1. {#1இஸ்ரயேலுக்கு எதிரான யெகோவாவின் கோபம் } [QS]முன்பு எப்பிராயீம் பேசியபோது மனிதர் நடுங்கினார்கள்; [QE][QS2]அவன் இஸ்ரயேலில் மேன்மை அடைந்திருந்தான். [QE][QS2]ஆனால் பாகாலை வணங்கிய குற்றத்தினால் அழிந்துபோனான். [QE]
2. [QS]இப்பொழுதோ அவர்கள் அதிகமதிகமாகப் பாவம் செய்கிறார்கள், [QE][QS2]அவர்கள் தங்கள் வெள்ளியினாலேயே தங்களுக்கென விக்கிரகங்களைச் செய்கிறார்கள். [QE][QS]திறமையாய் வடிவமைக்கப்பட்ட அந்த உருவச்சிலைகள் யாவும் [QE][QS2]கைவினைஞனின் வேலைப்பாடாய் இருக்கின்றன. [QE][QS]இந்த மக்களைக் குறித்து, [QE][QS2]“அவர்கள் மனித பலிகளைச் செலுத்துகிறார்கள். [QE][QS2]கன்றுக்குட்டி விக்கிரகத்தை முத்தமிடுகிறார்கள் எனச் சொல்லப்படுகிறது.” [QE]
3. [QS]ஆகவே, அவர்கள் காலை நேர மூடுபனிபோலவும், [QE][QS2]அதிகாலைப் பனிபோலவும் மறைந்துபோவார்கள், [QE][QS2]சூடடிக்கும் களத்திலிருந்து பறக்கும் பதரைப்போலவும் [QE][QS2]புகைபோக்கியினூடாகப் போகும் புகையைப்போலவும் இருப்பார்கள். [QE][PBR]
4. [QS]“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த [QE][QS2]உங்கள் இறைவனாகிய யெகோவா நானே; [QE][QS]என்னைத்தவிர வேறு இறைவனையும், [QE][QS2]என்னைத்தவிர வேறு இரட்சகரையும் நீங்கள் அறியவேண்டாம். [QE]
5. [QS]மிகவும் வெப்பம் நிறைந்த தேசமான [QE][QS2]பாலைவனத்தில் நான் அவர்களைப் பாதுகாத்தேன். [QE]
6. [QS]நான் அவர்களுக்கு உணவு கொடுத்தபோது, [QE][QS2]அவர்கள் திருப்தியடைந்தார்கள்; அவர்கள் திருப்தியடைந்ததும் பெருமை கொண்டார்கள். [QE][QS2]அதன்பின் அவர்கள் என்னை மறந்துவிட்டார்கள். [QE]
7. [QS]ஆகவே நான் அவர்களுக்கு சிங்கத்தைப்போல் இருப்பேன்; [QE][QS2]அவர்களுடைய வழியின் அருகே சிறுத்தையைப்போல் பதுங்கியிருப்பேன். [QE]
8. [QS]தன் குட்டியை இழந்த கரடியைப்போல் [QE][QS2]நான் அவர்களைத் தாக்கிக் கிழிப்பேன்; [QE][QS]சிங்கத்தைப்போல் நான் அவர்களை விழுங்குவேன், [QE][QS2]காட்டுமிருகம் அவர்களைக் கிழித்துப்போடும். [QE][PBR]
9. [QS]“இஸ்ரயேலே, உனது உதவியாளரான எனக்கு நீ விரோதமாயிருக்கிறபடியால், [QE][QS2]நீ அழிவை உண்டாக்கிக்கொண்டாய். [QE]
10. [QS]ஆனால் உன்னைக் காப்பாற்றுவதற்கு உன் அரசன் எங்கே? [QE][QS2]‘எனக்கு அரசர்களையும் இளவரசர்களையும் கொடும்’ [QE][QS]என்று கேட்டாயே. [QE][QS2]உன் பட்டணத்திலுள்ள உன்னுடைய அந்த ஆளுநர்கள் எங்கே? [QE]
11. [QS]எனது கோபத்தில் நான் உனக்கு அரசனைக் கொடுத்தேன்; [QE][QS2]பின்பு நான் எனது கோபத்தில் அவனை எடுத்துக்கொண்டேன். [QE]
12. [QS]எப்பிராயீமின் குற்றங்கள் சேர்த்து வைக்கப்பட்டிருக்கின்றன; [QE][QS2]அவனது பாவங்கள் குறிப்பேட்டில் எழுதப்பட்டுள்ளன. [QE]
13. [QS]பிள்ளை பெறுகிற பெண்ணின் வேதனைக்கொத்த வேதனை அவனுக்கு வருகிறது; [QE][QS2]அவன் ஞானமில்லாத பிள்ளை; [QE][QS]பிறக்கும் நேரம் வந்தும் [QE][QS2]அவன் கருப்பையைவிட்டு வெளியே வராதிருக்கிறான். [QE][PBR]
14. [QS]“நான் அவர்களைப் பாதாளத்தின் வல்லமையினின்றும் விடுவிப்பேன்; [QE][QS2]மரணத்தினின்று மீட்டுக்கொள்வேன். [QE][QS]மரணமே, உன் வாதைகள் எங்கே? [QE][QS2]பாதாளமே, உன் அழிவு எங்கே? [QE][PBR] [QS]“இரக்கத்தை என் கண்களில் நான் காண்பிக்கமாட்டேன். [QE]
[QS2]15. இவன் சகோதரரின் மத்தியில் செழித்தோங்கி இருப்பினும், [QE][QS]யெகோவாவிடமிருந்து ஒரு கீழ்க்காற்று [QE][QS2]பாலைவனத்திலிருந்து பலமாக வீசும். [QE][QS]அப்பொழுது உனது நீரூற்று வறண்டு, [QE][QS2]கிணறுகள் காய்ந்து போகும். [QE][QS]உனது களஞ்சியத்திலிருந்து உனது திரவியங்கள் [QE][QS2]எல்லாம் கொள்ளையடிக்கப்படும். [QE]
16. [QS]சமாரியர் தமது இறைவனுக்கு எதிராகக் கலகம் செய்தபடியினால், [QE][QS2]அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். [QE][QS]அவர்கள் வாளுக்கு இரையாவார்கள்; [QE][QS2]அவர்களுடைய குழந்தைகள் நிலத்தில் மோதியடிக்கப்படுவார்கள்; [QE][QS2]அவர்களுடைய கர்ப்பவதிகள் கிழித்தெறியப்படுவார்கள்.” [QE]