தமிழ் சத்தியவேதம்

திறந்தநிலை தமிழ் சமகால பதிப்பு
ஓசியா
1. {மனமாறாத இஸ்ரயேல்} [PS] வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். [QBR] அவர் நம்மைக் காயப்படுத்தினார், [QBR2] ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். [QBR] அவர் நம்மை நொறுக்கினார், [QBR2] ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். [QBR]
2. நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி [QBR2] இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; [QBR2] மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். [QBR]
3. நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; [QBR2] நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. [QBR] சூரியன் உதிப்பது நிச்சயம்போல, [QBR2] அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். [QBR] அவர் மழையைப்போலவும், [QBR2] பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார்.
4. எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? [QBR2] யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? [QBR] உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், [QBR2] விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. [QBR]
5. அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; [QBR2] என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; [QBR2] என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். [QBR]
6. நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; [QBR2] தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். [QBR]
7. ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, [QBR2] அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். [QBR]
8. கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; [QBR2] அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. [QBR]
9. கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, [QBR2] ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். [QBR] அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, [QBR2] வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். [QBR]
10. இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; [QBR2] எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, [QBR2] இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது.
11. யூதாவே, உனக்கும் [QBR2] ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. “என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது, [PE]

குறிப்பேடுகள்

No Verse Added

மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
ஓசியா 6
மனமாறாத இஸ்ரயேல் 1 வாருங்கள், நாம் யெகோவாவிடம் திரும்புவோம். அவர் நம்மைக் காயப்படுத்தினார், ஆயினும், அவரே நம்மை சுகப்படுத்துவார். அவர் நம்மை நொறுக்கினார், ஆயினும், அவரே நம்முடைய காயங்களைக் கட்டுவார். 2 நாம் அவருடைய சமுகத்தில் பிழைத்திருக்கும்படி இரண்டு நாட்களுக்குப்பின்பு அவர் நமக்குப் புத்துயிரூட்டுவார்; மூன்றாம் நாளிலோ நம்மை எழுப்புவார். 3 நாம் யெகோவாவை அறிந்துகொள்வோமாக; நாம் தொடர்ந்து அவரைப்பற்றி அறிய முயற்சிப்போமாக. சூரியன் உதிப்பது நிச்சயம்போல, அவர் தோன்றுவார் என்பதும் நிச்சயம். அவர் மழையைப்போலவும், பூமியை நனைக்கும் வசந்தகால மழையைப்போல் வருவார். 4 எப்பிராயீமே, நான் உன்னை என்ன செய்வேன்? யூதாவே, நான் உன்னை என்ன செய்வேன்? உங்களது அன்பு காலையில் தோன்றும் மேகம்போலவும், விடியும்போது மறைந்துபோகும் பனிபோலவும் இருக்கிறது. 5 அதனால்தான் நான் இறைவாக்கினர்மூலம் உங்களை வெட்டினேன்; என் வாயின் வார்த்தையினால் உங்களைக் கொன்றேன்; என் நியாயத்தீர்ப்பு உங்கள்மேல் ஒளிபோல் வெளிப்படும். 6 நான் பலியை அல்ல, இரக்கத்தையே விரும்புகிறேன்; தகன காணிக்கைகளை அல்ல, இறைவனை அறியும் அறிவையே விரும்புகிறேன். 7 ஆனால், ஆதாமைப்போல் அவர்கள் என் உடன்படிக்கையை மீறி, அங்கே எனக்கு துரோகம் பண்ணினார்கள். 8 கீலேயாத் கொடுமையானவர்களின் பட்டணம்; அது இரத்தம் தோய்ந்த அடிச்சுவடுகளால் கறைப்பட்டிருக்கிறது. 9 கொள்ளையர் கூட்டம் ஒருவனுக்காகப் பதுங்கிக் காத்திருப்பதுபோல, ஆசாரியர்களின் கூட்டமும் இருக்கிறார்கள். அவர்கள் சீகேமுக்குப் போகும் வழியிலே கொலைசெய்து, வெட்கக்கேடான குற்றங்களை செய்கிறார்கள். 10 இஸ்ரயேல் குடும்பத்தாரே, உங்கள் நாட்டில் கொடூரமான செயலைக் கண்டேன்; எப்பிராயீமோ வேசித்தனத்தில் ஈடுபட்டிருக்கிறது, இஸ்ரயேல் தீட்டுப்பட்டிருக்கிறது. 11 யூதாவே, உனக்கும் ஒரு அறுவடை நியமிக்கப்பட்டிருக்கிறது. “என் மக்களின் செல்வங்களை நான் அவர்களுக்குத் திரும்பக் கொடுக்கும்போது,
மொத்தம் 14 அதிகாரங்கள், தெரிந்தெடுத்த அதிகாரம் 6 / 14
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14
Common Bible Languages
West Indian Languages
×

Alert

×

tamil Letters Keypad References