1. [QS]இஸ்ரயேல் ஒரு படரும் திராட்சைக்கொடி, [QE][QS2]அவன் தனக்கென கனிகொடுக்கிறது. [QE][QS]அவனுடைய கனிகள் பெருகியபோது, [QE][QS2]அதற்கேற்ற மிகுதியான பலிபீடங்களைக் கட்டினான். [QE][QS]அவனுடைய நாடு செழித்தபோது, [QE][QS2]தனது புனிதக் கற்களை நன்றாக அலங்கரித்தான். [QE]
2. [QS]அவர்கள் இருதயம் வஞ்சனையுள்ளது. [QE][QS2]இப்பொழுது அவர்கள் தங்கள் குற்றத்தைச் சுமக்கவேண்டும். [QE][QS]யெகோவா அவர்களுடைய மேடைகளை இடித்து, [QE][QS2]புனிதக் கற்களை அழித்துப்போடுவார். [QE][PBR]
3. [QS]அப்பொழுது அவர்கள், “நாங்கள் யெகோவாவிடம் பயபக்தியாயிருக்காதபடியால், [QE][QS2]எங்களுக்கு அரசன் இல்லை; [QE][QS]அரசன் இருந்தாலுங்கூட, [QE][QS2]அவனால் எங்களுக்காக என்ன செய்யமுடியும்?” எனச் சொல்வார்கள். [QE]
4. [QS]அவர்கள் அநேக வாக்குத்தத்தங்களைக் கொடுக்கிறார்கள், [QE][QS2]பொய் சத்தியங்களையும் [QE][QS2]ஒப்பந்தங்களையும் செய்கிறார்கள்; [QE][QS]எனவே உழுத வயலில் உள்ள நச்சுப் பயிரைப்போல் [QE][QS2]வழக்குகள் தோன்றுகின்றன. [QE]
5. [QS]சமாரியாவில் வாழ்கிற மக்கள் [QE][QS2]பெத்தாவேனில் இருக்கிற கன்றுக்குட்டி விக்கிரகத்திற்குப் பயப்படுகிறார்கள். [QE][QS]அது அவர்களிடமிருந்து எடுக்கப்பட்டு, [QE][QS2]நாடுகடத்தப்படும். [QE][QS]அதன் மக்கள் அதற்காகத் துக்கங்கொண்டாடுவார்கள்; [QE][QS2]அதன் மகிமையில் மகிழ்ச்சிகொண்ட விக்கிரக பூசாரிகளும் துக்கங்கொண்டாடுவார்கள். [QE]
6. [QS]அது அசீரியாவின் பேரரசனுக்குக் கப்பமாக [QE][QS2]அங்கு கொண்டுபோகப்படும். [QE][QS]அதைக்குறித்து எப்பிராயீம் அவமானமடையும். [QE][QS2]இஸ்ரயேல் தன் சொந்த ஆலோசனையினால் வெட்கமடையும். [QE]
7. [QS]சமாரியாவும் அதன் அரசனும் [QE][QS2]தண்ணீரில் மிதக்கும் குச்சியைப்போல் அள்ளுண்டு போவார்கள். [QE]
8. [QS]இஸ்ரயேலின் வேறு தெய்வங்களுக்குப் பலியிட்ட மேடைகள் அழிக்கப்படும்; [QE][QS2]இதுவே இஸ்ரயேலின் பாவம். [QE][QS]முட்செடிகளும் நெருஞ்சில்களும் வளர்ந்து [QE][QS2]அதன் மேடைகளை மூடும். [QE][QS]அப்பொழுது அவர்கள் மலைகளைப் பார்த்து, “எங்களை மூடுங்கள்!” என்றும், [QE][QS2]குன்றுகளைப் பார்த்து, “எங்கள்மேல் விழுங்கள்!” என்றும் சொல்வார்கள். [QE][PBR]
9. [QS]இஸ்ரயேலே, கிபியாவின் நாட்கள் தொடங்கி நீ பாவம் செய்தாய்; [QE][QS2]அதிலேயே நீ இன்னும் நிலைகொண்டிருக்கிறாய். [QE][QS]கிபியாவிலே தீமை செய்தவர்கள்மேல் [QE][QS2]யுத்தம் வரவில்லையோ? [QE]
10. [QS]ஆகவே நான் விரும்புகின்றபோது உன்னைத் தண்டிப்பேன்; [QE][QS2]உங்கள் இரட்டிப்பான பாவங்களுக்காக உங்களை விலங்கிடுவதற்கென, [QE][QS2]பிறநாடுகள் உங்களுக்கு விரோதமாய் ஒன்றுகூடும். [QE]
11. [QS]எப்பிராயீம் சூடு அடிக்க விரும்புகின்ற [QE][QS2]பயிற்றுவிக்கப்பட்ட கன்னிப்பசு. [QE][QS]நான் அதன் கழுத்தின்மேல் பாரத்தை வைக்கவில்லை. [QE][QS2]ஆனால் இப்பொழுது நான் அதன் அழகான கழுத்தின்மேல் ஒரு நுகத்தை வைப்பேன். [QE][QS]நான் எப்பிராயீமை கடுமையான வேலைக்கு நடத்துவேன்; [QE][QS2]யூதாவும் நிலத்தை உழவேண்டும், [QE][QS2]யாக்கோபின் எல்லா மக்களும் நிலத்தின் மண் கட்டிகளை உடைக்கவேண்டும். [QE]
12. [QS]உங்கள் இருதயங்கள் உழப்படாத வயல்போல் கடினமாயிருக்கிறதே; [QE][QS2]ஆகவே உங்களுக்கென நீதியை விதையுங்கள், [QE][QS]அன்பின் பலனை அறுவடை செய்யுங்கள். [QE][QS2]உழப்படாத உங்கள் நிலங்களைக் கொத்துங்கள், [QE][QS]ஏனெனில் யெகோவா வந்து உங்கள்மேல் நியாயத்தை பொழியும் வரைக்கும் [QE][QS2]இது யெகோவாவைத் தேடும் காலமாயிருக்கிறது. [QE]
13. [QS]ஆனால் நீங்கள் கொடுமையை உழுதீர்கள், [QE][QS2]தீமையை அறுவடை செய்தீர்கள், [QE][QS2]வஞ்சனையின் பலனை சாப்பிட்டீர்கள். [QE][QS]ஏனெனில், நீங்கள் உங்கள் சொந்த பெலத்திலும், [QE][QS2]உங்கள் அநேக போர் வீரர்களிலும் நம்பிக்கையாயிருந்தீர்கள். [QE]
14. [QS]அதனால் உங்கள் மக்களுக்கு எதிராக யுத்தம் எழும்பும், [QE][QS2]உங்கள் கோட்டைகளெல்லாம் அழிக்கப்படும். [QE][QS]யுத்தநாளில் பெத்தார்பேலை சல்மான் அழித்தபோது, [QE][QS2]தாய்மார் தங்கள் பிள்ளைகளுடன் தரையில் மோதி அடிக்கப்பட்டதுபோல இதுவும் இருக்கும். [QE]
15. [QS]பெத்தேலே, உனது கொடுமை பெரிதாயிருப்பதனால் [QE][QS2]உனக்கு இப்படி நடக்கும். [QE][QS]அந்த நாள் வருகிறபோது, [QE][QS2]இஸ்ரயேலின் அரசன் முற்றிலும் அழிக்கப்படுவான். [QE]