1. {#1யெகோவா இஸ்ரயேலில் அன்பாயிருத்தல் } [QS]“இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; [QE][QS2]எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன். [QE]
2. [QS]ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, [QE][QS2]அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள். [QE][QS]அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு, [QE][QS2]உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். [QE]
3. [QS]எப்பிராயீமைக் கைபிடித்து [QE][QS2]நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே; [QE][QS]ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே [QE][QS2]என்பதை அவர்கள் உணரவில்லை. [QE]
4. [QS]நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் [QE][QS2]மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன். [QE][QS]ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன், [QE][QS2]அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன், [QE][QS2]அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன். [QE][PBR]
5. [QS]“ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள். [QE][QS2]ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ? [QE][QS2]அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ? [QE]
6. [QS]நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால் [QE][QS2]வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து, [QE][QS2]வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும். [QE]
7. [QS]என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள். [QE][QS2]அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும், [QE][QS2]அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன். [QE][PBR]
8. [QS]“ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்? [QE][QS2]இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? [QE][QS]நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்? [QE][QS2]நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்? [QE][QS]என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது; [QE][QS2]என் கருணை பொங்குகிறது. [QE]
9. [QS]ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்; [QE][QS2]நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன். [QE][QS]ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல; [QE][QS2]நான் இறைவன். [QE][QS2]எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன். [QE]
10. [QS]ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; [QE][QS2]அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார். [QE][QS]அவர் கர்ஜிக்கும்போது, [QE][QS2]அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள். [QE]
11. [QS]எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும், [QE][QS2]அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும் [QE][QS2]அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள். [QE][QS]நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்” [QE][QS2]என யெகோவா அறிவிக்கிறார். [QE]
12. {#1இஸ்ரயேலின் பாவம் } [QS]எப்பிராயீமியர் பொய்களுடனும், [QE][QS2]இஸ்ரயேல் குடும்பம் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர். [QE][QS]யூதாவும் உண்மையுள்ள, [QE][QS2]பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான். [QE]