1. {எல்லாம் அர்த்தமற்றவை} [PS] தாவீதின் மகனும், எருசலேமின் அரசனுமான பிரசங்கியின் வார்த்தைகள்: [QBR]
2. “அர்த்தமற்றவை! அர்த்தமற்றவை! [QBR2] முற்றிலும் அர்த்தமற்றவை; [QBR] எல்லாமே அர்த்தமற்றவை” என்று [QBR2] பிரசங்கி கூறுகிறான்.
3. மனிதனின் எல்லா உழைப்பினாலும் அவன் பெறும் இலாபம் என்ன? [QBR2] சூரியனுக்குக் கீழே [*சூரியனுக்குக் கீழே என்பது உலகத்தில் என்று அர்த்தம்.] அவன் படும் பிரசாயத்தினால் பலன் என்ன? [QBR]
4. சந்ததிகள் தோன்றி, சந்ததிகள் மறைகின்றன; [QBR2] ஆனாலும் பூமி மட்டும் என்றென்றைக்கும் நிலைத்திருக்கின்றது. [QBR]
5. சூரியன் உதிக்கிறது, சூரியன் மறைகிறது; [QBR2] தான் உதிக்கும் இடத்திற்கே அது விரைந்து திரும்பிச் செல்கிறது. [QBR]
6. காற்று தெற்கு நோக்கி வீசுகிறது, [QBR2] வடக்கு நோக்கியும் திரும்புகிறது; [QBR] அது சுழன்று சுழன்று அடித்து, [QBR2] எப்போதும் தான் சுற்றிவந்த இடத்திற்கே திரும்பிச் செல்கிறது. [QBR]
7. எல்லா ஆறுகளும் கடலில் கலக்கின்றன, [QBR2] ஆனாலும் கடல் ஒருபோதும் நிறைவதில்லை. [QBR] ஆறுகள் ஊற்றெடுத்த இடத்திற்கே [QBR2] திரும்பிப் போகின்றன. [QBR]
8. ஒருவனாலும் சொல்ல முடியாத அளவுக்கு [QBR2] எல்லாக் காரியங்களும் வருத்தத்தையே கொடுக்கின்றன. [QBR] எவ்வளவு பார்த்தாலும் கண்களுக்கு ஆவல் தீருவதில்லை, [QBR2] எவ்வளவு கேட்டாலும் காதுகள் திருப்தியடைவதில்லை. [QBR]
9. இருந்ததே இனிமேலும் இருக்கும், [QBR2] செய்யப்பட்டதே இனிமேலும் செய்யப்படும்; [QBR2] சூரியனுக்குக் கீழே புதிதாக ஒன்றுமேயில்லை. [QBR]
10. “பாருங்கள், இது புதிதானது!” [QBR2] என்று யாராவது சொல்லத்தக்கது ஏதாவது ஒன்று உண்டோ? [QBR] அது நெடுங்காலத்திற்கு முன்பே இங்கு இருந்தது; [QBR2] நமது காலத்திற்கு முன்பும் இங்கு இருந்தது. [QBR]
11. முற்காலத்து மனிதரைக் குறித்து ஒருவருக்கும் ஞாபகம் இருப்பதில்லை; [QBR2] அதுபோல இனிமேல் வரப்போகிறவர்களுக்கும், [QBR] பின்வரும் காரியங்களைக்குறித்து [QBR2] ஞாபகம் இருக்காது. [PS]
12. {ஞானம் அர்த்தமற்றது} [PS] பிரசங்கியாகிய நான் எருசலேமில் இஸ்ரயேலுக்கு அரசனாய் இருந்தேன்.
13. வானத்தின்கீழ் நடைபெறும் எல்லாவற்றையும் ஞானத்தினால் ஆராய்ந்து கண்டுபிடிக்கும்படி என்னை நான் அர்ப்பணித்தேன். மனுக்குலத்தின்மேல் இறைவன் வைத்திருக்கிறது எவ்வளவு பெரிய பாரம்!
14. சூரியனுக்குக் கீழே செய்யப்படும் எல்லா செயல்களையும் நான் பார்த்திருக்கிறேன்; அவை அனைத்தும் அர்த்தமற்றவை, எல்லாம் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே. [QBR]
15. வளைந்ததை நேராக்கமுடியாது; [QBR2] இல்லாததை எண்ணிக் கணக்கிட முடியாது. [PE][PS]
16. “பாருங்கள், எனக்குமுன் எருசலேமில் ஆளுகை செய்த எல்லோரையும்விட, நான் ஞானத்தில் வளர்ந்து பெருகியிருக்கிறேன்; ஞானத்திலும் அறிவிலும் அதிகமானதை நான் என் அனுபவத்தில் கண்டிருக்கிறேன்” என்று நான் எனக்குள் சொல்லிக்கொண்டேன்.
17. பின்பு நான் ஞானத்தை விளங்கிக்கொள்வதற்கும், பைத்தியக்காரத்தனத்தையும் மூடத்தனத்தையும் விளங்கிக்கொள்ளவும் அதில் முழுமையாய் ஈடுபட்டேன். ஆனால் இதுவும் காற்றைத் துரத்திப்பிடிக்கும் முயற்சியே என்று அறிந்துகொண்டேன். [QBR]
18. ஏனெனில் அதிக ஞானத்தினால் அதிக துக்கம் வருகிறது; [QBR2] அதிக அறிவினால் அதிக கவலையும் வருகிறது. [PE]