1. {#1மனமாறுதலுக்கு அழைப்பு } [PS]இஸ்ரயேல் குடும்பமே, இந்த வார்த்தையைக் கேளுங்கள். உங்களைக்குறித்து நான் புலம்புவதைக் கேளுங்கள்: [PE]
2. [QS]“இஸ்ரயேல் என்ற கன்னிப்பெண் விழுந்து விட்டாள், [QE][QS2]இவள் இனி ஒருபோதும் எழும்பமாட்டாள். [QE][QS]தன் நாட்டிலேயே கைவிடப்பட்டாள். [QE][QS2]அவளைத் தூக்கிவிட யாருமேயில்லை.” [QE]
3. [PS]ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“இஸ்ரயேலில் ஆயிரம் வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, [QE][QS2]நூறுபேர் மட்டும் எஞ்சி வருவார்கள். [QE][QS]நூறு வீரர்களை அணிவகுத்து அனுப்பிய பட்டணத்திற்கு, [QE][QS2]பத்துபேர் மட்டுமே எஞ்சி வருவார்கள்.” [QE]
4. [PS]இஸ்ரயேல் குடும்பத்திற்கு யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]என்னைத் தேடுங்கள், நீங்கள் வாழ்வீர்கள். [QE]
[QS2]5. பெத்தேலைத் தேடாதீர்கள், [QE][QS]கில்காலுக்குப் போகாதீர்கள், [QE][QS2]பெயெர்செபாவிற்குப் பயணப்படாதீர்கள். [QE][QS]கில்கால் நிச்சயமாக நாடுகடத்தப்படும், [QE][QS2]பெத்தேலும் ஒன்றுமில்லாது போகும், [QE]
6. [QS]இஸ்ரயேலின் யெகோவாவையே தேடுங்கள், [QE][QS2]அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். [QE][QS]இல்லையெனில் அவர் யோசேப்பின் குடும்பத்தின் வழியாக [QE][QS2]நெருப்புபோல் அள்ளிக்கொண்டுபோவார். [QE][QS]அந்த நெருப்பு எல்லாவற்றையும் சுட்டெரிக்கும். [QE][QS2]அதை அணைக்க பெத்தேலில் ஒருவரும் இருக்கமாட்டார்கள். [QE][PBR]
7. [QS]நீதியைக் கசப்பாக மாற்றுகிறவர்களே, [QE][QS2]நியாயத்தைத் தரையில் தள்ளுகிறவர்களே, அவரையே தேடி வாழுங்கள். [QE][PBR]
8. [QS]அவரே அறுமீன், மிருகசீரிடம் ஆகிய நட்சத்திரக் கூட்டங்களை உண்டாக்கியவர். [QE][QS2]இருளை அதிகாலை வெளிச்சமாக மாற்றுகிறவரும், [QE][QS2]பகலை இரவாக மாற்றுகிறவரும் அவரே; [QE][QS]கடலின் தண்ணீரை அழைத்து, [QE][QS2]பூமியின் மேற்பரப்பில் அதைப் பொழிகிறவரும் அவரே, [QE][QS2]“யெகோவா” என்பது அவர் பெயர். [QE]
9. [QS]அவர் கோட்டைகளை மின்னல் வேகத்தில் தாக்கி அழித்து, [QE][QS2]அரணான பட்டணங்களைப் பாழாக்குகிறார். [QE][PBR]
10. [QS]இஸ்ரயேலின் நீங்கள் நீதிமன்றத்திற்கு [QE][QS2]குற்றவாளியைக் கொண்டுவருகிறவனை வெறுக்கிறீர்கள், [QE][QS2]உண்மை சொல்கிறவனை உதாசீனம் செய்கிறீர்கள். [QE][PBR]
11. [QS]ஏழையை மிதித்து, உங்களுக்குத் தானியத்தைக் கொடுக்கும்படி [QE][QS2]அவனைப் பலவந்தப்படுத்துகிறீர்கள். [QE][QS]ஆகையால் கல்லினால் மாளிகைகளைக் கட்டியும், [QE][QS2]அதில் வாழமாட்டீர்கள், [QE][QS]செழிப்பான திராட்சைத் தோட்டங்களை உண்டாக்கினாலும் [QE][QS2]அவற்றின் இரசத்தை நீங்கள் குடிக்கமாட்டீர்கள். [QE]
12. [QS]உங்கள் மீறுதல்கள் எவ்வளவு மிகுதியென்றும், [QE][QS2]உங்கள் பாவங்கள் எவ்வளவு கொடியதென்றும் நான் அறிவேன். [QE][PBR] [QS]நீங்கள் நீதிமான்களை ஒடுக்கி, அவர்களிடமிருந்து இலஞ்சம் வாங்குகிறீர்கள். [QE][QS2]நீதிமன்றத்தில் ஏழைக்கு நீதிவழங்க மறுக்கிறீர்கள். [QE]
13. [QS]ஆகையால் அப்படிப்பட்ட காலங்களில் விவேகமுள்ளவன் மவுனமாய் இருக்கவேண்டும். [QE][QS2]ஏனெனில் காலம் மிகக் கொடியதாய் இருக்கிறது. [QE][PBR]
14. [QS]தீமையை அல்ல, நன்மையைத் தேடுங்கள், [QE][QS2]அப்பொழுது நீங்கள் வாழ்வீர்கள். [QE][QS]சேனைகளின் இறைவனாகிய யெகோவா உங்களோடிருக்கிறார் என்று நீங்கள் சொல்வதுபோலவே, [QE][QS2]அவர் உங்களோடிருப்பார். [QE]
15. [QS]தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். [QE][QS2]நீதிமன்றங்களில் நீதியை நிலைநிறுத்துங்கள். [QE][QS]ஒருவேளை சேனைகளின் இறைவனாகிய யெகோவா, [QE][QS2]யோசேப்பின் மீதியானவர்மேல் இரக்கம் காட்டுவார். [QE]
16. [PS]ஆகையால் யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“எல்லா வீதிகளிலும் புலம்பல் உண்டாயிருக்கும். [QE][QS2]பொது இடங்களிலெல்லாம் வேதனையின் அழுகுரல் உண்டாயிருக்கும். [QE][QS]அழுவதற்காக விவசாயிகளும், [QE][QS2]புலம்புவதற்காக புலம்பல் வைப்பவர்களும் அழைப்பிக்கப்படுவார்கள். [QE]
17. [QS]திராட்சைத் தோட்டங்களிலும் புலம்பல் உண்டாயிருக்கும். [QE][QS2]ஏனெனில் நான் உங்களைத் தண்டித்துக்கொண்டு கடந்துபோவேன்” [QE][QS2]என்று யெகோவா சொல்கிறார். [QE]
18. {#1யெகோவாவின் நாள் } [QS]யெகோவாவின் நாளை விரும்புகிற [QE][QS2]உங்களுக்கு ஐயோ கேடு, [QE][QS]யெகோவாவின் நாளை ஏன் விரும்புகிறீர்கள்? [QE][QS2]அந்த நாள் வெளிச்சமாயிராமல் இருளாயிருக்கும். [QE]
19. [QS]ஒரு சிங்கத்திடமிருந்து தப்பிய மனிதன், [QE][QS2]கரடியைச் சந்தித்ததுபோல் அது இருக்கும். [QE][QS]அவன் தன் வீட்டிற்குள் வந்து [QE][QS2]சுவரில் கையை ஊன்றியபோது, [QE][QS2]அவனைப் பாம்பு கடித்ததுபோல் இருக்கும். [QE]
20. [QS]யெகோவாவின் நாள் வெளிச்சமாயிராமல், இருள் நிறைந்ததாய் இருக்குமல்லவோ? [QE][QS2]ஒளிக்கீற்று எதுவுமின்றி காரிருளாயிருக்குமல்லவோ? [QE][PBR]
21. [QS]உங்கள் பண்டிகைகளை நான் வெறுத்து, உதாசீனம் செய்கிறேன்; [QE][QS2]உங்கள் சபைக் கூட்டங்களை என்னால் சகிக்க முடியவில்லை. [QE]
22. [QS]தகன காணிக்கைகளையும், தானிய காணிக்கைகளையும் [QE][QS2]நீங்கள் எனக்குக் கொண்டுவந்தாலும், [QE][QS2]அவற்றை நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன். [QE][QS]சிறப்பான சமாதான காணிக்கையை நீங்கள் கொண்டுவந்தாலும், [QE][QS2]அவற்றைப் பார்க்கவும் மாட்டேன். [QE]
23. [QS]உங்கள் பாடல்களின் சத்தத்தோடு அகன்றுபோங்கள். [QE][QS2]உங்கள் பாடல்களின் இசையை நான் கேட்கமாட்டேன். [QE]
24. [QS]அவற்றிற்குப் பதிலாக நீதி ஆற்றைப்போல் புரண்டோடட்டும். [QE][QS2]நீதி என்றும் வற்றாத நீரோடையைப்போல் ஓடட்டும். [QE][PBR]
25. [QS]இஸ்ரயேல் குடும்பத்தாரே, பாலைவனத்தில் நாற்பது வருடங்களாய் [QE][QS2]நீங்கள் எனக்கு பலிகளையும், [QE][QS2]காணிக்கைகளையும் கொண்டுவந்தீர்களோ? [QE]
26. [QS]ஆனால் நீங்களோ, உங்கள் அரசனின் விக்கிரகத் தேரைத் தூக்கிச் சுமந்தீர்கள். [QE][QS2]உங்களுக்கென செய்த [QE][QS2]விக்கிரகங்களின் கூடாரத்தையும், [QE][QS2]நட்சத்திரத் தெய்வங்களையும் சுமந்துகொண்டு போனீர்கள். [QE]
27. [QS]ஆதலால் நான் உங்களைத் தமஸ்குவுக்கு அப்பால் நாடுகடத்துவேன் என்று, [QE][QS2]சேனைகளின் இறைவன் என்னும் பெயருடைய யெகோவா சொல்கிறார். [QE]