1. {#1மனந்திரும்புதலின் ஆசீர்வாதம் } [QS]இஸ்ரயேலே, உன் இறைவனாகிய யெகோவாவிடம் திரும்பு; [QE][QS2]உன் பாவங்களே நீ விழுந்துபோவதற்குக் காரணமாய் அமைந்தன. [QE]
2. [QS]நீங்கள் உங்கள் வேண்டுதல்களுடன் [QE][QS2]யெகோவாவிடம் திரும்புங்கள்; [QE][QS]நீங்கள் அவரிடம், [QE][QS2]“எங்கள் பாவங்களையெல்லாம் மன்னியும், [QE][QS]எங்களை கிருபையாய் ஏற்றுக்கொள்ளும்; [QE][QS2]அப்பொழுது நாங்கள் எங்கள் உதடுகளின் துதியை [QE][QS2]காளைகளின் பலியாய் செலுத்துவோம் என்று சொல்லுங்கள். [QE]
3. [QS]அசீரியா நாடு எங்களைக் காப்பாற்றமாட்டாது; [QE][QS2]நாங்கள் போர்க் குதிரைகளில் ஏறமாட்டோம். [QE][QS]எங்கள் கைகளினால் நாங்கள் செய்த விக்கிரகங்களை [QE][QS2]‘எங்கள் தெய்வம்’ என இனி ஒருபோதும் சொல்லமாட்டோம்; [QE][QS2]ஏனெனில் உம்மிடமே திக்கற்றவர்கள் கருணை பெறுகிறார்கள் என்று கூறுங்கள்.” [QE][PBR]
4. [QS]“நான் அவர்களுடைய பின்மாற்றத்தைக் குணமாக்குவேன், [QE][QS2]நான் அவர்களில் அதிகமாய் அன்பு செலுத்துவேன், [QE][QS2]எனது கோபம் அவர்களைவிட்டு நீங்கிற்று. [QE]
5. [QS]நான் இஸ்ரயேலுக்குப் பனிபோல் இருப்பேன்; [QE][QS2]அவன் லில்லியைப்போல் பூப்பான். [QE][QS]லெபனோனின் கேதுருபோல் [QE][QS2]வேரூன்றி நிற்பான். [QE]
[QS2]6. அவனுடைய இளந்தளிர்கள் வளரும். [QE][QS]அவனுடைய புகழ் ஒலிவமரத்தைப் போலவும், [QE][QS2]அவனுடைய வாசனை லெபனோனின் கேதுரு போலவும் இருக்கும். [QE]
7. [QS]திரும்பவும் மனிதர்கள் அவனுடைய நிழலில் குடியிருப்பார்கள்; [QE][QS2]அவன் தானியத்தைப்போல் செழிப்பான். [QE][QS]திராட்சைக் கொடியைப்போல் பூப்பான்; [QE][QS2]அவனுடைய புகழ் லெபனோனின் திராட்சை இரசம்போல் இருக்கும். [QE]
8. [QS]எப்பிராயீமுக்கு விக்கிரகங்களுடன் இனியும் வேலை இல்லை; [QE][QS2]இனிமேல் நான் அவனுடைய வேண்டுதலுக்குப் பதில் கொடுத்து, அவனைப் பராமரிப்பேன். [QE][QS]நான் அவர்களுக்குப் பசுமையான தேவதாரு மரம் போலிருக்கிறேன். [QE][QS2]அவர்களுடைய பலன்களின் நிறைவுகளெல்லாம் என்னிடமிருந்தே வருகின்றன.” [QE][PBR]
9. [QS]ஞானமுள்ளவன் யார்? அவனே இவற்றை உணர்ந்துகொள்வான். [QE][QS2]பகுத்தறிவுள்ளவன் யார்? அவனே இவற்றை விளங்கிக்கொள்வான். [QE][QS]யெகோவாவின் வழிகள் நீதியானவைகள்; [QE][QS2]நீதிமான்கள் அவற்றில் நடக்கிறார்கள், [QE][QS2]ஆனால் கலகக்காரர்கள் அவைகளில் இடறி விழுகிறார்கள். [QE]