1. இறைவாக்கினன் ஆபகூக் என்பவனுக்கு வெளிப்படுத்தப்பட்ட இறைவாக்கு.
2. {ஆபகூக்கின் முறைப்பாடு} [PS] யெகோவாவே, நான் எவ்வளவு காலத்திற்கு உதவிகேட்டு உம்மைக் கூப்பிட வேண்டும்? [QBR2] நீரோ இன்னும் செவிகொடாமல் இருக்கிறீரே. [QBR] எவ்வளவு காலத்திற்கு உம்மிடம், “வன்முறை” எனக் கதறவேண்டும்? [QBR2] இன்னும் காப்பாற்றாமல் இருக்கிறீரே. [QBR]
3. நீர் ஏன் என்னை அநீதியைப் பார்க்கும்படி செய்கிறீர்? [QBR2] ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொண்டிருக்கிறீர்? [QBR] அழிவும், வன்செயலும் என் முன்னே இருக்கின்றனவே; [QBR2] போராட்டமும், வாதையும் பெருகுகின்றன. [QBR]
4. ஆதலால் சட்டம் வலுவிழந்துள்ளது, [QBR2] நீதி நடைமுறைப் படுத்தப்படுவதில்லை. [QBR] கொடுமையானவர்கள் நேர்மையானவர்களை ஒடுக்குகிறார்கள். [QBR2] அதனால் நீதி புரட்டப்படுகிறதே.
5. {யெகோவாவின் பதில்} [PS] “பிற நாடுகளைக் கவனித்துப் பாருங்கள், [QBR2] பார்த்து முழுவதுமாய் வியப்படையுங்கள். [QBR] உங்களுக்குச் சொன்னாலும், [QBR2] உங்களால் நம்பமுடியாத ஒரு செயலை, [QBR2] உங்கள் நாட்களிலேயே நான் செய்யப்போகிறேன். [QBR]
6. இரக்கமற்றவர்களும், [QBR2] மூர்க்கம் கொண்டவர்களுமான பாபிலோனியரை [*பாபிலோனியரை அல்லது கல்தேயர்கள்] நான் எழுப்புகிறேன். [QBR] அவர்கள் தங்களுக்குச் சொந்தமல்லாத இருப்பிடங்களைக் கைப்பற்றும்படி, [QBR2] பூமியெங்கும் அணியணியாய் செல்வார்கள். [QBR]
7. அவர்கள் பயமும் திகிலும் ஊட்டும் மக்கள்; [QBR2] அவர்கள் தாங்கள் செய்வதே சரியானதும் சட்டமும் என்று எண்ணுகிறவர்கள். [QBR2] தங்கள் சொந்த மேன்மையை மாத்திரமே தேடுகிறவர்கள். [QBR]
8. அவர்களுடைய குதிரைகள் சிறுத்தைப் புலிகளைவிட வேகமானவை, [QBR2] சாயங்காலத்தில் நடமாடும் ஓநாயிலும் பயங்கரமானவை. [QBR] அவர்களுடைய குதிரைப்படை தலைதெறிக்க ஓடிவரும்; [QBR2] அவர்களுடைய குதிரைவீரர்களோ, தொலைவிலிருந்து வருகிறார்கள். [QBR] இரைமேல் பாயும் கழுகைப்போல, அவர்கள் வருகிறார்கள்; [QBR2]
9. அவர்கள் எல்லோரும் வன்முறையை நாடியே வருகிறார்கள். [QBR] அவர்களுடைய படைகள், பாலைவனக் காற்றுப்போல் முன்னேறிச் சென்று, [QBR2] கைதிகளை மணலைப்போல வாரிச் சேர்த்துக்கொள்வார்கள். [QBR]
10. அவர்கள் அரசர்களை கேலிசெய்து, [QBR2] ஆளுநர்களை ஏளனம் செய்கிறார்கள். [QBR] அரண்செய்த பட்டணங்களையெல்லாம் பார்த்து நகைக்கிறார்கள்; [QBR2] முற்றுகை அரண்களை மண்ணினால் கட்டி, அவற்றைக் கைப்பற்றுகிறார்கள். [QBR]
11. காற்றைப்போல் கடந்து போகிறார்கள். [QBR2] அவர்கள் தங்கள் சுயபெலத்தையே தெய்வமாகக் கொண்டிருக்கும் குற்றவாளிகள்.”
12. {ஆபகூக்கின் இரண்டாவது முறைப்பாடு} [PS] யெகோவாவே, என் இறைவனே, என் பரிசுத்தமானவரே, [QBR2] நீர் நித்தியத்தில் இருந்தே உள்ளவர் அல்லவோ? [QBR2] நாங்களும் அழிக்கப்பட்டுப் போவோமா? [QBR] யெகோவாவே, எங்கள் நலனுக்காகத்தானே நியாயத்தீர்ப்பை நிறைவேற்ற [QBR2] நீர் பாபிலோனியரை நியமித்திருக்கிறீர்; [QBR2] கன்மலையே, எங்களைத் தண்டிக்க நீர் அவர்களை அமர்த்தியிருக்கிறீர். [QBR]
13. உம்முடைய கண்கள் அதிக தூய்மையானதால், [QBR2] அவை தீமையைப் பார்ப்பதில்லை; [QBR] அநியாயத்தை சகிக்க உம்மால் முடியாது. [QBR2] அப்படியானால் துரோகிகளை நீர் ஏன் சகிக்கிறீர்? [QBR] கொடியவர்களான பாபிலோனியர் தங்களைவிட நீதியானவர்களை விழுங்கும்போது [QBR2] நீர் ஏன் மவுனமாய் இருக்கிறீர்? [QBR]
14. நீர் எங்களை கடலில் உள்ள மீன்களைப் போலவும், [QBR2] தலைவனில்லாத கடல் பிராணிகளைப் போலவுமா காண்கிறீர்? [QBR]
15. பாபிலோனியனான கொடிய எதிரிகள் எல்லோரையும் தூண்டிலினால் இழுக்கிறான். [QBR2] தனது வலையினால் அவர்களைப் பிடிக்கிறான். [QBR] தனது இழுவை வலையினால் அவர்களை ஒன்றாய் அள்ளிச் சேர்க்கிறான். [QBR2] இவ்விதம் அவன் மகிழ்ச்சிகொண்டு களிகூருகிறான். [QBR]
16. ஆதலினால் அவன் தனது வலைகளுக்குப் பலியிட்டு, [QBR2] தனது இழுவை வலைக்கு தூபங்காட்டுகிறான். [QBR] ஏனெனில் தனது வலையினால் அவன் செல்வச் சிறப்புடன் வாழ்ந்து [QBR2] சிறந்த உணவைச் சாப்பிட்டு மகிழ்கிறான். [QBR]
17. அப்படியாயின் அவன் நாடுகளை இரக்கமின்றி அழிக்க இடங்கொடுப்பீரோ? [QBR2] அவன் தனது வலையை தொடர்ந்து நிரப்பிக்கொண்டே இருக்கவேண்டுமோ? [PE]