1. எப்பிராயீம் காற்றை மேய்கிறான், [QBR2] நாள்முழுவதும் கொண்டற்காற்றைப் பின்தொடர்ந்து செல்கிறான். [QBR2] பொய்களையும், வன்செயல்களையும் பெருகப்பண்ணுகிறான். [QBR] அவன் அசீரியாவோடு ஒப்பந்தம் செய்கிறான்; [QBR2] எகிப்திற்கு ஒலிவ எண்ணெய் அனுப்புகிறான். [QBR]
2. யூதாவுக்கு எதிரான ஒரு குற்றச்சாட்டு யெகோவாவிடம் இருக்கிறது. [QBR2] யாக்கோபின் மக்களை அவர்களுடைய வழிகளுக்குத்தக்கதாக அவர் தண்டிப்பார்; [QBR2] அவர்களுடைய செயல்களுக்கேற்றபடி அவர்களுக்குப் பிரதிபலன் செய்வார். [QBR]
3. யாக்கோபு தாயின் கர்ப்பத்திலேயே, [QBR2] தனது சகோதரனின் குதிங்காலைப் பிடித்துக்கொண்டான்; [QBR2] மனிதனானபோது இறைவனோடு போராடினான். [QBR]
4. அவன் தூதனுடனும் போராடி வெற்றிகொண்டான்; [QBR2] அவன் அவருடைய தயவுக்காக அழுது மன்றாடினான். [QBR] இறைவன் அவனைப் பெத்தேலில் கண்டு, [QBR2] அங்கே நம்முடன் பேசினார். [QBR]
5. சேனைகளின் இறைவனாகிய யெகோவா அவரே; [QBR2] யெகோவா என்பது அவரது புகழ்வாய்ந்த பெயர். [QBR]
6. யாக்கோபின் மக்களே, நீங்கள் எல்லோரும் இறைவனிடம் திரும்பிவாருங்கள். [QBR2] அன்பையும் நீதியையும் கடைபிடியுங்கள்; [QBR2] எப்பொழுதும் உங்கள் இறைவனுக்காகக் காத்திருங்கள்.
7. ஆனால் இப்பொழுது நீங்கள் கள்ளத்தராசுகளைப் பயன்படுத்துகிற [QBR2] வியாபாரிபோல் இருக்கிறீர்கள்; [QBR2] அவன் ஏமாற்றுவதையே விரும்புகிறான். [QBR]
8. அத்துடன் எப்பிராயீமோ, [QBR2] “நான் மிகவும் பணக்காரன்; நான் செல்வந்தனாகிவிட்டேன். [QBR] என் செல்வத்தினிமித்தம் அவர்கள் என்னில் [QBR2] அநியாயத்தையோ, பாவத்தையோ கண்டுபிடிக்க முடியாது என்று பெருமைப்படுகிறான்.”
9. “உங்களை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்த [QBR2] உங்கள் இறைவனாகிய யெகோவா நானே. [QBR] நான் உங்களது நியமிக்கப்பட்ட பண்டிகையின் நாட்களில் இருப்பதுபோல, [QBR2] நான் திரும்பவும் உங்களைக் கூடாரங்களில் குடியிருக்கப்பண்ணுவேன். [QBR]
10. அத்துடன் நான் இறைவாக்கினருடன் பேசி, [QBR2] அவர்களுக்கு அநேக தரிசனங்களைக் கொடுத்தேன்; [QBR2] அவர்களைக்கொண்டு உவமைகளினால் பேசினேன்.”
11. கீலேயாத் கொடுமையானதா? [QBR2] அதன் மக்கள் ஒன்றுக்கும் உதவாதவர்கள்; [QBR] கில்காலில் காளைகளைப் பலியிடுகிறார்களா? [QBR2] அவர்களுடைய பலிபீடங்கள் உழுத வயலிலுள்ள [QBR2] கற்குவியலைப்போல் ஆகும். [QBR]
12. யாக்கோபு ஆராமுக்கு ஓடிப்போனான்; [QBR2] இஸ்ரயேல் தனக்கு மனைவியைப் பெறுவதற்காக வேலைசெய்தான்; [QBR2] அவளுக்கான பணத்தைக் கொடுப்பதற்கு செம்மறியாடுகளை மேய்த்தான். [QBR]
13. யெகோவா இறைவாக்கினன் ஒருவனை அனுப்பி, [QBR2] இஸ்ரயேலரை எகிப்திலிருந்து வெளியே கொண்டுவந்தார்; [QBR2] இறைவாக்கினன் மூலம் இஸ்ரயேலரை பராமரித்தார். [QBR]
14. ஆயினும் எப்பிராயீம் யெகோவாவுக்குக் கசப்பாகக் கோபமூட்டியிருக்கிறான்; [QBR2] எனவே அவனுடைய யெகோவா, அவனுடைய இரத்தப்பழியை அவன் மேலேயே சுமத்துவார். [QBR2] அவன் காட்டிய அவமதிப்புக்குத்தக்கதாய் அவனுக்குப் பதில் செய்வார். [PE]