1. {தாவீதின் நன்றிப்பாடல்} [PS] யெகோவா அவனை எல்லாப் பகைவரின் கைகளிலிருந்தும் சவுலின் கையிலிருந்தும் விடுவித்தபோது இப்பாடலின் வார்த்தைகளை தாவீது யெகோவாவுக்குப் பாடினான்.
2. அவன் சொன்னது: [QBR] “யெகோவா என் கன்மலை, என் கோட்டை, என்னை விடுவிக்கிறவர்; [QBR2]
3. என் இறைவன் நான் தஞ்சம் அடையும் என் கன்மலை, [QBR2] என் கேடயம், என் மீட்பின் கொம்பு. [QBR] என் அரண், என் அடைக்கலம், [QBR2] நீர் என்னை வன்முறையாளர்களிடமிருந்து காப்பாற்றுகிற என் இரட்சகர்.
4. “துதிக்கப்படத்தக்கவரான யெகோவாவை நோக்கி நான் கூப்பிடுகிறேன்; [QBR2] என் பகைவரிடமிருந்து நான் காப்பாற்றப்படுகிறேன். [QBR]
5. மரண அலைகள் என்னைச் சூழ்ந்துகொண்டன, [QBR2] அழிவின் அலைகள் என்னை அமிழ்த்திவிட்டன. [QBR]
6. பிரேதக் குழியின் கயிறுகள் என்னைச் சூழ்ந்துகொண்டன; [QBR2] மரணத்தின் கண்ணிகள் என்னை எதிர்த்து வந்தன.
7. “என் துயரத்தில் நான் யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டேன். [QBR2] என் இறைவனை நோக்கிக் கூப்பிட்டேன். [QBR] அவர் தமது ஆலயத்திலிருந்து என் குரலைக் கேட்டார். [QBR2] என் அழுகுரல் அவர் செவிகளில் எட்டியது. [QBR]
8. பூமி நடுங்கி அதிர்ந்து, [QBR2] வானத்தின் அஸ்திபாரங்கள் அசைந்தன; [QBR2] அவர் கோபமடைந்ததால் அவை நடுங்கின. [QBR]
9. அவருடைய நாசியிலிருந்து புகை எழும்பிற்று; [QBR2] அவருடைய வாயிலிருந்து சுட்டெரிக்கும் நெருப்புப் புறப்பட்டது; [QBR2] நெருப்புத் தழல் அதிலிருந்து தெறித்தன. [QBR]
10. அவர் வானங்களைப் பிரித்து, கீழே இறங்கினார்; [QBR2] கார்மேகங்கள் அவருடைய பாதங்களின்கீழ் இருந்தன. [QBR]
11. அவர் கேருபீனின்மேல் ஏறிப் பறந்தார்; [QBR2] அவர் காற்றின் சிறகுகளைக்கொண்டு பறந்தார். [QBR]
12. அவர் இருளைத் தன்னைச் சுற்றி ஒரு கூடாரமாக்கினார். [QBR2] வானத்தின் இருண்ட மழைமேகங்கள் அவரைச் சுற்றியிருந்தது. [QBR]
13. அவரின் சமுகத்தின் பிரகாசத்திலிருந்து [QBR2] மின்னலின் தாக்குதல் வீசுண்டன. [QBR]
14. யெகோவா வானத்திலிருந்து இடியை முழக்கினார்; [QBR2] மகா உன்னதமானவரின் குரல் எதிரொலித்தது. [QBR]
15. அவர் தமது அம்புகளை எய்து பகைவரைச் சிதறடித்தார்; [QBR2] மின்னல் கீற்றுக்களை அனுப்பி, அவர்களை முறியடித்தார். [QBR]
16. யெகோவாவினுடைய நாசியிலிருந்து வந்த மூச்சின் தாக்கத்தாலும் [QBR2] அவரின் கண்டிப்பினாலும் [QBR] கடல்களின் அடிப்பரப்பு வெளிப்பட்டன; [QBR2] பூமியின் அஸ்திபாரங்கள் வெளியே தெரிந்தன.
17. “அவர் என்னை உயரத்திலிருந்து எட்டிப் பிடித்தார்; [QBR2] ஆழமான தண்ணீரிலிருந்து என்னை வெளியே தூக்கினார். [QBR]
18. அவர் சக்திவாய்ந்த என் பகைவனிடமிருந்தும் [QBR2] என்னிலும் அதிகம் பலமான எதிரிகளிடமிருந்தும் என்னைத் தப்புவித்தார். [QBR]
19. அவர்கள் என்னுடைய பேராபத்தின் நாளிலே, எனக்கெதிராய் எழுந்தார்கள்; [QBR2] ஆனால் யெகோவா என் ஆதரவாயிருந்தார். [QBR]
20. அவர் என்னை விசாலமான ஒரு இடத்திற்கு வெளியே கொண்டுவந்தார்; [QBR2] அவர் என்னில் பிரியமாய் இருந்தபடியால் என்னைத் தப்புவித்தார்.
21. “யெகோவா என் நீதிக்கு ஏற்றபடி என்னை நடத்தியிருக்கிறார்; [QBR2] என் கைகளின் சுத்தத்திற்கு தக்கதாய், அவர் எனக்குப் பலனளித்திருக்கிறார். [QBR]
22. ஏனெனில் நான் யெகோவாவினுடைய வழிகளை கைக்கொண்டிருக்கிறேன்; [QBR2] என் இறைவனைவிட்டு விலகி நான் குற்றம் செய்யவில்லை. [QBR]
23. அவருடைய நீதிநெறிகள் அனைத்தும் எனக்கு முன்பாக இருக்கின்றன; [QBR2] அவருடைய விதிமுறைகளிலிருந்து நான் விலகவேயில்லை. [QBR]
24. நான் அவருக்கு முன்பாக குற்றமற்றவனாக இருந்து, [QBR2] பாவத்திலிருந்து என்னை விலக்கிக் காத்துக்கொண்டேன். [QBR]
25. யெகோவா என் நீதிக்கு ஏற்றவாறு பலனளித்திருக்கிறார்; [QBR2] அவருடைய பார்வையில் நான் குற்றமற்றவனாயிருந்தேன்.
26. “உண்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மை உண்மையுள்ளவராகவே காண்பிக்கிறீர்; [QBR2] உத்தமர்களுக்கு நீர் உம்மை உத்தமராகவே காண்பிக்கிறீர். [QBR]
27. தூய்மையுள்ளவர்களுக்கு நீர் உம்மைத் தூய்மையுள்ளவராகவேக் காண்பிக்கிறீர்; [QBR2] ஆனால் கபடமுள்ளவர்களுக்கோ நீர் உம்மை விவேகமுள்ளவராய்க் காண்பிக்கிறீர். [QBR]
28. நீர் தாழ்மையுள்ளோரைக் காப்பாற்றுகிறீர்; [QBR2] ஆனால் உம்முடைய கண்கள் பெருமையுள்ளவர்களைச் சிறுமைப்படுத்தும். [QBR]
29. யெகோவாவே, நீர் என் விளக்கு; [QBR2] யெகோவா என் இருளை வெளிச்சமாக்குகிறார். [QBR]
30. உமது உதவியுடன் என்னால் ஒரு படையை எதிர்த்து முன்னேற முடியும்; [QBR2] என் இறைவனுடன் ஒரு மதிலைத் தாண்டுவேன்.
31. “இறைவனுடைய வழி முழு நிறைவானது: [QBR2] யெகோவாவின் வார்த்தையோ குறைபாடற்றது; [QBR2] அவரிடத்தில் தஞ்சமடைவோர் அனைவருக்கும் அவர் கேடயமாயிருக்கிறார். [QBR]
32. யெகோவாவைத்தவிர இறைவன் யார்? [QBR2] நமது இறைவனேயல்லாமல் வேறு கன்மலை யார்? [QBR]
33. இறைவன் எனக்கு பெலமுள்ள கோட்டையாய் இருந்து, [QBR2] என் வழியை குறைவற்றதாய் ஆக்குகிறார். [QBR]
34. அவர் என் கால்களை மானின் கால்களைப் போல துரிதப்படுத்தி, [QBR2] உயர்ந்த இடங்களில் என்னை நிற்கப்பண்ணுகிறார். [QBR]
35. யுத்தம் செய்ய என் கைகளைப் பயிற்றுவிக்கிறார்; [QBR2] என் கரங்களால் ஒரு வெண்கல வில்லையும் வளைக்க முடியும். [QBR]
36. நீர் உமது இரட்சிப்பை எனக்கு கேடயமாகத் தந்தீர், [QBR2] உமது உதவி என்னைப் பெரியவனாக்குகிறது. [QBR]
37. என் கணுக்கால்கள் புரளாதபடி, [QBR2] நான் நடக்கும் பாதையை நீர் அகலமாக்குகிறீர்.
38. “நான் என் பகைவரை துரத்திச்சென்று, அவர்களை அழித்துப்போட்டேன்; [QBR2] அவர்கள் முற்றிலும் அழியும்வரை, நான் திரும்பி வரவில்லை. [QBR]
39. அவர்கள் எழுந்திருக்காதபடி நான் அவர்களை முழுவதும் நசுக்கினேன்; [QBR2] அவர்கள் என் காலடியில் விழுந்தார்கள். [QBR]
40. யுத்தம் செய்வதற்கான வல்லமையை நீர் எனக்குத் தரிப்பித்தீர்; [QBR2] என் எதிரிகளை எனக்கு முன்பாகத் தாழ்த்தினீர். [QBR]
41. நீர் என் பகைவரை புறமுதுகிட்டு ஓடச்செய்தீர்; [QBR2] நான் அவர்களை அழித்தேன். [QBR]
42. அவர்கள் உதவிகேட்டு கூப்பிட்டார்கள், [QBR2] ஆனால் அவர்களைக் காப்பாற்ற ஒருவருமே இருக்கவில்லை; [QBR2] யெகோவாவை நோக்கிக் கூப்பிட்டார்கள், அவரோ பதில் கொடுக்கவில்லை. [QBR]
43. நான் அவர்களை அடித்துப் பூமியின் புழுதியைப்போலாக்கினேன்; [QBR2] நான் அவர்களை மிதித்து வீதியிலுள்ள சேற்றைப்போல் வெளியே வாரியெறிந்தேன்.
44. “நீர் மக்களின் தாக்குதல்களிலிருந்து என்னை விடுவித்திருக்கிறீர்; [QBR2] நாடுகளுக்கு என்னைத் தலைவனாக வைத்திருக்கிறீர். [QBR] நான் அறியாத மக்கள் எனக்கு கீழ்ப்பட்டிருக்கிறார்கள். [QBR2]
45. வேறுநாட்டைச் சேர்ந்தவரும் எனக்கு முன்பாக அடங்கி ஒடுங்குகிறார்கள்; [QBR2] அவர்கள் என்னைக் குறித்துக் கேள்விப்பட்டவுடனே எனக்குக் கீழ்ப்படிகிறார்கள். [QBR]
46. அவர்கள் அனைவரும் மனந்தளர்ந்து, [QBR2] தங்கள் அரண்களிலிருந்து நடுக்கத்துடன் வருகிறார்கள்.
47. “யெகோவா வாழ்கிறார்! என் கன்மலையானவருக்குத் துதி உண்டாவதாக! [QBR2] என் கன்மலையும் இரட்சகருமாகிய இறைவன் உயர்த்தப்படுவாராக! [QBR]
48. எனக்காகப் பழிவாங்கும் இறைவன் அவரே, [QBR2] நாடுகளை எனக்குக்கீழ் வைக்கிறவர் அவரே. [QBR2]
49. அவர் என்னை என் பகைவரிடமிருந்து விடுவித்தார். [QBR] யெகோவாவே நீர் என்னை என் எதிரிகளுக்கு மேலாக உயர்த்தியிருக்கிறீர். [QBR2] என்னை வன்முறையாளர்களிடமிருந்து பாதுகாத்தீர். [QBR]
50. ஆகையால் யெகோவாவே, நாடுகளுக்கு மத்தியில் நான் உம்மைத் துதிப்பேன்; [QBR2] உமது பெயருக்குத் துதிகள் பாடுவேன்.
51. “அவர் தாம் ஏற்படுத்திய அரசனுக்கு மாபெரும் வெற்றிகளைக் கொடுக்கிறார்; [QBR2] அவர் தாம் அபிஷேகம் பண்ணின தாவீதுக்கும் அவனுடைய சந்ததிகளுக்கும் [QBR2] தமது உடன்படிக்கையின் அன்பை என்றைக்கும் காண்பிக்கிறார்.” [PE]