1. {#1இஸ்ரயேலுக்கு எதிரான சாட்சியங்கள் } [PS]இஸ்ரயேல் மக்களே, யெகோவா உங்களுக்கெதிராகக் கூறிய இந்த வார்த்தையைக் கேளுங்கள். எகிப்திலிருந்து நான் கொண்டுவந்த முழுக் குடும்பத்தினருக்கும் எதிராக நான் பேசியதைக் கேளுங்கள். [PE]
2. [QS]“பூமியின் குடும்பங்கள் எல்லாவற்றிலிருந்தும் [QE][QS2]உங்களையே நான் தெரிந்தெடுத்தேன். [QE][QS]உங்கள் அநேக பாவங்களுக்காகவும் [QE][QS2]நான் உங்களைத் தண்டிப்பேன்.” [QE][PBR]
3. [QS]ஒன்றுசேர்ந்து நடப்பதற்கு இருவர் ஒருமனப்படாமலிருந்தால், [QE][QS2]அவர்கள் ஒன்றுசேர்ந்து நடப்பது எப்படி? [QE]
4. [QS]இரை அகப்படாமல் இருக்கும்போது, [QE][QS2]புதருக்குள் இருந்து சிங்கம் கர்ஜிக்குமோ? [QE][QS]தான் ஒன்றும் பிடிக்காமல் இருக்கும்போது, [QE][QS2]அது தன் குகையில் இருந்து உறுமுமோ? [QE]
5. [QS]கண்ணி விரிக்கப்படாத தரையில் பறவை சிக்குமோ? [QE][QS2]பொறியில் ஒன்றும் [QE][QS]சிக்காதிருக்கையிலே, [QE][QS2]பொறி நிலத்திலிருந்து துள்ளுமோ? [QE]
6. [QS]பட்டணத்தில் எக்காளம் முழங்குகையில் [QE][QS2]மக்கள் நடுங்காதிருப்பார்களோ? [QE][QS]பட்டணத்தில் பேராபத்து வரும்போது, [QE][QS2]யெகோவா அல்லவா அதை ஏற்படுத்தினார்? [QE][PBR]
7. [QS]தமது ஊழியர்களான இறைவாக்கினருக்கு [QE][QS2]தமது திட்டத்தை வெளிப்படுத்தாமல் [QE][QS2]ஆண்டவராகிய யெகோவா ஒன்றும் செய்வதில்லை. [QE][PBR]
8. [QS]சிங்கம் கர்ஜித்தது, [QE][QS2]யார் பயப்படாதிருப்பான்? [QE][QS]ஆண்டவராகிய யெகோவா பேசியிருக்கிறார், [QE][QS2]யாரால் இறைவாக்கு சொல்லாமல் இருக்கமுடியும்? [QE][PBR]
9. [QS]அஸ்தோத்தின் கோட்டைகளுக்கும், [QE][QS2]எகிப்தின் கோட்டைகளுக்கும் பிரசித்தப்படுத்துங்கள். [QE][QS]“சமாரியாவின் மலைகளின்மேல் ஒன்றுகூடுங்கள், [QE][QS2]இஸ்ரயேலில் நடக்கும் பெரும் கலவரத்தையும், [QE][QS2]அங்குள்ள மக்களிடையே நடக்கும் ஒடுக்குதலையும் பாருங்கள்.” [QE][PBR]
10. [QS]“சரியானதை எப்படிச் செய்வது என்று அவர்களுக்குத் தெரியாது. [QE][QS2]அவர்கள் கொள்ளைப்பொருட்களையும், [QE][QS]சூறைப்பொருட்களையும் தங்கள் கோட்டைகளில் குவித்து வைக்கிறார்கள்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]
11. [PS]ஆகவே ஆண்டவராகிய யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“பகைவன் ஒருவன் நாட்டை ஆக்கிரமிப்பான். [QE][QS2]அவன் அரண்களை இடித்து, [QE][QS2]உங்கள் கோட்டைகளைக் கொள்ளையிடுவான்.” [QE]
12. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“அப்பொழுது சிங்கத்தின் வாயிலிருந்து ஒரு மேய்ப்பன் [QE][QS2]தன் ஆட்டின் இரு கால் எலும்புகளையோ, [QE][QS2]காதின் துண்டொன்றையோ மீட்டெடுப்பதுபோல் [QE][QS]இஸ்ரயேலர் தப்புவிக்கப்படுவார்கள். [QE][QS2]சமாரியாவில் படுக்கையின் ஓரங்களுடனும், [QE][QS]தமஸ்குவிலுள்ள இருக்கைகளின் மூலைகளுடனும் மட்டுமே [QE][QS2]அவர்கள் தப்புவிக்கப்படுவார்கள்.” [QE]
13. [PS]“இதைக் கேட்டு யாக்கோபின் குடும்பத்திற்கெதிராக நாடு முழுவதும் சாட்சி சொல்லுங்கள்” என்று யெகோவா, சேனைகளின் இறைவனாகிய யெகோவா அறிவிக்கிறார். [PE]
14. [QS]“இஸ்ரயேலின் பாவங்களுக்காக அவர்களைத் தண்டிக்கும் நாளிலே [QE][QS2]பெத்தேலிலுள்ள தெய்வத்தின் மேடைகளை அழிப்பேன். [QE][QS]மேடைகளின் கொம்புகள் வெட்டுண்டு [QE][QS2]தரையில் விழும். [QE]
15. [QS]செல்வந்தர்களின் அழகான வீடுகளை அழிப்பேன். [QE][QS2]குளிர்க்கால வீடுகளை இடிப்பேன். [QE][QS]அவற்றுடன் கோடைகால வீடுகளையும் இடிப்பேன். [QE][QS2]தந்தத்தால் அலங்கரிக்கப்பட்ட வீடுகள் அழிக்கப்படும். அரண்மனைகள் பாழாகிவிடும்” [QE][QS2]என்று யெகோவா அறிவிக்கிறார். [QE]