1. {யாக்கோபு ஆசீர்வதித்தல்} [PS] பின்பு யாக்கோபு தன் மகன்களைக் கூப்பிட்டு அவர்களிடம் சொன்னதாவது: “நீங்கள் எல்லோரும் என்னைச் சுற்றி நில்லுங்கள், இனிவரப்போகும் நாட்களில் நடக்கப்போவதை நான் உங்களுக்குச் சொல்லப்போகிறேன். [QBR]
2. “யாக்கோபின் மகன்களே, கூடிவந்து கேளுங்கள்; [QBR2] உங்கள் தகப்பன் இஸ்ரயேல் சொல்வதைக் கேளுங்கள்.
3. “ரூபன், நீ என் முதற்பேறானவன், [QBR2] நீ வலிமையும் என் பெலனின் முதல் அடையாளமுமானவன், [QBR2] நீ மதிப்பில் சிறந்தவன், நீ வல்லமையிலும் சிறந்தவன். [QBR]
4. தண்ணீரைப்போல் தளம்புகிறவனே, நீ இனிமேல் மேன்மை அடையமாட்டாய்; [QBR2] ஏனெனில், நீ உன்னுடைய தகப்பனின் படுக்கைக்குப்போய், [QBR2] என் கட்டிலைத் தீட்டுப்படுத்தினாய்.
5. “சிமியோனும், லேவியும் சகோதரர்கள். [QBR2] அவர்களின் வாள்கள் வன்முறையின் ஆயுதங்கள். [QBR]
6. நான் அவர்களுடைய ஆலோசனைக்கு உடன்படாமலும், [QBR2] அவர்களுடைய கூட்டத்தில் சேராமலும் இருப்பேனாக. [QBR] ஏனெனில், அவர்கள் தங்கள் கோபத்தினால் மனிதரைக் கொன்றார்கள், [QBR2] தாங்கள் விரும்பியவாறு எருதுகளை முடமாக்கினார்கள். [QBR]
7. அவர்களுடைய பயங்கரமான கோபமும், [QBR2] கொடூரமான மூர்க்கமும் சபிக்கப்படுவதாக; [QBR] நான் அவர்களை யாக்கோபிலே பிரியச்செய்து, [QBR2] இஸ்ரயேலிலே சிதறப்பண்ணுவேன்.
8. “யூதா, உன் சகோதரர் உன்னைப் புகழ்வார்கள்; [QBR2] உன் பகைவர்களின் கழுத்தின்மேல் உன்னுடைய கை இருக்கும்; [QBR2] உன் தகப்பனின் மகன்கள் உன்முன் பணிவார்கள். [QBR]
9. யூதா, நீ ஒரு சிங்கக்குட்டி; [QBR2] என் மகனே, நீ இரைதின்று திரும்புகிறாய். [QBR] அவன் சிங்கத்தைப்போலும் பெண் சிங்கத்தைப்போலும் மடங்கிப் படுக்கிறான்; [QBR2] அவனை எழுப்பத் துணிபவன் யார்? [QBR]
10. செங்கோலுக்குரியவர் வரும்வரை [QBR2] செங்கோல் யூதாவைவிட்டு நீங்காது, [QBR] ஆளுநரின் கோல் அவனுடைய பாதங்களைவிட்டு விலகாது; [QBR2] நாடுகளின் கீழ்ப்படிதல் அவருக்கே உரியது. [QBR]
11. அவன் தன் கழுதையை திராட்சைச் செடியிலும், [QBR2] தன் கழுதைக் குட்டியைச் சிறந்த திராட்சைக் கொடியிலும் கட்டுவான்; [QBR] அவன் தன் உடைகளைத் திராட்சை இரசத்திலும், [QBR2] அங்கிகளைத் திராட்சைப்பழச் சாற்றிலும் கழுவுவான். [QBR]
12. அவனுடைய கண்கள் திராட்சை இரசத்தைவிட கருமையும், [QBR2] பற்கள் பாலைவிட வெண்மையுமாய் இருக்கும்.
13. “செபுலோன் கடற்கரையில் குடியிருந்து, [QBR2] கப்பல் துறைமுகமாய் இருப்பான்; [QBR2] அவனுடைய எல்லை சீதோன்வரை பரந்திருக்கும்.
14. “இசக்கார் இரண்டு பொதிகளுக்கிடையே படுத்திருக்கும் [QBR2] பலமுள்ள கழுதை. [QBR]
15. அவன் தன் இளைப்பாறும் இடம் எவ்வளவு நல்லதென்றும், [QBR2] தனது நாடு எத்தகைய மகிழ்ச்சிக்குரியது என்றும் கண்டு, [QBR] சுமைக்குத் தன் தோளை சாய்ப்பான்; [QBR2] கட்டாய வேலைக்கும் இணங்குவான்.
16. “தாண் இஸ்ரயேலின் கோத்திரங்களில் ஒரு கோத்திரமாயிருந்து, [QBR2] தன் மக்களுக்கு நீதி வழங்குவான். [QBR]
17. தாண், குதிரைமீது போகிறவன் [QBR2] இடறிவிழும்படி பாதையோரம் கிடந்து, [QBR] குதிரைகளின் குதிங்காலைக் கடிக்கிற பாம்பைப்போலவும், [QBR2] வழியிலே கிடக்கும் விரியன் பாம்பைப்போலவும் இருப்பான்.
18. “யெகோவாவே, நான் உம்முடைய மீட்புக்காகக் காத்திருக்கிறேன்.
19. “காத் கொள்ளைக் கூட்டத்தாரால் தாக்கப்படுவான், [QBR2] ஆனாலும் இறுதியில் அவன் அவர்களைத் தாக்குவான்.
20. “ஆசேருடைய உணவு கொழுமையானதாய் இருக்கும்; [QBR2] அரசனுக்குத் தகுந்த சுவையான உணவை அவன் கொடுப்பான்.
21. “நப்தலி [*நப்தலி என்றால் மகிழ்ச்சியான வார்த்தைகளைப் பேசுவான் என்று அர்த்தம்.] அழகான குட்டிகளை ஈனும் [QBR2] விடுதலை பெற்ற பெண்மான்.
22. “யோசேப்பு கனிதரும் செடி; [QBR2] அவன் நீரூற்றருகில் கனிதரும் திராட்சைக்கொடி. [QBR2] அவனுடைய கிளைகள், மதில்களில் ஓங்கி வளரும். [QBR]
23. வில்வீரர் அவனைக் கொடூரமாகத் தாக்கினார்கள்; [QBR2] பகைமையுடன் அவன்மேல் எய்தார்கள். [QBR]
24. ஆனால், அவனுடைய வில் உறுதியாய் நின்றது; [QBR2] அவனுடைய பெலமுள்ள புயங்கள் சுறுசுறுப்பாயிருந்தன; [QBR] யாக்கோபின் வல்லவரின் கரத்தினாலும், [QBR2] மேய்ப்பராலும், இஸ்ரயேலுடைய கற்பாறையாலும், [QBR]
25. உனக்கு உதவிசெய்யும் உன் தகப்பனின் இறைவனாலும் இப்படியாகும். [QBR2] அவர் மேலேயுள்ள வானங்களின் ஆசீர்வாதங்களினாலும், [QBR] கீழேயுள்ள ஆழங்களின் ஆசீர்வாதங்களினாலும், [QBR2] மார்பகங்களின், கருப்பையின் ஆசீர்வாதங்களினாலும் [QBR2] உன்னை ஆசீர்வதிக்கும் எல்லாம் வல்லவராய் இருக்கிறார். [QBR]
26. உன் தகப்பனின் ஆசீர்வாதங்கள் [QBR2] நித்திய மலைகளின் ஆசீர்வாதங்களைப் பார்க்கிலும், [QBR2] பழைமை வாய்ந்த குன்றுகளின் செழிப்பைப் பார்க்கிலும் பெரிதானவை. [QBR] இவைகளெல்லாம் யோசேப்பின் தலையின்மேலும், [QBR2] தன் சகோதரருக்குள் பிரபுவாய் இருக்கிறவனின் நெற்றியிலும் தங்குவதாக.
27. “பென்யமீன் ஒரு பீறுகிற ஓநாய்; [QBR2] காலையில் தன் இரையைப் பேராவலுடன் பட்சிப்பான். [QBR2] மாலையில் தான் கொள்ளையிட்டதைப் பங்கிடுவான்.” [PE][PS]
28. இஸ்ரயேலின் பன்னிரு கோத்திரங்களும் இவர்களே, அவர்களுடைய தகப்பன் அவனவனுக்குத் தகுந்த ஆசீர்வாதங்களைச் சொல்லி, அவர்களை ஆசீர்வதிக்கும்போது சொன்னவை இவையே. [PS]
29. {யாக்கோபின் மரணம்} [PS] பின்பு அவன் அவர்களுக்கு அறிவுறுத்திச் சொன்னதாவது: “நான் என் முன்னோர்களுடன் சேர்த்துக்கொள்ளப்படப் போகிறேன். ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வாங்கிய நிலத்திலே, என் தந்தையர்களை அடக்கம்பண்ணிய குகையிலேயே என்னையும் அடக்கம்பண்ணுங்கள்.
30. அந்தக் குகை கானானிலுள்ள மம்ரேக்கு அருகில் மக்பேலா என்னும் வயல்வெளியில் இருக்கிறது; ஆபிரகாம் அதை ஏத்தியனான எப்ரோனிடமிருந்து வயலையும் சேர்த்து கல்லறை நிலமாக வாங்கினார்.
31. அங்கேயே ஆபிரகாமும் அவர் மனைவி சாராளும், ஈசாக்கும் அவர் மனைவி ரெபெக்காளும் அடக்கம்பண்ணப்பட்டார்கள்; என் மனைவி லேயாளையும் நான் அங்கேயே அடக்கம்பண்ணினேன்.
32. அந்த நிலமும் குகையும் ஏத்தியரிடமிருந்து வாங்கப்பட்டவை” என்றான். [PE][PS]
33. யாக்கோபு தன் மகன்களுக்கு அறிவுரை கூறிமுடித்ததும், அவன் தன் கால்களைக் கட்டிலின்மேல் தூக்கிவைத்து, இறுதி மூச்சை விட்டான். இவ்வாறு அவன் தனது முன்னோருடன் சேர்க்கப்பட்டான். [PE]