1. [QS]இளவரசியே! காலணிகள் அணிந்த உன் பாதங்கள் [QE][QS]மிகவும் அழகாக இருக்கிறது; [QE][QS]உன் இடுப்பின் வடிவு திறமைமிக்க [QE][QS]தொழிற்காரர்களின் வேலையாகிய அணிகலன்போல் இருக்கிறது. [QE]
2. [QS]உன் தொப்புள் திராட்சைரசம் நிறைந்த வட்டவடிவக் கிண்ணம்போல் இருக்கிறது; [QE][QS]உன் வயிறு லீலிமலர்கள் சூழ்ந்த கோதுமைக் குவியல்போல் இருக்கிறது. [QE]
3. [QS]உன் இரண்டு மார்பகங்களும் [QE][QS]வெளிமானின் இரட்டைக்குட்டிகளுக்குச் சமானமாக இருக்கிறது. [QE]
4. [QS]உன் கழுத்து யானைத்தந்தத்தினால் செய்த கோபுரத்தைப்போலவும், [QE][QS]உன் கண்கள் எஸ்போனிலே பத்ரபீம் [QE][QS]வாசலின் அருகிலிருக்கும் குளங்களைப்போலவும், [QE][QS]உன் மூக்கு தமஸ்குவின் திசையை நோக்கும் [QE][QS]லீபனோனின் கோபுரத்தைப்போலவும் இருக்கிறது. [QE]
5. [QS]உன் தலை கர்மேல் மலையைப்போல் இருக்கிறது; [QE][QS]உன் தலைமுடி இரத்தாம்பரமயமாக இருக்கிறது; [QE][QS]ராஜா உன் கூந்தலின் அழகில் மயங்கி நிற்கிறார். [QE]
6. [QS]மனமகிழ்ச்சியை உண்டாக்கும் என் பிரியமே! [QE][QS]நீ எவ்வளவு அழகுமிகுந்தவள், [QE][QS]நீ எவ்வளவு இன்பமுள்ளவள். [QE]
7. [QS]உன் உயரம் பனைமரத்தைப்போலவும், [QE][QS]உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும் இருக்கிறது. [QE]
8. [QS]நான் பனைமரத்தில் ஏறி, [QE][QS]அதின் மடல்களைப் பிடிப்பேன் என்றேன்; [QE][QS]இப்பொழுதும் உன் மார்பகங்கள் திராட்சைக்குலைகள்போலவும், [QE][QS]உன் மூக்கின் சுவாசத்தின் வாசனை கிச்சிலிப்பழங்கள்போலவும் இருக்கிறது. [QE]
9. [QS]13 உன் முத்தங்கள், என் நேசர் குடிக்கும்போது மெதுவாக இறங்குகிறதும், [QE][QS]உறங்குகிறவர்களின் உதடுகளைப் பேசச்செய்கிறதுமான, [QE][QS]நல்ல திராட்சைரசத்தைப்போல் இருக்கிறது. [QE][PS][PS]*மணவாளி*[PE] [PE]
10. [QS]நான் என் நேசருடையவள், [QE][QS]அவருடைய பிரியம் என்மேல் இருக்கிறது. [QE]
11. [QS]வாரும் என் நேசரே! வயல்வெளிக்குப் போய், [QE][QS]கிராமங்களில் தங்குவோம். [QE]
12. [QS]அதிகாலையிலே திராட்சைத்தோட்டங்களுக்குப் போவோம்; [QE][QS]திராட்சைக்கொடி துளிர்த்து அதின் பூ மலர்ந்ததோ என்றும், [QE][QS]மாதுளம்செடிகள் பூ பூத்ததோ என்றும் பார்ப்போம்; [QE][QS]அங்கே என் நேசத்தின் உச்சிதங்களை உமக்குத் தருவேன். [QE]
13. [QS]தூதாயீம் பழம்[* மாதுளம்செடிகள், இனிமையும் வாசனையுமான ஒரு செடி, இதின் பழம் பால் உணர்வை, தூண்டி மலட்டுத்தன்மை நீக்க கூடியது என்று கருதப்படுகிறது. ஆதி 30: 14-16. ] வாசனை வீசும்; [QE][QS]நமது வாசல்களின் அருகில் புதியவைகளும் பழையவைகளுமான சகலவித அருமையான பழங்களும் உண்டு; [QE][QS]என் நேசரே! அவைகளை உமக்கு வைத்திருக்கிறேன். [QE]