1. [PS]தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள். [PE][PBR] [PBR]
2. [PS]அவன் சொன்னதாவது: [PE][QS]“யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்; [QE][QS2]எருசலேமிலிருந்து முழங்குகிறார். [QE][QS]மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன. [QE][QS2]கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.” [QE]
3. {#1இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு } [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், [QE][QS]என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QE][QS2]ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே. [QE]
4. [QS]ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன். [QE][QS2]அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும். [QE]
5. [QS]தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன். [QE][QS2]ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து, [QE][QS]பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்; [QE][QS2]ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்” [QE][QS2]என்று யெகோவா சொல்கிறார். [QE]
6. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த [QE][QS2]அநேக பாவங்களின் நிமித்தம், [QE][QS]என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QE][QS2]ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே. [QE]
7. [QS]காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்; [QE][QS2]அது அதன் அரண்களை சுட்டெரிக்கும். [QE]
8. [QS]அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன். [QE][QS2]அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன். [QE][QS]பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும், [QE][QS2]எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்” [QE][QS2]என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார். [QE]
9. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், [QE][QS2]என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QE][QS]ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து, [QE][QS2]சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே. [QE]
10. [QS]தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். [QE][QS2]அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” [QE]
11. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், [QE][QS2]என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QE][QS]இரக்க உணர்வின்றி தன் சகோதரனான [QE][QS2]இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே. [QE][QS]அத்துடன் அவன் கோபம் அடங்காமல், [QE][QS2]அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. [QE]
12. [QS]தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். [QE][QS2]அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” [QE]
13. [PS]யெகோவா சொல்வது இதுவே: [PE][QS]“அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், [QE][QS2]நான்கு பாவங்களுக்காகவும், [QE][QS]என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QE][QS2]தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. [QE]
14. [QS]ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன். [QE][QS2]அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். [QE][QS]அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும், [QE][QS2]புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும். [QE]
15. [QS]அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். [QE][QS2]அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்” [QE][QS2]என்று யெகோவா சொல்கிறார். [QE]