1. {#1மோசே கோத்திரங்களை ஆசீர்வதித்தல் } [PS]இறைவனின் மனிதனாகிய மோசே தான் இறப்பதற்குமுன் இஸ்ரயேல் மக்கள்மேல் கூறிய ஆசீர்வாதம் இதுவே.
2. அவன் சொல்லியதாவது: [PE][QS]“யெகோவா சீனாயிலிருந்து வந்து, [QE][QS2]சேயீரிலிருந்து அவர்கள்மேல் உதித்தார். [QE][QS2]பாரான் மலையிலிருந்து அவர் பிரகாசித்தார். [QE][QS]ஆயிரக்கணக்கான பரிசுத்தவான்களுடன் தெற்கிலிருந்தும், [QE][QS2]மலைச்சரிவுகளிலிருந்தும் வந்தார். [QE]
3. [QS]நிச்சயமாக நீரே மக்களில் அன்பு செலுத்துகிறீர். [QE][QS2]எல்லா பரிசுத்தவான்களும் உமது கரத்திலே இருக்கிறார்கள். [QE][QS]அவர்கள் உம்முடைய பாதங்களில் விழுந்து வணங்குகிறார்கள். [QE][QS2]உம்மிடமிருந்து அறிவுறுத்தலை பெற்றுக்கொள்கிறார்கள். [QE]
4. [QS]மோசே எங்களுக்குக் கொடுத்த சட்டமே அந்த அறிவுறுத்தல். [QE][QS2]அது யாக்கோபின் சபையாருக்கு உடைமையாய் இருக்கிறது. [QE]
5. [QS]இஸ்ரயேலின் கோத்திரங்களுடன். [QE][QS2]மக்களின் தலைவர்கள் ஒன்றாய் கூடியபோது, [QE][QS2]யெஷூரன்மேல் யெகோவாவே அரசனாய் இருந்தார். [QE][PBR]
6. [QS]“ரூபன் வாழட்டும்; அவன் சாகக்கூடாது, [QE][QS2]அவனுடைய மனிதர் குறையாமல் இருக்கட்டும்.” [QE]
7. [PS]அவன் யூதாவைப்பற்றிச் சொன்னதாவது: [PE][QS]“யெகோவாவே, யூதாவின் கதறுதலைக் கேளும்; [QE][QS2]அவனை அவனுடைய மக்களிடம் கொண்டுவாரும். [QE][QS]அவன் தன் சொந்தக் கரங்களால் அவனுடைய உரிமைகளுக்காகப் போராடுகிறான். [QE][QS2]அவனுடைய பகைவருக்கு எதிராக அவனுக்குத் துணையாய் இரும்.” [QE]
8. [PS]லேவியைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“நீர் தயவுகாட்டிய மனிதனுக்கே [QE][QS2]உமது தும்மீம், ஊரீம் உரியவை. [QE][QS]நீர் மாசாவில் அவனைத் சோதித்தீர். [QE][QS2]மேரிபாவின் தண்ணீர் அருகே அவனுடன் வாக்குவாதம் பண்ணினீர். [QE]
9. [QS]அவன் தன் தகப்பனையும், தாயையும்பற்றி, [QE][QS2]‘நான் அவர்களைக் கவனத்தில் கொள்ளமாட்டேன்’ என்றான். [QE][QS]அவன் தன் சகோதரர்களை அங்கீகரிக்கவில்லை. [QE][QS2]தன் பிள்ளைகளையும் ஏற்றுக்கொள்ளவில்லை. [QE][QS]ஆனால் அவன் உம்முடைய வார்த்தையைக் கண்காணித்து, [QE][QS2]உம்முடைய உடன்படிக்கையைக் காவல்செய்தான். [QE]
10. [QS]அவன் உமது ஒழுங்குவிதிகளை யாக்கோபுக்கும், [QE][QS2]உமது சட்டத்தை இஸ்ரயேலுக்கும் போதிக்கிறான். [QE][QS]உமது முன்னிலையில் தூபங்காட்டுகிறான். [QE][QS2]உமது பலிபீடத்தில் முழுமையான தகன காணிக்கையைச் செலுத்துகிறான். [QE]
11. [QS]யெகோவாவே, அவனுடைய திறமைகளை ஆசீர்வதியும். [QE][QS2]அவனுடைய கைகளின் வேலையில் பிரியமாயிரும். [QE][QS]அவனுக்கு எதிரே எழும்புவோரின் இடுப்புகளை அடித்து நொறுக்கும். [QE][QS2]அவனுடைய பகைவர்கள் இனி ஒருபோதும் எழும்பாதபடி அவர்களை அடியும்.” [QE]
12. [PS]பென்யமீனைப்பற்றி அவன் சொன்னது: [PE][QS]“யெகோவாவினால் அன்புகூரப்பட்டவன் அவரில் பாதுகாப்பாய் இளைப்பாறட்டும். [QE][QS2]ஏனெனில் அவர் அவனை நாள்முழுவதும் பாதுகாக்கிறார். [QE][QS2]யெகோவா அன்புகூரும் அவன் அவருடைய தோள்களுக்கிடையில் இளைப்பாறுகிறான்.” [QE]
13. [PS]யோசேப்பைப்பற்றி அவன் சொன்னது: [PE][QS]“யெகோவா அவனுடைய நாட்டை, [QE][QS2]மேலே வானத்திலிருந்து வரும் பனியினாலும், [QE][QS2]கீழே பூமியின் ஆழத்திலிருந்துவரும் தண்ணீர்களாலும் ஆசீர்வதிப்பாராக. [QE]
14. [QS]சூரியன் விளைவிக்கும் சிறந்த விளைச்சலினாலும், [QE][QS2]சந்திரன் விளைவிக்கும் அருமையான பொருட்களாலும் ஆசீர்வதிப்பாராக. [QE]
15. [QS]பூர்வகால மலைகளின் மிகச்சிறந்த கொடைகளாலும், [QE][QS2]அழியாத குன்றுகளின் செழிப்பினாலும் ஆசீர்வதிப்பாராக. [QE]
16. [QS]பூமியின் மிகச்சிறந்த கொடைகளினாலும், நிறைவினாலும் ஆசீர்வதிப்பாராக. [QE][QS2]எரிகின்ற புதரில் வாழ்ந்தவரின் தயவினாலும் ஆசீர்வதிப்பாராக. [QE][QS]இவை எல்லாம் யோசேப்பின் தலையின்மேல் தங்கட்டும். [QE][QS2]தனது சகோதரருள் இளவரசனாயிருந்தவனின் உச்சந்தலையிலும் தங்குவதாக. [QE]
17. [QS]மாட்சிமையில் அவன் தலையீற்று காளைபோல் இருக்கிறான். [QE][QS2]அவன் கொம்புகளோ காட்டு எருதின் கொம்புகள்போல் இருக்கின்றன. [QE][QS]அவற்றால் நாடுகளைக் குத்திக் கிழிப்பான். [QE][QS2]பூமியின் கடையாந்தரங்களில் இருப்பவர்களைக்கூட குத்திக் கிழிப்பான். [QE][QS]எப்பிராயீமின் பத்தாயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே. [QE][QS2]மனாசேயின் ஆயிரம்பேரும் இப்படிப்பட்டவர்களே.” [QE]
18. [PS]செபுலோனைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“செபுலோனே நீ வெளியே போகையில் களிகூரு. [QE][QS2]இசக்காரே நீ கூடாரங்களிலிருந்து களிகூரு. [QE]
19. [QS]அவர்கள் மக்களை மலைக்கு அழைப்பிப்பார்கள். [QE][QS2]அங்கே நீதியின் பலிகளைச் செலுத்துவார்கள். [QE][QS]அவர்கள் கடல்களின் நிறை வளங்களிலும், [QE][QS2]மண்ணுள் மறைந்திருக்கும் செல்வங்களிலும் விருந்து உண்பார்கள்.” [QE]
20. [PS]காத்தியரைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“காத்தியரின் ஆளுகைகளை விரிவுபடுத்துபவன் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE][QS2]காத் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான். [QE][QS2]அவன், புயத்தையும் தலையையும் கிழிக்கும் சிங்கத்தைப்போல் படுத்திருப்பான். [QE]
21. [QS]அவன் சிறந்த நிலத்தை தனக்கென்று தெரிந்துகொண்டான். [QE][QS2]தலைவருக்கான பங்கு அவனுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. [QE][QS]மக்களின் தலைவர்கள் ஒன்றுகூடியபோது, [QE][QS2]அவன் யெகோவாவின் நீதியையும், [QE][QS2]இஸ்ரயேலருக்கான யெகோவாவின் நியாயத்தீர்ப்புகளையும் நிறைவேற்றினான்.” [QE]
22. [PS]தாணைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“தாண் பாசானிலிருந்து, [QE][QS2]பாய்கிற சிங்கக்குட்டி.” [QE]
23. [PS]நப்தலியைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“நப்தலி யெகோவாவின் தயவில் பெருகி [QE][QS2]அவரின் ஆசீர்வாதத்தால் நிறைந்திருக்கிறான். [QE][QS2]அவன் கலிலேயா கடலின் தெற்குப் பக்கமாக உள்ள பகுதியை உரிமையாக்கிக்கொள்வான்.” [QE]
24. [PS]ஆசேரைப்பற்றி அவன் சொன்னதாவது: [PE][QS]“ஆசேர் மகன்களுக்குள் அதிகமாய் ஆசீர்வதிக்கப்பட்டவன். [QE][QS2]சகோதரரிடமிருந்து அவனுக்கு ஆதரவு கிடைக்கும். [QE][QS2]அவன் தன் பாதங்களை எண்ணெயில் குளிப்பாட்டட்டும். [QE]
25. [QS]உன் வாயிற்கதவுகளின் தாழ்ப்பாள்கள் இரும்பும் வெண்கலமுமாய் இருக்கும். [QE][QS2]நீ வாழும் காலமெல்லாம் உன் பெலனும் நீடித்திருக்கும். [QE][PBR]
26. [QS]“யெஷூரனின் இறைவனைப்போல் வேறொருவரும் இல்லை. [QE][QS2]அவர் உனக்கு உதவிசெய்ய வானங்களிலும், [QE][QS2]அவருடைய மகத்துவத்துடன் மேகங்களிலும் ஏறிவருவார். [QE]
27. [QS]என்றும் வாழ்கிற இறைவன் உன் அடைக்கலம். [QE][QS2]அவரின் நித்திய புயங்கள் உன்னைத் தாங்கும். [QE][QS]அவர், ‘பகைவனை அழித்துவிடு!’ என்று சொல்லி, [QE][QS2]உன் பகைவனை உனக்கு முன்பாகத் துரத்திவிடுவார். [QE]
28. [QS]இஸ்ரயேல் தனிமையாய் பாதுகாப்புடன் வாழும். [QE][QS2]தானியமும், புது திராட்சை இரசமும் உள்ள நாட்டில், [QE][QS]யாக்கோபின் நீரூற்று[* எபிரெய கிரேக்க கையெழுத்துப் பிரதியில் நீரூற்று என்றுள்ளது. ] பாதுகாப்பாய் இருக்கிறது. [QE][QS2]அங்கே வானம் பனியைப் பெய்கின்றது. [QE]
29. [QS]இஸ்ரயேலேரே, நீங்கள் ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்! [QE][QS2]யெகோவாவினால் மீட்கப்பட்ட மக்களான உங்களைப்போல் வேறு யார் இருக்கிறார்கள்? [QE][QS2]அவரே உங்கள் கேடயமும், [QE][QS]உங்களுக்கு உதவி செய்பவருமாயிருக்கிறார். [QE][QS2]அவரே உங்களது மகிமையான வாளுமாயிருக்கிறார். [QE][QS]உங்களது பகைவர் உங்களுக்கு முன்பாக அஞ்சி ஒதுங்குவார்கள். [QE][QS2]நீங்கள் அவர்களின் தொழுகைமேடுகளை[† அல்லது அவர்களின் பின்புறத்தை. ] மிதிப்பீர்கள்.” [QE]