1. {#1ஞானம் } [QS]சிறந்த வாசனைத் தைலத்தைவிட நற்பெயரே நல்லது, [QE][QS2]பிறக்கும் நாளைவிட இறக்கும் நாளே சிறந்தது. [QE]
2. [QS]விருந்து வீட்டிற்குப் போவதைப் பார்க்கிலும், [QE][QS2]துக்க வீட்டிற்குப் போவதே சிறந்தது. [QE][QS]ஏனெனில் ஒவ்வொரு மனிதனின் நியதியும் மரணமே; [QE][QS2]உயிரோடிருக்கிறவர்கள் இதைக் மனதிற்கொள்ளவேண்டும். [QE]
3. [QS]சிரிப்பைப் பார்க்கிலும் துக்கமே நல்லது; [QE][QS2]ஏனெனில் துக்கமுகம் இருதயத்திற்கு நன்மையைக் கொடுக்கும். [QE]
4. [QS]ஞானமுள்ளவர்களின் இருதயம் துக்க வீட்டிலேயே இருக்கிறது; [QE][QS2]ஆனால் மூடர்களின் இருதயமோ களிப்பு வீட்டிலேயே இருக்கிறது. [QE]
5. [QS]மூடர்களின் பாடலைக் கேட்பதைப் பார்க்கிலும், [QE][QS2]ஞானமுள்ளவர்களின் கடிந்துகொள்ளுதலைக் கேட்பது நல்லது. [QE]
6. [QS]பானைக்குக்கீழ் சடசட என எரியும் முட்களின் சத்தத்தைப்போலவே, [QE][QS2]மூடர்களின் சிரிப்பும் இருக்கும். [QE][QS2]இதுவும் அர்த்தமற்றதே. [QE][PBR]
7. [QS]பலவந்தமாய் எடுத்த ஆதாயம், ஒரு ஞானியையும் மூடனாக்கும். [QE][QS2]இலஞ்சம் வாங்குதல் இருதயத்தைக் கறைப்படுத்தும். [QE][PBR]
8. [QS]ஒரு காரியத்தின் தொடக்கத்தைப் பார்க்கிலும், அதின் முடிவு நல்லது; [QE][QS2]பெருமையைப் பார்க்கிலும் பொறுமையே சிறந்தது. [QE]
9. [QS]உள்ளத்தில் கோபத்திற்கு இடங்கொடாதே, [QE][QS2]ஏனெனில் கோபம் மூடர்களின் மடியிலே குடியிருக்கும். [QE][PBR]
10. [QS]“இந்த நாட்களைவிட முந்திய நாட்கள் நலமாய் இருந்தது ஏன்?” என்று கேட்காதே. [QE][QS2]இப்படியான கேள்விகளைக் கேட்பது ஞானமுள்ள செயல் அல்ல. [QE][PBR]
11. [QS]உரிமைச்சொத்தைப்போல, ஞானம் இருப்பது நல்லது; [QE][QS2]உயிரோடிருக்கும் அனைவருக்கும் அதுவே நன்மை கொடுக்கிறது. [QE]
12. [QS]பணம் புகலிடமாய் இருப்பதுபோலவே, [QE][QS2]ஞானமும் ஒரு புகலிடம்; [QE][QS]ஆனால் ஞானம் அதைக் கொண்டிருக்கிறவர்களின் உயிரைப் பாதுகாக்கிறது, [QE][QS2]இதுவே அறிவின் மேன்மை. [QE]
13. [PS]இறைவன் செய்திருப்பதைக் கவனித்துப் பாருங்கள்: [PE][QS]அவர் கோணலாக்கினதை [QE][QS2]யாரால் நேராக்க முடியும்? [QE]
14. [QS]காலங்கள் நலமாயிருக்கும்போது, மகிழ்ச்சியாயிரு; [QE][QS2]காலங்கள் கஷ்டமாய் இருக்கும்போது, சிந்தனை செய்: [QE][QS]இறைவனே இரண்டையும் ஏற்படுத்தியிருக்கிறார், [QE][QS2]ஆகையால் ஒரு மனிதனால் [QE][QS]தனது எதிர்காலத்தைக் குறித்து [QE][QS2]எதையும் கண்டுபிடிக்க முடியாது. [QE]
15. [PS]நீதியானவன் தன் நீதியில் அழிந்துபோகிறதும்: [PE][QS]கொடுமையானவன் தன் கொடுமையிலே நீடித்து வாழ்கிறதுமான [QE][QS2]இரண்டையும் அர்த்தமற்ற என் வாழ்வில் நான் கண்டேன். [QE]
16. [QS]ஆகையால் மிதமிஞ்சி நீதிமானாகவோ, [QE][QS2]மிதமிஞ்சிய ஞானமுள்ளவனாகவோ காட்டிக்கொள்ளாதே. [QE][QS2]அதினால் நீ ஏன் உன்னை அழித்துக்கொள்ள வேண்டும்? [QE]
17. [QS]அதிக கொடியவனாய் இராதே, [QE][QS2]முட்டாளாயும் இராதே. [QE][QS2]உன் காலத்திற்கு முன் நீ ஏன் சாகவேண்டும்? [QE]
18. [QS]முதலாவதைப் பற்றிக்கொள்வதும், [QE][QS2]இரண்டாவதைக் கைவிடாதிருப்பதும் நல்லது. [QE][QS2]இறைவனுக்குப் பயந்து நடக்கிறவனோ மிதமிஞ்சிய நடத்தைகளைக் கைக்கொள்ளமாட்டான். [QE][PBR]
19. [QS]பட்டணத்திலுள்ள பத்து ஆளுநர்களைப் பார்க்கிலும், [QE][QS2]ஒரு ஞானியை, ஞானம் அதிக வலிமையுள்ளவனாக்கும். [QE][PBR]
20. [QS]ஒருபோதும் பாவம் செய்யாமல், சரியானதையே செய்கிற, [QE][QS2]நீதியான மனிதன் பூமியில் ஒருவனும் இல்லை. [QE][PBR]
21. [QS]மனிதர் சொல்லும் ஒவ்வொரு வார்த்தையையும் கவனத்தில் எடுக்காதே; [QE][QS2]கவனிப்பாயானால் உன் வேலைக்காரன் உன்னைச் சபிப்பதையும் நீ கேட்க நேரிடலாம். [QE]
22. [QS]ஏனெனில் பலமுறை, [QE][QS2]நீயும் மற்றவர்களைச் சபிக்கிறதை உன் இருதயத்தில் அறிவாயே. [QE]
23. [PS]இவை எல்லாவற்றையும் நான் என் ஞானத்தினால் சோதித்துப் பார்த்து, [PE][QS]“நான் ஞானமுள்ளவனாய் இருக்க உறுதிகொண்டேன்” என்று சொன்னேன்; [QE][QS2]ஆனால் இதுவும் எனக்கு எட்டாததாய் இருந்தது. [QE]
24. [QS]ஞானம் எப்படிப்பட்டதாய் இருந்தாலும், [QE][QS2]அது மிக தூரமாகவும் ஆழமாகவும் இருக்கிறது. [QE][QS2]அதை யாரால் கண்டறிய முடியும்? [QE]
25. [QS]ஆகவே, ஞானத்தையும் நிகழ்வுகளுக்கான காரணகாரியத்தையும் அறியவும், [QE][QS2]விசாரிக்கவும், ஆராயவும் என் மனதைச் செலுத்தினேன். [QE][QS]கொடுமையின் மூடத்தனத்தையும், [QE][QS2]மூடத்தனத்தின் அறிவீனத்தையும் விளங்கிக்கொள்ள என் மனதைத் திருப்பினேன். [QE][PBR]
26. [QS]கண்ணியாய் இருக்கும் பெண், [QE][QS2]மரணத்திலும் பார்க்க கசப்பானவள் என்று நான் கண்டேன்; [QE][QS]அவளது இருதயம் பொறியாயும், [QE][QS2]அவளது கைகள் சங்கிலிகளாயும் இருக்கின்றன. [QE][QS]இறைவனுக்குப் பிரியமாய் நடக்கும் மனிதனோ அவளிடமிருந்து தப்புவான். [QE][QS2]பாவியையோ அவள் சிக்க வைப்பாள். [QE]
27. [PS]“இதோ, நிகழ்வுகளின் திட்டங்களை விளங்கிக்கொள்வதற்காக ஒன்றுடன் ஒன்றைச்சேர்த்துப் பார்த்தேன்”: [PE][QS]அப்பொழுது நான் கண்டது இதுவே என்று பிரசங்கி சொல்கிறான்: [QE]
[QS2]28. “நான் ஆயிரம் பேருக்குள்ளே நேர்மையான ஒருவனை கண்டேன்; [QE][QS2]ஆனால் ஆயிரம் பெண்களுக்குள்ளே நேர்மையான ஒரு பெண்ணை நான் காணவில்லை. [QE][QS]நான் இன்னும் ஆராய்ந்து கொண்டேயிருக்கிறேன்; [QE][QS2]ஆனால் விளங்கவில்லை.” [QE]
29. [QS]ஆனால் இது ஒன்றையே நான் கண்டுபிடித்தேன்: [QE][QS2]இறைவன் மனுக்குலத்தை நீதியானதாகவே படைத்தார்; [QE][QS2]மனிதர்களோ தங்கள் மனம்போன போக்கில் நடந்துகொள்கிறார்கள். [QE][PBR]