1. {#1முடிவு வருகிறது } [PS]மேலும் யெகோவாவின் வார்த்தை எனக்கு வந்தது:
2. “மனுபுத்திரனே, ஆண்டவராகிய யெகோவா இஸ்ரயேல் நாட்டைக்குறித்து கூறுவது இதுவே: [PE][QS]“ ‘முடிவு வந்துவிட்டது! [QE][QS2]நாட்டின் நான்கு திசைகளுக்குமே முடிவு வந்துவிட்டது! [QE]
3. [QS]இப்பொழுது உனக்கு முடிவு வந்துவிட்டது. [QE][QS2]நான் எனது கோபத்தை உனக்கு விரோதமாய் வரச்செய்வேன். [QE][QS]உன் நடத்தைக்குத்தக்கதாக உனக்குத் தீர்ப்பு வழங்கி, [QE][QS2]நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்காகவும் பழிவாங்குவேன். [QE]
4. [QS]நான் உன்னைத் தயவாய் பார்க்கவோ; [QE][QS2]தப்பவிடவோ மாட்டேன். [QE][QS]உன் நடத்தைகளுக்கும் உன் நடுவே இருக்கும் அருவருப்புகளுக்கும் தக்கதாக, [QE][QS2]நிச்சயமாக நான் பழிக்குப்பழி செய்வேன். [QE][MS]அப்பொழுது நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய்.’ [ME][PBR]
5. [PS]“ஆண்டவராகிய யெகோவா கூறுவது இதுவே: [PE][QS]“ ‘பேராபத்து! கேள்விப்படாத [QE][QS2]ஒரு பேராபத்து வருகிறது. [QE]
6. [QS]முடிவு வந்துவிட்டது! [QE][QS2]முடிவு வந்துவிட்டது! [QE][QS]அது உனக்கு விரோதமாகவே எழும்பிவிட்டது! [QE][QS2]அது வந்தேவிட்டது. [QE]
7. [QS]நாட்டில் குடியிருப்பவனே, [QE][QS2]அழிவு உன்மீது வந்துவிட்டது! வேளை வந்துவிட்டது! [QE][QS]நாள் நெருங்கிவிட்டது! மலைகளின்மேல் மகிழ்ச்சியல்ல. [QE][QS2]திகிலே நிறைந்திருக்கிறது. [QE]
8. [QS]என் சீற்றத்தை இப்பொழுதே உன்மீது ஊற்றி; [QE][QS2]எனது கோபத்தை உனக்கெதிராய்த் தீர்க்கப்போகிறேன், [QE][QS]உன் நடத்தைக்குத்தக்கதாய் உனக்குத் தீர்ப்பு வழங்கி, [QE][QS2]நீ செய்த எல்லா அருவருப்பான செயல்களுக்கும் உன்னிடம் பழிவாங்குவேன். [QE]
9. [QS]நான் உனக்குத் தயை செய்யவும் மாட்டேன். [QE][QS2]உன்னைத் தண்டியாமல் விடவுமாட்டேன். [QE][QS]உன் நடத்தைகளுக்கும் உன் நடுவிலுள்ள [QE][QS2]உன் அருவருப்பான பழக்கவழக்கங்களுக்கும் தக்கதாக நான் பழிவாங்குவேன். [QE][MS]அப்பொழுது உன்னை அடிக்கிறவராகிய நானே யெகோவா என்பதை நீ அறிந்துகொள்வாய். [ME]
10. [QS]“ ‘இதோ, அந்த நாள்! [QE][QS2]அது வந்துவிட்டது! [QE][QS]அழிவு கொந்தளித்துக் குமுறுகிறது! [QE][QS2]அநீதியின் கோல் மொட்டுவிட்டு, [QE][QS2]அகந்தை மலர்ந்துவிட்டது! [QE]
11. [QS]கொடுமையைத் தண்டிக்க [QE][QS2]வன்முறை கோலாக வளர்ந்துவிட்டது! [QE][QS]அவர்களுடைய மக்களிலோ கூட்டத்திலோ [QE][QS2]ஒருவனாகிலும் மீந்திருக்கமாட்டான். [QE][QS]அவர்களுடைய செல்வமும், [QE][QS2]விலையுயர்ந்த ஒன்றுமே மீந்திருப்பதில்லை. [QE]
12. [QS]அந்தக் காலம் வந்துவிட்டது! [QE][QS2]நாளும் நெருங்கிவிட்டது! [QE][QS]வாங்குகிறவன் மகிழாமலும், [QE][QS2]விற்கிறவன் கவலைப்படாமலும் இருக்கட்டும். [QE][QS2]ஏனெனில், கடுங்கோபம் எல்லோர்மேலும் வந்திருக்கிறது! [QE]
13. [QS]அவர்கள் இருவருமே உயிரோடிருக்கும் வரையிலும், [QE][QS2]விற்றவன் விற்கப்பட்ட நாட்டைத் [QE][QS2]திரும்பப்பெறமாட்டான். [QE][QS]ஏனெனில் யாவரையும் குறித்த தரிசனம் [QE][QS2]மாற்றப்படமாட்டாது. [QE][QS]அவர்களின் பாவத்தினிமித்தம் ஒருவனாகிலும் [QE][QS2]தன் வாழ்வைப் பாதுகாத்துக்கொள்ளவுமாட்டான். [QE][PBR]
14. [QS]“ ‘அவர்கள் எக்காளம் ஊதி, [QE][QS2]எல்லாவற்றையும் ஆயத்தப்படுத்தினாலும், [QE][QS]போருக்கு யாருமே போகமாட்டார்கள், [QE][QS2]ஏனெனில் எல்லோர்மேலும் என் கோபம் இருக்கிறது. [QE]
15. [QS]வெளியே வாள் இருக்கிறது. [QE][QS2]உள்ளே கொள்ளைநோயும், பஞ்சமும் இருக்கின்றன. [QE][QS]நாட்டுப்புறத்தில் இருக்கிறவர்கள் [QE][QS2]வாளினால் சாவார்கள். [QE][QS]நகரத்தில் இருக்கிறவர்கள் [QE][QS2]பஞ்சத்தினாலும் கொள்ளைநோயினாலும் கொல்லப்படுவார்கள். [QE]
16. [QS]தப்பிப் பிழைக்கும் [QE][QS2]எல்லோரும் தங்கள் [QE][QS]பாவங்களின் காரணமாகப் [QE][QS2]பள்ளத்தாக்கின் புறாக்களைப்போல் புலம்பி, [QE][QS2]மலைகளிலே தங்குவார்கள். [QE]
17. [QS]ஒவ்வொரு கையும் பெலனற்றுப்போகும். [QE][QS2]ஒவ்வொரு முழங்காலும் தண்ணீரைப் போலாகும். [QE]
18. [QS]அனைவரும் துக்கவுடைகளை உடுத்திக்கொண்டு [QE][QS2]பயத்தினால் நடுங்குவார்கள். [QE][QS]அவர்களுடைய தலைகள் சவரம் செய்யப்பட்டு, [QE][QS2]முகங்கள் வெட்கத்தினால் மூடப்பட்டிருக்கும். [QE][PBR]
19. [QS]“ ‘அவர்கள் தங்கள் வெள்ளியை வீதிகளில் எறிந்துவிடுவார்கள். [QE][QS2]அவர்களுடைய தங்கம் அவர்களுக்கு அசுத்த பொருளாகும். [QE][QS]யெகோவாவினுடைய கோபத்தின் நாளிலே [QE][QS2]அந்த வெள்ளியும் தங்கமும் அவர்களைக் காப்பாற்றமாட்டாது. [QE][QS2]அவைகளால் அவர்கள் தங்கள் பசியைத் தீர்த்துக்கொள்ளவுமாட்டார்கள். [QE][QS]அவை அவர்களின் வயிற்றை நிரப்பவுமாட்டாது. [QE][QS2]ஏனெனில், அவைகளே அவர்களைப் பாவத்திற்குள் [QE][QS2]இடறிவிழச் செய்தன. [QE]
20. [QS]தங்களது அழகிய நகைகளைக் குறித்து [QE][QS2]அவர்கள் பெருமையுடையவர்களாய் இருந்தார்கள். [QE][QS2]அருவருப்பான விக்கிரகங்களையும், [QE][QS]இழிவான உருவச்சிலைகளையும் தங்களுக்குச் செய்வதற்காக, [QE][QS2]அந்த நகைகளைப் பயன்படுத்தினார்கள்; [QE][QS2]ஆதலால் அவர்களுக்கு அவைகளை தீட்டான பொருளாக்குவேன். [QE]
21. [QS]அந்நியர் அவைகளைச் சூறையாடவும், [QE][QS2]உலகின் கொடியவர்கள் அவைகளைக் கொள்ளையிடவும் செய்வேன். [QE][QS2]அவர்கள் அவைகளைக் கறைப்படுத்துவார்கள். [QE]
22. [QS]அவர்களிடமிருந்து என் முகத்தைத் திருப்பிக்கொள்வேன். [QE][QS2]அப்பொழுது அவர்களுடைய பகைவர்கள் [QE][QS]எனக்கு அருமையாயுள்ள இடத்தைத் தூய்மைக்கேடாக்குவார்கள். [QE][QS2]கொள்ளையர் அங்கு புகுந்து அதன் தூய்மையைக் கெடுப்பார்கள். [QE][PBR]
23. [QS]“ ‘நீ சங்கிலிகளை ஆயத்தப்படுத்திக்கொள். [QE][QS2]நாடு இரத்தம் சிந்துதலால் நிறைந்திருக்கிறது; [QE][QS2]நகரம் வன்செயலாலும் நிறைந்துள்ளது. [QE]
24. [QS]இவர்களுடைய வீடுகளை உரிமையாக்கிக்கொள்ளும்படி [QE][QS2]நாடுகளிலே மிகக் கொடூரமானவர்களை நான் கொண்டுவருவேன். [QE][QS]வலியவர்களின் பெருமையையும் ஒழியப்பண்ணுவேன். [QE][QS2]அவர்களுடைய பரிசுத்த இடங்களும் தூய்மைக் கேடாக்கப்படும். [QE]
25. [QS]பயங்கரம் வரும்போது, அவர்கள் சமாதானத்தைத் தேடுவார்கள். [QE][QS2]அது கிடைக்காமற்போகும். [QE]
26. [QS]அழிவுக்குமேல் அழிவு வரும், [QE][QS2]வதந்திக்குமேல் வதந்தி வரும். [QE][QS]இறைவாக்கினரிடமிருந்து தரிசனங்களை பெற முயற்சிப்பார்கள். [QE][QS2]நீதிச்சட்டத்தைப் பற்றிய ஆசாரியர்களின் [QE][QS2]போதித்தலும் உபதேசமும் முதியோரின் ஆலோசனைகளும் ஒழிந்துபோகும். [QE]
27. [QS]அரசன் துக்கிப்பான். [QE][QS2]இளவரசனைத் திகில் மூடிக்கொள்ளும். [QE][QS2]நாட்டு மக்களின் கைகள் நடுங்கும். [QE][QS]நான் அவர்கள் நடத்தைக்கு ஏற்ப அவர்களை நடத்துவேன். [QE][QS2]அவர்கள் தீர்ப்பளித்த விதத்தின்படியே அவர்களுக்கும் நான் நியாயந்தீர்ப்பேன். [QE][MS]அப்பொழுது நானே யெகோவா என்பதை அவர்கள் அறிந்துகொள்வார்கள்’ ” என்றார். [ME]