1. {இஸ்ரயேலுக்கு எதிரான யெகோவாவின் கோபம்} [PS] முன்பு எப்பிராயீம் பேசியபோது மனிதர் நடுங்கினார்கள்; [QBR2] அவன் இஸ்ரயேலில் மேன்மை அடைந்திருந்தான். [QBR2] ஆனால் பாகாலை வணங்கிய குற்றத்தினால் அழிந்துபோனான். [QBR]
2. இப்பொழுதோ அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்கிறார்கள், [QBR2] அவர்கள் தங்கள் வெள்ளியினாலேயே தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள். [QBR] திறமையாய் வடிவமைக்கப்பட்ட அந்த உருவச்சிலைகள் யாவும் [QBR2] கைவினைஞனின் வேலைப்பாடாய் இருக்கின்றன. [QBR] இந்த மக்களைக் குறித்து, [QBR2] “அவர்கள் மனித பலிகளைச் செலுத்துகிறார்கள். [QBR2] கன்றுக்குட்டி விக்கிரகத்தை முத்தமிடுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.” [QBR]
3. ஆகவே, அவர்கள் காலை நேர மூடுபனிபோலவும், [QBR2] அதிகாலைப் பனிபோலவும் மறைந்துபோவார்கள், [QBR2] சூடடிக்கும் களத்திலிருந்து பறக்கும் பதரைப்போலவும் [QBR2] புகைபோக்கியினூடாகப் போகும் புகையைப்போலவும் இருப்பார்கள்.
4. “உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த [QBR2] உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; [QBR] என்னைத்தவிர வேறு இறைவனையும், [QBR2] என்னைத்தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம். [QBR]
5. மிகவும் வெப்பம் நிறைந்த தேசமான [QBR2] பாலைவனத்தில் நான் அவர்களைப் பாதுகாத்தேன். [QBR]
6. நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது, [QBR2] அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள். [QBR2] அதன்பின் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள். [QBR]
7. ஆகவே நான் அவர்களுக்கு சிங்கத்தைப்போல் இருப்பேன்; [QBR2] அவர்களுடைய வழியின் அருகே சிறுத்தையைப்போல் பதுங்கியிருப்பேன். [QBR]
8. தன் குட்டியை இழந்த கரடியைப்போல் [QBR2] நான் அவர்களைத் தாக்கிக் கிழிப்பேன்; [QBR] சிங்கத்தைப்போல் நான் அவர்களை விழுங்குவேன், [QBR2] காட்டுமிருகம் அவர்களைக் கிழித்துப்போடும்.
9. “இஸ்ரயேலே, உனது உதவியாளரான எனக்கு நீ விரோதமாயிருக்கிறபடியால், [QBR2] நீ அழிவை உண்டாக்கிக்கொண்டாய். [QBR]
10. ஆனால் உன்னைக் காப்பாற்றுவதற்கு உன் அரசன் எங்கே? [QBR2] ‘எனக்கு அரசர்களையும் இளவரசர்களையும் கொடும்’ [QBR] என்று கேட்டாயே. [QBR2] உன் பட்டணத்திலுள்ள உன்னுடைய அந்த ஆளுநர்கள் எங்கே? [QBR]
11. எனது கோபத்தில் நான் உனக்கு அரசனைக் கொடுத்தேன்; [QBR2] பின்பு நான் எனது கோபத்தில் அவனை எடுத்துக்கொண்டேன். [QBR]
12. எப்பிராயீமின் குற்றங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன; [QBR2] அவனது பாவங்கள் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. [QBR]
13. பிள்ளை பெறுகிற பெண்ணின் வேதனைக்கொத்த வேதனை அவனுக்கு வருகிறது; [QBR2] அவன் ஞானமில்லாத பிள்ளை; [QBR] பிறக்கும் நேரம் வந்தும் [QBR2] அவன் கருப்பையைவிட்டு வெளியே வராதிருக்கிறான்.
14. “நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; [QBR2] மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். [QBR] மரணமே, உன் வாதைகள் எங்கே? [QBR2] பாதாளமே, உன் அழிவு எங்கே? “இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். [QBR2]
15. இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும், [QBR] யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று [QBR2] பாலைவனத்திலிருந்து பலமாக வீசும். [QBR] அப்பொழுது உனது நீரூற்று வறண்டு, [QBR2] கிணறுகள் காய்ந்து போகும். [QBR] உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள் [QBR2] எல்லாம் கொள்ளையடிக்கப்படும். [QBR]
16. சமாரியர் தமது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தபடியினால், [QBR2] அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். [QBR] அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; [QBR2] அவர்களுடைய குழந்தைகள் நிலத்தில் மோதியடிக்கப்படுவார்கள்; [QBR2] அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.” [PE]