1. தெக்கோவா ஊர் மேய்ப்பருக்குள் இருந்த ஆமோஸ், பூமியதிர்ச்சி உண்டாவதற்கு இரண்டு வருடங்களுக்கு முன்னர், இஸ்ரயேலரைக் குறித்து அவன் தரிசனங்கண்டு சொன்ன வார்த்தைகள்: அக்காலத்தில் உசியா, யூதாவுக்கு அரசனாகவும், யோவாசின் மகன் யெரொபெயாம் இஸ்ரயேலுக்கு அரசனாகவுமிருந்தார்கள். [PS]
2. அவன் சொன்னதாவது: [QBR] “யெகோவா சீயோனிலிருந்து கர்ஜிக்கிறார்; [QBR2] எருசலேமிலிருந்து முழங்குகிறார். [QBR] மேய்ப்பர்களின் மேய்ச்சல் நிலங்கள் உலர்ந்து போகின்றன. [QBR2] கர்மேல் மலையுச்சியும் காய்ந்து போகிறது.” [PS]
3. {இஸ்ரயேலரின் அயலவர்மேல் நியாயத்தீர்ப்பு} [PS] யெகோவா சொல்வது இதுவே: [QBR] “தமஸ்குவினுடைய மூன்று பாவங்களுக்காகவும் நான்கு பாவங்களுக்காகவும், [QBR] என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QBR2] ஏனென்றால் அவர்கள் கீலேயாத்தை இரும்பு பற்களுள்ள கருவிகளால் போரடித்தார்களே. [QBR]
4. ஆசகேலின் வீட்டின்மேல் நெருப்பை அனுப்புவேன். [QBR2] அது அவனுடைய மகன் பெனாதாதின் அரண்களையும் எரித்துப்போடும். [QBR]
5. தமஸ்குவின் வாசலை நான் உடைப்பேன். [QBR2] ஆவேன் பள்ளத்தாக்கிலுள்ள அரசனை அழித்து, [QBR] பெத் ஏதேனில் செங்கோல் பிடிப்பவனையும் அழிப்பேன்; [QBR2] ஆராமின் மக்களை கீருக்கு நாடுகடத்துவேன்” [QBR2] என்று யெகோவா சொல்கிறார். [PE][PS]
6. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “காசா பட்டணம் திரும்பதிரும்ப செய்த [QBR2] அநேக பாவங்களின் நிமித்தம், [QBR] என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QBR2] ஏனெனில் அவர்கள் முழுச்சமுதாயத்தையும் சிறைப்பிடித்து ஏதோமியரிடம் விற்றார்களே. [QBR]
7. காசாவின் மதில்களின்மேல் நெருப்பை அனுப்புவேன்; [QBR2] அது அதன் அரண்களை சுட்டெரிக்கும். [QBR]
8. அஸ்தோத்தின் அரசனை நான் அழிப்பேன். [QBR2] அஸ்கலோனில் செங்கோல் பிடிப்பவனையும் ஒழிப்பேன். [QBR] பெலிஸ்தியரில் கடைசியாய் இருப்பவன் சாகும்வரைக்கும், [QBR2] எக்ரோனுக்கெதிராக என் கரத்தை நீட்டுவேன்” [QBR2] என்று ஆண்டவராகிய யெகோவா சொல்கிறார். [PE][PS]
9. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “தீருவினுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், [QBR2] என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QBR] ஏனென்றால் சகோதர உடன்படிக்கையை உதாசீனம் செய்து, [QBR2] சிறைப்பிடிக்கப்பட்ட முழுச்சமுதாயத்தையும் ஏதோமுக்கு விற்றார்களே. [QBR]
10. தீருவின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். [QBR2] அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” [PE][PS]
11. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “ஏதோமுடைய மூன்று பாவங்களுக்காகவும், நான்கு பாவங்களுக்காகவும், [QBR2] என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QBR] இரக்க உணர்வின்றி தன் சகோதரனான [QBR2] இஸ்ரயேலை வாளுடன் துரத்திச் சென்றானே. [QBR] அத்துடன் அவன் கோபம் அடங்காமல், [QBR2] அவனுடைய மூர்க்கத்தை நித்திய காலமாக வைத்திருக்கிறானே. [QBR]
12. தேமானின் மதில்கள்மேல் நெருப்பை அனுப்புவேன். [QBR2] அது போஸ்றாவின் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும்.” [PE][PS]
13. யெகோவா சொல்வது இதுவே: [QBR] “அம்மோன் மக்களின் மூன்று பாவங்களுக்காகவும், [QBR2] நான்கு பாவங்களுக்காகவும், [QBR] என் கோபத்தை நான் விலக்கமாட்டேன். [QBR2] தன் எல்லைகளை விரிவாக்கும்படி கீலேயாத்தின் கர்ப்பவதிகளைக் கீறிப்போட்டார்களே. [QBR]
14. ரப்பாவின் மதிலுக்கு நெருப்பு மூட்டுவேன். [QBR2] அது அதன் அரண்களையெல்லாம் சுட்டெரிக்கும். [QBR] அது யுத்தநாளின் முழக்கத்தின் மத்தியிலும், [QBR2] புயல் நாளின் சூறாவளியின் மத்தியிலும் நடக்கும். [QBR]
15. அதன் அரசனும் நாடுகடத்தப்படுவான். [QBR2] அவனும் அவனுடைய அதிகாரிகளும் ஒன்றாக சிறைப்படுவார்கள்” [QBR2] என்று யெகோவா சொல்கிறார். [PE]