1. {யெகோவா இஸ்ரயேலில் அன்பாயிருத்தல்} [PS] “இஸ்ரயேல் சிறுவனாக இருந்தபோதே, நான் அவனை நேசித்தேன்; [QBR2] எகிப்திலிருந்து நான் என் மகனை அழைத்தேன். [QBR]
2. ஆனால், எவ்வளவு அதிகமாய் நான் அவர்களை அழைத்தேனோ, [QBR2] அவ்வளவு அதிகமாய் அவர்கள் என்னைவிட்டுத் தூரமானார்கள். [QBR] அவர்கள் பாகால் தெய்வங்களுக்குப் பலியிட்டு, [QBR2] உருவச் சிலைகளுக்குத் தூபங்காட்டினார்கள். [QBR]
3. எப்பிராயீமைக் கைபிடித்து [QBR2] நடக்கக் கற்றுக்கொடுத்தவர் நானே; [QBR] ஆனாலும், அவர்களைப் பராமரித்தவர் நானே [QBR2] என்பதை அவர்கள் உணரவில்லை. [QBR]
4. நான் அவர்களை அன்பின் பிணைப்பினாலும் [QBR2] மனித தயவின் கயிறுகளினாலும் வழிநடத்தினேன். [QBR] ஒரு சிறு குழந்தையை கன்னத்தில் தூக்கும் ஒருவரைப்போல இருந்தேன், [QBR2] அவர்களுடைய கழுத்திலிருந்த நுகத்தை அகற்றினேன், [QBR2] அவர்களுக்குக் குனிந்து உணவூட்டினேன்.
5. “ஆனால் அவர்கள் மனந்திரும்ப மறுக்கிறார்கள். [QBR2] ஆகையால் அவர்கள் எகிப்திற்கு திரும்பிப் போகமாட்டார்களோ? [QBR2] அவர்கள்மேல் அசீரியா ஆளுகை செய்யாதோ? [QBR]
6. நிச்சயமாக அவர்களுடைய தீமையான திட்டங்களினால் [QBR2] வாள் அவர்களுடைய பட்டணங்களுக்குள் பாய்ந்து, [QBR2] வாசல் கதவுகளின் தாழ்ப்பாள்களை முறித்துப்போட்டு, அவர்களை அழிக்கும். [QBR]
7. என் மக்கள் என்னைவிட்டு விலகிப்போகத் தீர்மானித்திருக்கிறார்கள். [QBR2] அவர்கள் என்னை உன்னதமானவர் எனக் கூப்பிட்டாலும், [QBR2] அவர்களை எவ்விதத்திலும் உயர்த்தமாட்டேன்.
8. “ஆனாலும் எப்பிராயீமே, எப்படி நான் உன்னைக் கைவிடுவேன்? [QBR2] இஸ்ரயேலே, நான் உன்னை எப்படி ஒப்புக்கொடுப்பேன்? [QBR] நான் எப்படி உன்னை அத்மா பட்டணத்தைப்போல் அழிக்கமுடியும்? [QBR2] நான் எப்படி உன்னை செபோயீமைப்போல் ஆக்கமுடியும்? [QBR] என் இருதயமோ எனக்குள் மாற்றமடைந்திருக்கிறது; [QBR2] என் கருணை பொங்குகிறது. [QBR]
9. ஆகவே எனது கடுங்கோபத்தை செயல்படுத்தமாட்டேன்; [QBR2] நான் திரும்பி எப்பிராயீமை அழிக்கமாட்டேன். [QBR] ஏனெனில் எப்படியிருந்தும் உங்கள் மத்தியில் வாழ்கின்ற பரிசுத்தரான நான் மனிதனல்ல; [QBR2] நான் இறைவன். [QBR2] எனவே நான் கடுங்கோபத்துடன் வரமாட்டேன். [QBR]
10. ஒருகாலத்தில் அவர்கள் யெகோவாவைப் பின்பற்றுவார்கள்; [QBR2] அவர் சிங்கத்தைப்போல் கர்ஜிப்பார். [QBR] அவர் கர்ஜிக்கும்போது, [QBR2] அவருடைய பிள்ளைகள் மேற்குத் திசையிலிருந்து நடுக்கத்துடன் வருவார்கள். [QBR]
11. எகிப்திலிருந்து பறவைகள் வருவதுபோலவும், [QBR2] அசீரியாவிலிருந்து புறாக்கள் வருவதுபோலவும் [QBR2] அவர்கள் நடுக்கத்துடன் வருவார்கள். [QBR] நான் அவர்களை அவர்களுடைய வீடுகளில் குடியமர்த்துவேன்” [QBR2] என யெகோவா அறிவிக்கிறார்.
12. {இஸ்ரயேலின் பாவம்} [PS] எப்பிராயீமியர் பொய்களுடனும், [QBR2] இஸ்ரயேல் குடும்பம் வஞ்சனையுடனும் என்னைச் சூழ்ந்துகொண்டிருக்கின்றனர். [QBR] யூதாவும் உண்மையுள்ள, [QBR2] பரிசுத்தரான இறைவனுக்கு எதிராக அடங்காமல் எதிர்த்து நிற்கிறான். [PE]