1. [QS]எப்பிராயீம் காற்றை மேய்கிறான், [QE][QS2]நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். [QE][QS2]பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான். [QE][QS]அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்; [QE][QS2]எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான். [QE]
2. [QS]யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது. [QE][QS2]யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்; [QE][QS2]அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார். [QE]
3. [QS]யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே, [QE][QS2]தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்; [QE][QS2]மனிதனானபோது இறைவனோடு போராடினான். [QE]
4. [QS]அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்; [QE][QS2]அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான். [QE][QS]இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு, [QE][QS2]அங்கே நம்முடன் பேசினார். [QE]
5. [QS]சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; [QE][QS2]யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர். [QE]
6. [QS]யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். [QE][QS2]அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்; [QE][QS2]எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள். [QE][PBR]
7. [QS]ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற [QE][QS2]வியாபாரிபோல் இருக்கிறீர்கள்; [QE][QS2]அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான். [QE]
8. [QS]அத்துடன் எப்பிராயீமோ, [QE][QS2]“நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன். [QE][QS]என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில் [QE][QS2]அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.” [QE][PBR]
9. [QS]“உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த [QE][QS2]உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. [QE][QS]நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல, [QE][QS2]நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன். [QE]
10. [QS]அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, [QE][QS2]அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்; [QE][QS2]அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.” [QE][PBR]
11. [QS]கீலேயாத் கொடுமையானதா? [QE][QS2]அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்; [QE][QS]கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா? [QE][QS2]அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள [QE][QS2]கற்குவியலைப்போல் ஆகும். [QE]
12. [QS]யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்; [QE][QS2]இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்; [QE][QS2]அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான். [QE]
13. [QS]யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி, [QE][QS2]இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; [QE][QS2]இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார். [QE]
14. [QS]ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்; [QE][QS2]எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார். [QE][QS2]அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார். [QE]