யெகோவா அவர்களின் செயல்களில் பிரியப்படவில்லை. [QE][QS]இப்பொழுது யெகோவா அவர்களின் கொடுமையை நினைவில்கொண்டு, [QE][QS2]அவர்களுடைய பாவத்திற்காக அவர்களைத் தண்டிப்பார். [QE][QS2]அவர்கள் எகிப்திற்கே திரும்பிப் போவார்கள். [QE]
14. [QS]ஏனெனில் இஸ்ரயேல் தன்னை உண்டாக்கியவரை மறந்து, [QE][QS2]அரண்மனைகளைக் கட்டுகிறது; [QE][QS2]யூதா அநேக பட்டணங்களைச் சுற்றி அரண்களைக் கட்டியிருக்கிறது. [QE][QS]ஆகவே நான் அவர்களுடைய பட்டணங்கள்மேல் நெருப்பை அனுப்புவேன்; [QE][QS2]அது அவர்களுடைய கோட்டைகளைச் சுட்டெரிக்கும்.” [QE]