1. {#1இஸ்ரயேலுக்கு எதிரான குற்றச்சாட்டு } [QS]இஸ்ரயேலரே, நீங்கள் யெகோவாவின் வார்த்தையைக் கேளுங்கள்; [QE][QS2]நாட்டில் வாழ்கிற உங்களுக்கு எதிராகக் கொண்டுவரும்படி, [QE][QS2]ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது: [QE][QS]நாட்டில் உண்மையும் அன்பும் இல்லை, [QE][QS2]இறைவனை அறியும் அறிவு இல்லை. [QE]
2. [QS]அங்கே சாபமிடுதலும், பொய்யும், கொலையும், [QE][QS2]களவும், விபசாரமும் மட்டுமே உண்டு; [QE][QS]அவர்கள் எல்லைமீறிப் போகின்றனர், [QE][QS2]இரத்தப்பழிகளோடே இரத்தப்பழிகள் சேருகின்றது. [QE]
3. [QS]இதனால் நாடு துக்கத்தோடிருக்கிறது, [QE][QS2]அங்கு வாழும் யாவரும் நலிந்துபோகிறார்கள். [QE][QS]வெளியின் மிருகங்களும், ஆகாயத்துப் பறவைகளும், [QE][QS2]கடலில் உள்ள மீன்களும் சாகின்றன. [QE][PBR]
4. [QS]ஆசாரியர்களே நீங்கள் ஒரு குற்றச்சாட்டையும் கொண்டுவர வேண்டாம். [QE][QS2]ஒருவன் இன்னொருவனைச் குற்றஞ்சாட்டவும் வேண்டாம். [QE][QS]ஏனெனில் உங்கள் மக்கள் ஆசாரியனுக்கு எதிராகக் [QE][QS2]குற்றச்சாட்டுகளைக் கொண்டுவருகிறவர்கள் போலிருக்கிறார்கள்; [QE][QS2]ஆசாரியர்களே, என் வழக்கு உங்களோடுதான். [QE]
5. [QS]நீங்கள் இரவிலும் பகலிலும் இடறிவிழுகிறீர்கள்; [QE][QS2]இறைவாக்கினரும் உங்களுடன் விழுகிறார்கள். [QE][QS]எனவே நான் உங்கள் தாயை, இஸ்ரயேல் தேசத்தை அழிப்பேன். [QE]
[QS2]6. எனது மக்கள் அறிவில்லாததினால் அழிந்துபோகிறார்கள். [QE][PBR] [QS]“நீங்கள் அறிவைப் புறக்கணித்திருக்கிறீர்கள், [QE][QS2]அதனால் நானும் உங்களை என் ஆசாரியர்களாய் இராதபடிக்கு புறக்கணிப்பேன். [QE][QS]நீங்கள் உங்கள் இறைவனின் சட்டத்தை மறந்தபடியால், [QE][QS2]நானும் உங்கள் பிள்ளைகளை ஆசீர்வதிக்க மறந்துவிடுவேன். [QE]
7. [QS]ஆசாரியர்கள் அநேகராய்ப் பெருகியபோது, [QE][QS2]அவர்கள் எனக்கெதிராக அதிகமாகப் பாவம் செய்கிறார்கள்; [QE][QS]அவர்கள் தங்களுடைய மகிமையான இறைவனை [QE][QS2]வெட்கக்கேடான பாகால் தெய்வத்திற்கு மாற்றினார்கள். [QE]
8. [QS]எனது மக்களின் பாவத்தில் ஆசாரியர்கள் தின்று பிழைத்து, [QE][QS2]அவர்களது கொடுமையில் ஆவலாயிருக்கிறார்கள். [QE]
9. [QS]அக்காலத்தில்: மக்களைப்போலவே ஆசாரியருக்கும் நேரிடும். [QE][QS2]எனவே அவர்களின் தீயவழிகளுக்காக நான் அவர்கள் இரு சாராரையும் தண்டிப்பேன். [QE][QS2]அவர்கள் செயல்களுக்கேற்ப அவர்களுக்கு நான் பதிலளிப்பேன். [QE][PBR]
10. [QS]“அவர்கள் எல்லோரும் சாப்பிடுவார்கள், ஆனால் திருப்தியடையமாட்டார்கள்; [QE][QS2]அவர்கள் வேசித்தனத்தில் ஈடுபட்டாலும் பலுகமாட்டார்கள்; [QE][QS]ஏனெனில் அவர்கள் தங்கள் வேசித்தனத்திற்காக யெகோவாவைக் கைவிட்டார்கள். [QE]
[QS2]11. புது மற்றும் பழைய திராட்சை இரசம் [QE][QS]எனது மக்களின் [QE][QS2]விளங்கிக்கொள்ளும் ஆற்றலை பரித்துவிட்டது. [QE]
12. [QS]எனது மக்கள் மர விக்கிரகத்திடம் ஆலோசனையைக் கேட்கிறார்கள்; [QE][QS2]அவர்களுடைய கோல் பதில் தருமென்றிருக்கிறார்கள். [QE][QS]வேசித்தனத்தின் ஆவி அவர்களை வழிவிலகச் செய்கிறது; [QE][QS2]அவர்கள் தங்கள் இறைவனுக்கு உண்மையற்றவர்களாய் இருக்கிறார்கள். [QE]
13. [QS]அவர்கள் மலையுச்சியில் பலியிட்டு, [QE][QS2]குன்றுகளிலே இன்பமான நிழல் தருகின்ற கர்வாலி, புன்னை, [QE][QS]தேவதாரு ஆகிய மரங்களின் கீழும் [QE][QS2]தகன காணிக்கைகளைப் பலியிடுகிறார்கள். [QE][QS]எனவே உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்கும், [QE][QS2]மருமகள்கள் விபசாரத்திற்கும் திரும்புகிறார்கள். [QE][PBR]
14. [QS]“உங்கள் மகள்கள் வேசித்தனத்திற்குத் திரும்பும்போதும், [QE][QS2]மருமகள்கள் விபசாரம் செய்யும்போதும் [QE][QS]நான் அவர்களைத் தண்டிக்கமாட்டேன். [QE][QS2]ஏனெனில் ஆண்களும் வேசிகளுடன் பாலுறவுகொண்டு, [QE][QS]கோவில் வேசிகளுடன் பலியிடுகிறார்கள், [QE][QS2]அறிவில்லாத அம்மக்கள் [QE][QS2]சீரழிந்து போவார்கள். [QE][PBR]
15. [QS]“இஸ்ரயேலே, நீ விபசாரம் செய்தாலும், [QE][QS2]யூதா நாடாகிலும் குற்றமற்றதாயிருக்கட்டும். [QE][PBR] [QS]“நீ கில்காலுக்குப் போகவேண்டாம்; [QE][QS2]பெத்தாவேனுக்கும் போகவேண்டாம். [QE][QS2]‘யெகோவா இருப்பது நிச்சயமெனில்’ என்று ஆணையிடவும் வேண்டாம். [QE]
16. [QS]இஸ்ரயேலரோ அடங்காத [QE][QS2]இளம் பசுவைப்போல் பிடிவாதமாயிருக்கிறார்கள். [QE][QS]அப்படியிருக்க, யெகோவா எப்படி புல்வெளியில் [QE][QS2]செம்மறியாட்டுக் குட்டிகளை மேய்ப்பதுபோல அவர்களை மேய்க்க முடியும்? [QE]
17. [QS]எப்பிராயீம் விக்கிரகங்களோடு இணைந்துவிட்டான்; [QE][QS2]அவனைத் தனியே விட்டுவிடு! [QE]
18. [QS]அவர்களுடைய மதுபானங்கள் முடிந்துபோனாலும், [QE][QS2]அவர்கள் எப்போதும் தங்கள் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள்; [QE][QS2]அவர்களுடைய ஆளுநர்கள் வெட்கக்கேடான வழிகளை ஆவலுடன் விரும்புகிறார்கள். [QE]
19. [QS]சுழல் காற்று அவர்களை அடித்துக் கொண்டுபோகும், [QE][QS2]அவர்கள் விக்கிரகங்களுக்குப் படைக்கும் பலிகள் [QE][QS2]அவர்களுக்கு வெட்கத்தையே கொண்டுவரும். [QE]