1. {#1இஸ்ரயேலரின் இளவரசர்களுக்கான புலம்பல் } [PS]“நீ இஸ்ரயேலரின் இளவரசர்களைக் குறித்துப் புலம்பு.
2. நீ சொல்லவேண்டியதாவது: [PE][QS]“ ‘சிங்கங்களுக்கு நடுவில் உன் தாய் [QE][QS2]ஒரு பெண்சிங்கமாயிருந்தாள். [QE][QS]அவள் இளஞ்சிங்கங்கள் மத்தியில் [QE][QS2]படுத்திருந்து தன் குட்டிகளை வளர்த்தாள். [QE]
3. [QS]தன் குட்டிகளில் ஒன்றை அவள் வளர்த்தாள். [QE][QS2]அக்குட்டி ஒரு பலமுள்ள சிங்கம் ஆனான். [QE][QS]அவன் இரையைக் கிழிக்கப்பழகி [QE][QS2]மனிதர்களை விழுங்கினான். [QE]
4. [QS]நாடுகள் அவனைப்பற்றிக் கேள்விப்பட்டபோது, [QE][QS2]அவன் அவர்களுடைய குழியில் அகப்பட்டான். [QE][QS]அவர்கள் அவனை விலங்கிட்டு [QE][QS2]எகிப்திற்கு நடத்திச்சென்றார்கள். [QE][PBR]
5. [QS]“ ‘தன் நம்பிக்கை நிறைவேறவில்லையென்றும், [QE][QS2]தன் எதிர்பார்ப்பு சிதைந்தது [QE][QS]என்றும் தாய்ச்சிங்கம் கண்டபோது, [QE][QS2]தன் குட்டிகளில் வேறொன்றை எடுத்து பலமுள்ள சிங்கமாக்கியது. [QE]
6. [QS]அது இப்பொழுது பாலசிங்கமானதால், [QE][QS2]சிங்கங்கள் மத்தியில் இரைதேடித் திரிந்தது. [QE][QS]அது இரையைக் கிழிக்கப்பழகி [QE][QS2]மனிதரை விழுங்கியது. [QE]
7. [QS]அவர்களுடைய அரண்களை நொறுக்கி, [QE][QS2]நகரங்களை அழித்தது. [QE][QS]நாடும் அதிலுள்ள அனைவரும் [QE][QS2]அதனுடைய கர்ஜனையைக் கேட்டுக் கலங்கினார்கள். [QE]
8. [QS]அப்பொழுது எல்லாப் பக்கமும் சூழ்ந்திருக்கும் பிறநாடுகள், [QE][QS2]அதை எதிர்த்து வந்தன. [QE][QS]அதன்மேல் தங்கள் வலையை வீசியபோது, [QE][QS2]அது அவர்களுடைய குழியில் அகப்பட்டது. [QE]
9. [QS]அவர்கள் அதனை விலங்கிட்டு கூண்டிலிட்டு, [QE][QS2]பாபிலோன் அரசனிடம் கொண்டுசென்று [QE][QS]அங்கே சிறையிட்டார்கள். [QE][QS2]எனவே இஸ்ரயேலின் மலைகளில் [QE][QS2]அதனுடைய கர்ஜனை அதற்குப்பின் கேட்கவேயில்லை. [QE][PBR]
10. [QS]“ ‘உன் தாய் உன் திராட்சைத் தோட்டத்தில் [QE][QS2]தண்ணீரின் அருகே நாட்டப்பட்ட திராட்சைக்கொடியைப் போலிருந்தாள்! [QE][QS]தண்ணீர் வளம் மிகுந்த காரணத்தால் [QE][QS2]கிளைகள் செழித்து பழங்களும் பெருகின. [QE]
11. [QS]அதன் கிளை உறுதியாய் இருந்ததினால் [QE][QS2]அரச செங்கோலுக்குத் தகுதியாயிற்று. [QE][QS]அடர்ந்து வளர்ந்த மற்ற இலைகளுக்கு மேலாய் அது உயர்ந்து நின்றது. [QE][QS2]தன் உயரத்தாலும், [QE][QS]பல கிளைகளாலும் [QE][QS2]அது சிறப்பாய்க் காட்சியளித்தது. [QE]
12. [QS]ஆனால், அந்தத் திராட்சைக்கொடி [QE][QS2]கடுங்கோபத்தோடு வேரோடு பிடுங்கப்பட்டுத் [QE][QS]தரையில் எறியப்பட்டது. [QE][QS2]கீழ்க்காற்று அதனை வாடப்பண்ணி பழங்களும் உதிர்க்கப்பட்டன. [QE][QS]அதன் பலத்த கிளைகள் வாடிப்போயின. [QE][QS2]நெருப்பு அவைகளை எரித்தது. [QE]
13. [QS]இப்பொழுது அது வறண்ட வளமற்ற [QE][QS2]பாலைவனத்தில் நாட்டப்பட்டுள்ளது. [QE]
14. [QS]முக்கிய கிளை ஒன்றிலிருந்து இருந்து நெருப்பு எழும்பி, [QE][QS2]அதன் பழத்தைச் சுட்டெரித்தது. [QE][QS]அரச செங்கோலுக்குத் தகுதிபெற [QE][QS2]இனியொரு கிளையும் அதில் விடப்படவில்லை.’ [QE][MS]இது ஒரு புலம்பல் புலம்பலாகவே, உபயோகிக்கப்பட வேண்டும்.” [ME]