தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஓசியா
1. {#1மனமாறாத இஸ்ரயேல் } [QS]வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். [QE][QS]அவர் நம்மைக் காயப்படுத்தினார், [QE][QS2]ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். [QE][QS]அவர் நம்மை நொறுக்கினார், [QE][QS2]ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். [QE]
2. [QS]நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி [QE][QS2]இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; [QE][QS2]மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். [QE]
3. [QS]நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; [QE][QS2]நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. [QE][QS]சூரியன் உதிப்பது நிச்சயம்போல, [QE][QS2]அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். [QE][QS]அவர் மழையைப்போலவும், [QE][QS2]பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார். [QE][PBR]
4. [QS]எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? [QE][QS2]யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? [QE][QS]உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், [QE][QS2]விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. [QE]
5. [QS]அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; [QE][QS2]என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; [QE][QS2]என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். [QE]
6. [QS]நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; [QE][QS2]தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். [QE]
7. [QS]ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, [QE][QS2]அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். [QE]
8. [QS]கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; [QE][QS2]அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. [QE]
9. [QS]கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, [QE][QS2]ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, [QE][QS2]வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். [QE]
10. [QS]இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; [QE][QS2]எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, [QE][QS2]இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது. [QE][PBR]
11. [QS]யூதாவே, உனக்கும் [QE][QS2]ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. [QE][PBR] [QS]“என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது, [QE]

பதிவுகள்

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
மனமாறாத இஸ்ரயேல் 1 வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். அவர் நம்மை நொறுக்கினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். 3 நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம்போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார். 4 எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. 5 அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். 6 நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். 7 ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். 8 கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. 9 கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். 10 இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது. 11 யூதாவே, உனக்கும் ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. “என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
×

Alert

×

Tamil Letters Keypad References